எம்.ஜி.ஆருடன் மோடியை ஒப்பிடுவதா?
சென்னை:எம்.ஜி.ஆருடன், பிரதமர் மோடியை ஒப்பிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் அளித்த பேட்டி:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எம்.ஜி.ஆரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டுள்ளார். யாருடனும் ஒப்பிடவே முடியாத தலைவர் எம்.ஜி.ஆர்., ஜாதி, மத வேறுபாடுகளின்றி அனைவரையும் சமமாக போற்றியவர். ஜாதி, மதம் கடந்து, அனைவரையும் சமத்துவமாக பார்க்கும் இயக்கம் அ.தி.மு.க.,மதத்தால் பிரிவினையை துாண்டுவதுதான் பா.ஜ.,வின் வேலை. பா.ஜ.,வில் சமத்துவம் இல்லை. ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு சுண்ணாம்பு என்றுதான் பா.ஜ., செயல்படுகிறது. எனவே, எந்த நிலையிலும் எம்.ஜி.ஆரை பிரதமர் மோடியுடன் ஒப்பிடவே முடியாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.