உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வணிக சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்தது; ஒரு சிலிண்டர் ரூ.1,906!

வணிக சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்தது; ஒரு சிலிண்டர் ரூ.1,906!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்து, ரூ.1,906க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (மே 01) வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்து, ரூ.1,906க்கு விற்பனை செய்யப்படுகிறது.ரூ.1,921.50க்கு விற்று வந்த வணிக சிலிண்டர் விலை ரூ.1,906ஆக குறைந்தது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Krishnamurthy Venkatesan
மே 01, 2025 12:07

ஆனால் பெரும்பாலான 99.9% டீ கடைகள், ஹோட்டல்கள், கையேந்தி பவன்கள், திருமண கேட்டரிங் இல் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரையே உபயோகப்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை.


ديفيد رافائيل
மே 01, 2025 10:01

உணவகங்களில் உணவு பொருள் விலை குறைக்க மாட்டானுங்க. இந்த விலைக்குறைப்பு மூன்றாவதாக விலைக்குறைப்பு. Gas price increase ஆனா மட்டும் price increase பண்றானுங்க.


RAMAKRISHNAN NATESAN
மே 01, 2025 09:55

வணிக சிலிண்டர் விலையைக் குறைத்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலையைக் கூட்டுகிறார்கள் ....


குமரி குருவி
மே 01, 2025 09:33

அதுதான் நாளைக்கு விலை கூடுமே....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை