உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; கோவையில் பாஜ தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; கோவையில் பாஜ தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜ சார்பில் இன்று (நவ., 03) மாலை கோவையில் தீப்பந்தம் ஏந்தி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oha0jmzp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு (நவ.,02) தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தீப்பந்தம் ஏந்தி

கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, தமிழக பாஜ சார்பில் இன்று (நவ., 03) மாலை கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜவினர் தீப்பந்தம் ஏந்தி வந்தனர். பிற மாவட்டங்களில் நாளை மறுநாள் தமிழக பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இது குறித்து நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கோவை விமான நிலையம் பின்புறம் 19 வயது முதலாம் ஆண்டு படிக்கிற பெண், அவர் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, 3 பேர் அந்த பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.கோவையில் மாணவிக்கு கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இது, எல்லா பெற்றோர்களையும் கண்கலங்க வைப்பதோடு, பதைபதைக்கவும் வைக்கிறது. நாளை மறுதினம் 5ம் தேதி பிற மாவட்டங்களிலும் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போகிறோம். பாஜ கட்சி என்றைக்கும், பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறது. எல்லா விஷயங்களிலும் நாங்கள் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆதரவாகவும் இருப்போம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Anantharaman
நவ 04, 2025 07:57

பாலியல்,கொடுமைக்குக் காரணம் ஆணாதிக்கம் இல்லை. குடிப்பழக்கம் திமுக ஆட்சி குடிகாரர்கள் மட்டும் உருவாக்கவில்லை, கயவர்களையும் குடிப் பழக்கத்தால் ஊக்குவித்து சொத்து சேர்க்கிறது. ஒவ்வொரு திமுக தொண்டனும் உறுப்பினனும் அயோக்ய ராஸ்கல்ஸ்.


SUBBU,MADURAI
நவ 04, 2025 07:31

எதுக்கு ஆள் இல்லாத ஒதுக்குப் புறத்துக்கு போக வேண்டும்? இவர்களுக்கு எல்லாம் பாவம் பாத்தா நமக்குதான் ஆறு மாத பாவம் பிடிக்கும்.


RAAJ68
நவ 03, 2025 22:40

வீட்டில் வளர்த்து சரி இல்லை. எதற்கு விமான நிலையத்தின் பின்புறம் தனியாக ஆண்ட நண்பருடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். தங்களுக்கு தாங்களே ஆபத்தை வரவழைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் இனிமேலாவது விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.


Barakat Ali
நவ 03, 2025 21:32

சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிதே மிஸ்டர் இரும்புக்கரம் ???? எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா இது ????


T.sthivinayagam
நவ 03, 2025 21:13

பெண்கள் பாலியல் பிரச்சனையில் சிக்கி சிரமப்படுவதை வைத்து அரசியல் செய்யவது வெட்க கேட்காது என்று இந்துக்கள் கூறுகின்றனர்.


SUBBU,MADURAI
நவ 04, 2025 03:26

உனக்கு சொந்தமா கருத்து போட வராதா? அவர்கள் கூறுகிறார்கள் இவர்கள் சொன்னார்கள் என்றே உன் வன்ம கருத்தை பதிவிடுகிறாய்


எஸ் எஸ்
நவ 03, 2025 20:38

இப்போது அதிமுக ஆட்சியில் இருந்தால் எல்லா டிவி சேனல்களிலும் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும்


T.sthivinayagam
நவ 03, 2025 21:10

இது ஒரு பொழப்பா.


SUBBU,MADURAI
நவ 04, 2025 03:28

முதலில் உன் பெயரை ஒழுங்கா எழுதுடா...


ஜெய்ஹிந்த்புரம்
நவ 03, 2025 20:27

பொதுவாக வடமாநிலத்திலிருந்து வந்தவர்கள் இந்த செயல்களில் ஈடுபட்டு ஓடி ஒளவது வழக்கமாக உள்ளது. அவர்களை விசாரணைக்கு அழைத்து விசாரித்தால் வடமாநில தொழிலாளர்களை துன்புறுத்துகிறார்கள் என்று பாஜக தலைமை மேடையில் பேசுவார்கள்.


D.Ambujavalli
நவ 03, 2025 19:04

கல்லூரி வளாகம், விமான நிலையம் எந்த இடத்தின் பின்புறத்திலும்தான் ஆண் நண்பருடன் சந்திக்க வேண்டுமா? தங்கள் பாதுகாப்புக்குப் பின் தானே நட்பு? அதுவும் இரவில்தான் இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன என்று தெரிந்து கூட இதையே செய்வானேன்


Mr Krish Tamilnadu
நவ 03, 2025 18:53

இங்கு பேசப்படுவது இரவு நேர காவல்துறையின் ரோந்து எங்கே?. காவல்துறையின் கவனமின்மை, சமூக விரோத செயல்கள் இப்போது துணிவாக நடத்தேறுகிறது. அதற்கு அடுத்த மது, போதை பொருள் நடமாட்டம், எடுத்து கொள்வதால் ஒரு கண்மூடித்தனமாக பலத்தை அந்த சமூக விரோத நபர்களுக்கு தருகிறது. அதற்கு அடுத்து ஒவ்வொரு திறமையையும் காசாக்கும் உத்தியாக யூடியூப் உலகம், இலவச இணைய டிஜிட்டல் சேவை ரீசார்ஜ உடன். அனைத்தும் கண்முன்னே.


என்னத்த சொல்ல
நவ 03, 2025 18:16

கோவையில் நூற்றுக்கணக்கான பாதுகாப்பான பகுதி உள்ளது. இவர்கள் எதற்கு ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு நடு ராத்திரி சென்றார்கள். எப்படியோ அரசியல் செய்ய ஒரு சம்பவம் கிடைத்தது.


பேசும் தமிழன்
நவ 03, 2025 18:31

என்னத்த சொல்ல இல்லை... உங்களை என்னத்த செய்ய ??


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 03, 2025 19:47

உங்கள் கருத்து எப்படி இருக்கிறதென்றால் சாலையில் வண்டிகளும் மக்களும் செல்வதால்தான் விபத்துகள் நேருகின்றன என்பது போல இருக்கிறது. இதே நிலைப்பாட்டை நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போதும் எடுப்பீர்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை