உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கூச்சல் போடாமல் ஓட்டு சேகரியுங்கள்

 கூச்சல் போடாமல் ஓட்டு சேகரியுங்கள்

வி .சி.க., தலைவர் திருமாவளவன், தன் கட்சி இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சியினருக்கு ஓட்டு சேகரிக்க, 10 அல்லது 15 ஓட்டுச்சாவடிகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், வாக்காளர்களை சந்தித்து, நமது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். கூச்சல் போடக்கூடாது; விசில் அடிக்கக் கூடாது. கவனமாக இருந்து, பிற சமூகத்தினரின் நன்மதிப்பை பெற்று ஓட்டுகளை சேகரிக்க வேண்டும். 'போடுங்கம்மா ஓட்டு, பானை சின்னத்தை பார்த்து' என்ற கோஷம் மட்டும் தான், நாம் கற்றுக் கொண்டது. அது மட்டும் தேர்தல் வேலை இல்லை. ஒவ்வொரு வீடாக சென்று, வாக்காளர்களை சந்தித்து, அவர்களின் உள்ளத்தை வென்றெடுக்க வேண்டும். பரவாயில்லையே, இவருக்கு ஓட்டு போடலாம் என அவர்கள் நினைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

இருளப்பன்
ஏப் 19, 2026 19:38

குறிபிட்ட சாதி கட்சியினருக்கு பிற சமூகத்தினரின் ஓட்டு வேணுமா ?


D Natarajan
ஏப் 19, 2026 11:19

குருமா சாப்பிட்டு விட்டு வோட்டு சேகரிக்கவும்


Mani . V
ஏப் 19, 2026 06:13

ஆமாம், இப்பொழுது கூச்சல் போடாமல் ஓட்டு சேகரியுங்கள். தேர்தலுக்குப் பிறகு வன்முறைகளில் ஈடுபட்டுக் கொள்ளலாம்.


சமீபத்திய செய்தி