உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைவு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைவு

சென்னை: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. அந்த வகையில் இன்று (நவ., 01) முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்தது. ஒரு சிலிண்டர் ரூ.1,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த செப் 01 ம் தேதி ரூ.51.50, ஆகஸ்ட் 1ம் தேதி ரூ.33.50, ஜூலை 1ம் தேதி ரூ.58.50, ஜூன் மாதம் ரூ.24 விலை குறைந்தது. கடந்த அக்டோபர் 1ம் தேதி ரூ.16 உயர்ந்தது. தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. இம்மாதம் அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வணிக சிலிண்டரின் விலையில் மாற்றம் இருந்தாலும், வீட்டு உபயோக தேவைகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundarsvpr
நவ 01, 2025 09:42

சிலிண்டர் விலையை குறைப்பதில் சந்தோசம். இதனால் மக்களுக்கு என்ன சௌகரியம் என்பது புரியவில்லை. காரணம் இல்லாமல் பாரபட்சம் காட்டுவது. அரசாளும் கட்சிக்குஅரசு கருவூலத்திற்கு அல்ல ஆதாயம் உள்ளது. மக்கள் மௌனியாய் இருப்பதால் அரசு எதுவும் செய்யும். மௌனத்திற்கு காரணம் தகுதியில்லாதவர் கூட இலவசத்தை வெட்கப்படாமல் பார்ப்பதால்.


Ramesh Sargam
நவ 01, 2025 09:19

விலை அதிகமானால் ஹோட்டல் முதலாளிகள் டீ, காபி, இட்லி, வடை விலைகளை உடனே ஏற்றிவிடுவார்கள். ஆனால் குறைந்தால், அவற்றின் விலையை குறைக்கமாட்டார்கள். இந்த விலை உயர்வினால் பாதிக்கப்படுவது ஹோட்டல் உணவை நம்பி வாழும் பாமரமக்களே


புதிய வீடியோ