உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக்குழு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை

கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்புக்குழு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது. சென்னையில் உள்ள பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மாணவர் ஒருவர் பலியானார். இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனையை அளித்துள்ளது. அதாவது, கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. பல்வேறு தலைவர்கள் படித்த புகழ்பெற்ற கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனை தருகிறது. குற்றவாளிகள் பிறப்பது இல்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Raj
ஏப் 19, 2025 07:12

குழு அமைத்து கொண்டாட்டம் / குத்தாட்டம் போடும் தமிழ்நாடு. இது போல் தான் அம்மையார் ஜெயலலிதா மரணத்துக்கு, அண்ணா பல்கலை கழக பிரச்சனைக்கு குழு அமைத்தார்கள் என்ன ஆச்சு? நீர்த்து போச்சு. மக்களின் வரிப்பணம் குழுவாக சுரண்டப்படிக்கிறது அவ்வளவு தான்.


Kalyanaraman
ஏப் 19, 2025 06:46

காலம் காலமாக இந்த அரசியல் கட்சிகள் தான் மோதலை உருவாக்குவதும் அதற்கு ஆதரவாகவும் இருக்கிறது. அவர்களையே சிறப்புக்குழு அமைக்கச் சொன்னால் எப்படி??


m.arunachalam
ஏப் 18, 2025 23:48

குழு அமைத்து சரிசெய்யமுடியாது . நோய் முதல் நாடி என்ற விதத்தில் அணுகுமுறை பாரபட்சமின்றி இருந்தால் சில வருடங்களுக்கு பின் சரியாகலாம் . கண்டிப்பும் , கடுமையும் தேவை . முடியுமா ?


V Venkatachalam
ஏப் 18, 2025 20:44

கட்டுமரம் அப்பவே சொல்லியது. கல்லூரி மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.‌ என்கிட்ட இருக்கிற ரௌடிங்க பத்தலை. அதுக்கப்புறம் எல்லா தலைவர்களும் மேடையில் ஏறிட்டான்கள் என்றால் மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசுவான்கள்.. பச்சையப்பன் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி அப்பவே உருப்படாமல் போய் விட்டது.


Thetamilan
ஏப் 18, 2025 20:40

கோர்ட்டுகளே அரசை தாங்களே எடுத்துக்கொண்டு அரசு நடத்துவதற்கும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை இந்துமதவாதிகளின் எடுபிடிகளாக மாற்றி வழிநடத்துவதற்க்கும் சட்டத்தில் இடமில்லை


Ramesh Sargam
ஏப் 18, 2025 20:15

சென்னை ஐகோர்ட் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? எடுத்துட்டாலும்...


ஆரூர் ரங்
ஏப் 18, 2025 19:50

சட்டக் கல்லூரி மாதிரி இக்கல்லூரிகளையும் சென்னைக்கு வெளியே மாற்றி விடுங்கள்.


GMM
ஏப் 18, 2025 18:38

மாணவர்கள் மோதலை தவிர்க்க சிறப்பு குழுவா ? கல்லூரி முதல்வர் அதிகாரம் என்ன ஆச்சு. ? கல்வி மந்திரி , மாநில முதல்வர் கைக்குள் சென்றுவிட்டதா. ? ஒழுங்கீனம் உள்ள மாணவனை கல்லூரி விட்டு வெளியேற்ற முடியாதா. ? கட்சி, ஓட்டு தான் குறி. ஒழுக்கமாவது, வெங்காயமாவது . இது போன்ற மாணவர்களை உருவாக்கவா இட ஒதுக்கீடு பிரிவில் வராத மக்கள் தன் பிள்ளையை படிக்க வைக்க முடியாமல் அரசுக்கு கல்வி வரி செலுத்தி வருகின்றார்கள். .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை