உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு "நோ": மாநில கல்விக் கொள்கை பரிந்துரை

3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு "நோ": மாநில கல்விக் கொள்கை பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான, 14 பேர் கொண்ட குழு முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. 3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து, மாநில கல்வி கொள்கையை உருவாக்க கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழில் 800 பக்கங்களிலும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களிலும் அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். நீட் தேர்வு இருக்கக்கூடாது. 3,5,8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் இருக்கக் கூடாது. கல்லூரிகளில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. 11ம் வகுப்பு மதிப்பெண்களையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Durai Kuppusami
ஜூலை 02, 2024 14:00

எல்லாமே அதான் போல இருக்கு....


Amruta Putran
ஜூலை 02, 2024 00:57

Space is under central government portfolio, but this Dhathi is telling they are going to bring Space policy.


தத்வமசி
ஜூலை 01, 2024 14:37

மாநில கல்விக் கொள்கை காலத்திற்கு ஏற்றார்போல மாற வேண்டும். திராவிட மாடல் கல்வியாக மாறி வருகிறது. சமீபத்தில் என் நண்பர் ஒருவர் கூறினார் பத்தாம் வகுப்பில் திரு. கருணாநிதி அவர்கள் பற்றிய பாடம் உள்ளது. ஆனால் அதற்குப் பதிலாக வேறு ஒரு பாடம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் உள்ளது. எதை நடத்துவது என்று தெரியவில்லை. விளங்கிடும் என்றார். மத்திய அரசின் கைகளில் கல்வி இருக்கும் போதே இப்படி இருக்கிறது. இதுவே மாநிலத்தின் கட்டுப்பாட்டில் கல்வித்துறை தொடர்ந்து இருந்திருந்தால் இன்று என்னவெல்லாம் கற்க நேரிடுமோ ? என்னவெல்லாம் நடக்குமோ ? புதிய தேசீயக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது. இவர்கள் பிடிவாதமாக அதை பின்பற்ற விரும்பவில்லை. இப்படி இவர்கள் இருந்தால், இவர்கள் கொண்டு வரும் கொள்கைகளை எதிர் கட்சிகள் எப்படி ஏற்கும் ? ஆக, இவர்கள் நாட்டை ஆள்வதாக தெரியவில்லை. மாறாக நீயா ? நானா ? தான் விளையாடுகிறார்கள்.


N Sasikumar Yadhav
ஜூலை 01, 2024 14:30

பணக்காரர்களுக்கு ஒரு கல்விமுறை ஏழைகளுக்கு இன்னொரு கல்விமுறை. முதலில் இதை சீர்படுத்துங்கள். நீட் தேர்வு வேண்டாமென சொல்ல இவர்கள் யார் திருட்டு திராவிட களவானிங்க கொள்ளையடிக்க ஏதுவாக ஒரு குழு வெலங்கிடும் கல்வித்துறை


venugopal s
ஜூலை 01, 2024 14:12

மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு ,எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குழந்தைகள் மீது நடத்தும் வன்முறை என்றே சொல்லலாம். அதையும் ஆதரிப்பது கேவலமான கேலிக்கூத்து, குருட்டு பக்தர்களான பாஜகவினரால் மட்டுமே இதைப்போன்ற அநியாயங்களை ஆதரிக்க முடியும்!


Duruvesan
ஜூலை 01, 2024 16:19

நான் ஆதரிக்கிறேன் என் பையன் எழுதினான் என் பேரனும் எழுதுவான்.


ஆரூர் ரங்
ஜூலை 01, 2024 16:33

அந்த தேர்வுகளின் முடிவுகள் மாணவர்களுக்கு அளிக்கப்படாது. ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய வேறு வழியில்லை


panneer selvam
ஜூலை 01, 2024 23:52

Venugopal , 3rd,5th and 8th standard Common Tests are only to know the level of understanding of the students . There is no pass / fail in these standards. These s indicates how good the students are in their level of understanding. No one will be detailed at these lower classes. Please understand thoroughly about new educational policies before commenting


Gokul Krishnan
ஜூலை 01, 2024 13:39

இரு மொழி கொள்கை மக்களுக்கு மட்டும் சன் நியோ ஹிந்தி மொழி சேனல் நடத்தி கொள்ளை லாபம் பார்ப்பது எங்கள் குடும்பம் மட்டும்


GMM
ஜூலை 01, 2024 13:36

கல்வி தேசம் தாண்டி சென்று விட்டது. மாநில, மாவட்ட, பஞ்சாயத்து கல்வி கொள்கை பயனற்றது. அரசியல் போட்டி? இரு மொழி கொள்கை ஊர்விட்டு பிற இடம் சென்று பிழைக்க முடியாது. விளையாட்டு போட்டி, போட்டி தேர்வு மிக அவசியம். ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்கும் திட்டம். 11, 12 வகுப்பு மதிப்பெண் கல்லூரி சேர்க்கைக்கு எடுத்து கொண்டது நல்ல முடிவு.


ManiK
ஜூலை 01, 2024 13:20

எல்லாத்துக்கும் ஓய்வுபெற்ற ஆளுங்க வேணும்னா... உங்க மந்திரி, அதிகாரிங்க எல்லாம் எதுக்கு?!!


தமிழ்வேள்
ஜூலை 01, 2024 13:11

1985 வரை முதல் வகுப்பு முதலே தேர்வுகள் நடத்தப்பட்டும் ரிசல்ட் படி, கல்வி தரமற்றோர் fail ஆக்கப்பட்டும் ஒரு நடைமுறை இருந்தது ..அதில் படித்தவர்கள் தரமான கல்வியை பெற்றனர் ..அப்புறம் என்ன? திருட்டு திராவிடத்தை பொறுத்த வரை தேர்வு வேண்டாம் என்றால், TNPSC மட்டும் எதற்கு இருக்கவேண்டும் ? அதையும் ஊற்றி மூடிவிடலாம் அல்லவா ?


தத்வமசி
ஜூலை 01, 2024 14:41

தேர்வு வேண்டாம், வங்கித் தேர்வு வேண்டாம், தமிழ்நாடு நடத்தும் ஆசிரியர் தேர்வாணைய தேர்வுகள் வேண்டாம், அரசாங்க ஊழியர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு வேண்டாம், நீட் வேண்டாம், நீதிபதி தேர்வுகள் வேண்டாம், பள்ளியில் தேர்வுகள் வேண்டாம். அப்புறம் தேர்தல் மட்டும் எதற்கு ? அரசு எதற்கு ? எதற்கு ஒரு கட்சி ஆட்சி ? அனைத்து கட்சி ஆட்சி நடக்கட்டுமே. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் சேர்ந்து ஒரே அரசாங்கமாக ஆட்சியை செய்யலாமே. அப்போது தேர்தல் முறையே மாறிவிட வாய்ப்புகள் உண்டு.


R.MURALIKRISHNAN
ஜூலை 01, 2024 12:51

தமிழ்நாட்டு மக்களுக்கு திருட்டு திராவிட கல்வி கொள்கை கொள்ளை வேண்டவே வேண்டாம் முதல்வரே


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ