உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2030ல் கோவையின் ஏற்றுமதி ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும்; ஐ.டி.எப்., அளிக்கிறது நம்பிக்கை

2030ல் கோவையின் ஏற்றுமதி ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும்; ஐ.டி.எப்., அளிக்கிறது நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: சரக்கு மற்றும் சேவைத் துறை என பன்முக ஏற்றுமதி வளர்ச்சியைப் பெற்று வரும் கோவை, ஆண்டுக்கு 10 முதல் 12 சதவீத வளர்ச்சியுடன், வரும் 2030ல் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதி என்ற அளவை எட்டும் என, இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) நம்பிக்கை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, ஐ.டி.எப்., கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது: கடந்த நிதியாண்டில் தமிழகத்தின் ஏற்றுமதி ரூ.4.40 லட்சம் கோடி. இது 22 சதவீத வளர்ச்சியாகும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மேற்கு மாவட்டங்கள் தமிழக ஏற்றுமதியில் 26 சதவீத பங்களிப்பைச் செய்துள்ளன; சுமார் ரூ. 1.15 லட்சம் கோடி.ஜவுளி, உற்பத்தித் துறை, மென்பொருள் என பன்முக தொழில் நகராக கோவை இருந்து வந்திருக்கிறது. மென்பொருள் ஏற்றுமதி ரூ.8,000 கோடியைத் தாண்டியிருக்கும் என கணித்துள்ளோம். சரக்கு ஏற்றுமதி மதிப்புடன் இதைச்சேர்த்தால், கோவையின் ஏற்றுமதி ஏறத்தாழ 40 ஆயிரம் கோடியை எட்டியிருக்கிறது.

கோவை ஏன் தேர்வு

புனேவுக்கு நிகரான கவனத்தை ஈர்த்து வருகிறது கோவை. புனேவின் ஏற்றுமதி ரூ. 1.2 லட்சம் கோடியாக உள்ளது. இரண்டாம் நிலை நகரங்களில் தொழில்முனைவுத் திறன், அதிக இன்ஜி., பட்டதாரிகள், பன்முக கலாசாரம், வேலைவாய்ப்புத் திறனில் பாலின சமத்துவம், திறன் மிகு மனிதவளம் என, பல்வேறு காரணங்களால் கோவையை பல்வேறு நிறுவனங்களும் தேர்வு செய்கின்றன.120 வருட பாரம்பரியம் கொண்ட ஜவுளித்துறை மட்டுமல்லாது, காற்றாலை, கியர்பாக்ஸ் , நவீன இன்ஜினியரிங் பொருட்கள்,அதி நவீன கம்ப்ரெஸர்கள் உட்பட மிகத் துல்லியமான உபகரணங்களை உருவாக்கும் கோவையின் இன்ஜி., திறன், உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இன்ஜி., உற்பத்தித் துறை உத்வேகம் பெற்றுள்ளது. அடுத்தகட்டமாக ஐ.டி., துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது.

ஏற்றுமதியும் அதிகரிப்பு

நேரடி ஏற்றுமதி, ஓ.இ. எம்.,களால் மறைமுக ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. தென்னை நார் சார்ந்து ரூ.1,400 கோடி ஏற்றுமதி, வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் என, பல்வேறு துறை சார்ந்து கோவை வளர்கிறது. ஏற்றுமதிக்கான சிறந்த கட்டமைப்பைக் கொண்டுள்ள மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சி அடுத்த 5,6 ஆண்டுகளுக்கு மிகச் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.சைனா பிளஸ் ஒன், யூரோப் பிளஸ் ஒன் என வாய்ப்புகள் வருகின்றன. இந்திய அரசு தாராள வர்த்தக ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு வருகிறது. யூ.கே., உடன் ஒப்பந்தம் கையொப்பமாகி விட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்திய அரசு பேசி வருகிறது. இவையும் அமலுக்கு வந்தால், வாய்ப்புகள் அதிகரித்து, குறைந்தது ஆண்டுக்கு 10 முதல் 12 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேற்கு மாவட்டங்கள் பெறும்.இந்த அடிப்படையில் கணக்கிட்டால், கோவையின் பொருட்கள் ஏற்றுமதி வரும், 2030ல் ரூ.53 ஆயிரம் கோடி வரை உயர வாய்ப்பு இருக்கிறது. மேற்கு மாவட்டங்களின் பொருட்கள் ஏற்றுமதி ரூ.2 லட்சம் வரை எட்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.120 வருட பாரம்பரியம் கொண்ட ஜவுளித்துறை மட்டுமல்லாது, காற்றாலை கியர்பாக்ஸ் , நவீன இன்ஜினியரிங் பொருட்கள்,அதி நவீன கம்ப்ரெஸர்கள் உட்பட மிகத் துல்லியமான உபகரணங்களை உருவாக்கும் கோவையின் இன்ஜி., திறன், உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இன்ஜி., உற்பத்தித் துறை உத்வேகம் பெற்றுள்ளது. அடுத்தகட்டமாக ஐ.டி., துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

krishnan
ஜூன் 29, 2025 17:53

Covai can do better in software . kinathu kadavu ,udumalpet should be improved further


R Dhasarathan
ஜூன் 29, 2025 15:59

முதலில் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். உள்நாட்டு மக்களை தவிக்க விட்டு ஏற்றுமதி செய்வது மக்களை கொள்வதற்கு சமம்


Ramesh Sargam
ஜூன் 29, 2025 13:16

இந்த சாதனைக்கும் திமுக தான் காரணம் என்று முதல்வர் தம்பட்டம் அடித்துக்கொண்டு தற்பெருமை பேசுவார். சாதனைக்கு காரணம் அங்கு தொழில்புரிவோர்கள்.


Thravisham
ஜூன் 30, 2025 13:46

மத்திய அரசாங்கம் துணையின்றி வெளிநாட்டு முதலீடுகள் வருவது கடினம்.


முக்கிய வீடியோ