உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழர் மரபு: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழர் மரபு: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்' என்பது தொல்காப்பிய நூற்பா!. நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு!. இரண்டாம் உலகப்போரின்போது சயாம் - பர்மா ரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின் நினைவைப் போற்றும் 'நடுகல் விழா' தாய்லாந்து தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசியத் தமிழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.தமிழக அரசின் சார்பில், இதற்கென 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. போரில் உயிர் நீத்தோர் மட்டுமல்ல, கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி, உழைப்பாக உயிரையே ஈந்து மடிந்த இந்தத் தமிழர்களும் நாம் போற்றி வணங்கத்தக்க வீரர்கள்தான்! அவர்களின் நினைவை வரலாற்றில் பதிக்கவே தாய்லாந்து தமிழர்களுடன் இணைந்து தமிழக அரசின் இந்த நடுகல் முயற்சி!. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
மே 01, 2024 20:38

பர்மா ரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின் நினைவைப் போற்றுகிறாராம் முதல்வராவதற்கு முன்பு பல பொய்வாக்குறுதிகளை கொடுத்து, அதில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, பூரண மதுவிலக்கு என்று ஒரு பெரிய பொய்யை கூறி, ஆட்சியில் அமர்ந்தபிறகு, பல டாஸ்மாக் கடைகளை திறந்து, மக்களை குடிக்கவைத்து, பெண்களின் தாலியை அறுத்து, போதாதென்று, இப்பொழுது போதைப்பொருள் கடத்துபவர்களை சன்மானம் கொடுத்து வளர்த்து, இளைஞர்களை போதைப்பொருள் உபயோகத்துக்கு ஆளாக்கி அப்பப்பா போதுமடா சாமி இதில் மக்களை ஏமாற்ற, பர்மா ரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின் நினைவைப் போற்றுகிறாராம்


manokaransubbia coimbatore
மே 01, 2024 20:12

ஆமாம் அது தமிழர் மரபு ஆனால் ஒங்கோல் மரபு இல்லையே நைனா


என்றும் இந்தியன்
மே 01, 2024 18:08

நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழர் மரபு - சொல்கிறார் ஸ்டாலின் அதன் உண்மை அர்த்தம் என்ன??நீத்தாரை - கருணாநிதியை நடுகல் வைத்து நினைவேந்துவது டாஸ்மாக்கினாட்டு மரபு ஆகவே தினம் தினம் அதையே உளறிக்கொட்டுவது இப்போது ஆவது புத்தகத்தில் கருணாநிதியின் வரலாறு பக்கம்


spr
மே 01, 2024 17:48

பாராட்டுவோம் நல்ல செலவே கொடுத்தது பத்து லட்சம்தான் ஆனால் "போரில் உயிர் நீத்தோர் மட்டுமல்ல, கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி, உழைப்பாக உயிரையே ஈந்து மடிந்த இந்தத் தமிழர்களும் நாம் போற்றி வணங்கத்தக்க வீரர்கள்தான்" \ என்றால் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டு உயிர் துறந்தவர்கள் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இல்லையா? இந்தியாவில் சாலை அமைக்கும் பணியில் உயிரிழந்தவர்கள் எத்தனையோ பேர் பேனா வைக்க கோடியில் செலவழிக்கத் துடிக்கும் தமிழக அரசுக்கு இவர்களுக்கு விழா எடுக்க ஏன் நினைக்கவில்லை


Bhakt
மே 01, 2024 17:47

எக்ஸ்ஸில் பதிவிட்ட இந்த பதிவை கேமரா முன் பேசி வீடியோ வெளியிடுங்கள்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ