உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை குண்டுவெடிப்பு கைதி அல் -- உம்மா பாஷா உயிரிழப்பு

கோவை குண்டுவெடிப்பு கைதி அல் -- உம்மா பாஷா உயிரிழப்பு

கோவை : கோவையில், 1998ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு சந்திப்பில் பேச இருந்த மேடைக்கு அருகே குண்டு வெடித்தது. தொடர்ந்து, கோவையில், 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. அதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 58 பேர் கொல்லப்பட்டனர்; 231 பேர் படுகாயம் அடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தை விசாரிக்கும் வழக்கு, கோவை மாநகர போலீசிடம் இருந்து, சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணைக்கு பின், தடை செய்யப்பட்ட அல் -- உம்மா இயக்க நிறுவனர் பாஷா உட்பட, 166 பேரை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து, 26 ஆண்டுகளாக பாஷா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுகளாக சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக, சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலக்குறைவை சுட்டிக்காட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஜாமின் வழங்கினார்.ஏப்., 18ல் ஜாமினில் வந்த அவர், குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவ்வப்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன், பாஷாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பீளமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடல் உக்கடம் ரோஸ் கார்டன், அல் அமீன் கார்டனில் உள்ள, அவரது மகன் சித்திக் அலி வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இன்று மாலை உக்கடத்தில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு, பூ மார்க்கெட் அருகே கபர்ஸ்தானில் பாஷா உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி, 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

karupanasamy
டிச 17, 2024 14:31

இசுலாமிய பயங்கரவாதியின் சவ ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு பயங்கரவாதிகள் மரணித்தால் நாட்டுமக்கள் மகிழ்வார்கள்.


SIVA
டிச 17, 2024 08:27

அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் கோவை பொருளாதாரத்தில் ஐந்து ஆண்டுகள் பின்னோகி சென்றது ....


Barakat Ali
டிச 17, 2024 08:18

இஸ்லாத்துக்கே களங்கம் ..... இவனைப் போன்றவர்களைக் கொண்டாடுவது இஸ்லாத்தின் அழிவுக்கு நிச்சயம் வழிவகுக்கும் .....


Muralidharan raghavan
டிச 17, 2024 09:47

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் சவ ஊர்வலத்திற்கு வரும் கூட்டத்தை பாருங்கள். இது போன்ற ஆட்களுக்கு கூட்டம் கூடும்


நிக்கோல்தாம்சன்
டிச 17, 2024 06:39

கொலைகாரனுக்கு மரியாதை கொடுக்கும் இழி நிலை


நிக்கோல்தாம்சன்
டிச 17, 2024 06:34

எதற்கு அவன் தலையில் கருப்பு நிற தொப்பி ஓஹோ அந்த மிருகத்தை நினைவு படுத்தவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை