உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் பொன்முடி மீது புகார்; கோர்ட்டில் அரசு தரப்பு அதிர்ச்சி தகவல்!

அமைச்சர் பொன்முடி மீது புகார்; கோர்ட்டில் அரசு தரப்பு அதிர்ச்சி தகவல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ஹிந்து மதம் பற்றி அவதுாறாக பேசிய தமிழக அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்கு பதிய உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.மதுரை பிரவீன்குமார் தாக்கல் செய்த மனு:தமிழக அமைச்சர் பொன்முடி ஏப்.5 ல் சென்னையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஹிந்து மதம் மற்றும் பெண்கள் பற்றி அவதுாறாக, ஆபாசமாக பேசினார். அமைச்சர் என்பதை மறந்து நாகரீகமற்ற முறையில் மத ரீதியான பிரச்னையை உருவாக்கும் நோக்கில் பேசியுள்ளார். பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மதுரை போலீஸ் கமிஷனர், புதுார் போலீசாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி பி.தனபால் விசாரித்தார். அரசு தரப்பு: புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி விசாரணையை போலீசார் முடித்துவிட்டனர். இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதி: மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் சட்டத்திற்குட்பட்டு உரிய முறையில் நிவாரணம் தேடலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Kanns
ஏப் 23, 2025 11:35

How Ruling Party Govts Will Act Against its Goonda-Mega Loot Ministers & PartyMen


Parthasarathy Badrinarayanan
ஏப் 23, 2025 11:08

நிதி கிடைக்காத இடத்துக்கு போவது முட்டாள்தனம்.


visu
ஏப் 23, 2025 05:02

இது உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செ ய்ய சொல்லி ஆணையிட்ட வழக்கு அல்ல அனால் அப்படி ஒரு தீர்ப்பு இப்படி உப்பு சப்பில்லாமல் ஒரு தவறான தீர்ப்பு


Nandakumar Naidu.
ஏப் 23, 2025 02:25

இவனெல்லாம் நீதிபதியாக இருக்க தகுதி இல்லாத ஜென்மங்கள். இந்த அரசும் ஆட்சியில் தொடர முகாந்திரம் இல்லாத அரசு. இவர்களுக்கு வாக்களிக்கும் மானங்கெட்ட ஹிந்துக்கள் தான் திருந்த வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஏப் 22, 2025 20:57

இவர் நீதிபதி தானா ? நீதிபதிகளையும் சட்டத்திற்குள் கொண்டுவரும் காலம் வந்துவிட்டது , கோட்டா இல்லாத நீதிபதிகள் நியமனம் வேண்டும்


Ramesh Sargam
ஏப் 22, 2025 20:36

கட்டணம் அதிகம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். செய்வரா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறையினர். பவுர்ணமி போன்ற தினங்களில் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் என்னமா கொள்ளையடிக்கிறார்கள்.


Matt P
ஏப் 22, 2025 20:09

கழக ஆட்சியிலே நீதிபதிகள் கூட உயிருக்கு பயந்து வாழ வேண்டிய நிலைமையோ என்னவோ.


R.MURALIKRISHNAN
ஏப் 22, 2025 20:09

திராவிட மாடல் நீதிபதி.


Ramesh Sargam
ஏப் 22, 2025 20:00

Brief கேஸ் கைமாற்றம். வழக்கு முடிவு. பேசாம நானும் ஏதாவது ஒரு பெரிய தவறு செய்து, பிறகு Brief கேஸ் கைமாற்றம் செய்து என் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் போல தோன்றுகிறது. நான் அப்படி எதுவும் தவறு செய்யமாட்டேன். ஏன் அப்படி குறிப்பிட்டேன் என்றால், நீதித்துறையின் செயல்பாடு தமிழகத்தில் மிகவும் மட்டமாக இருக்கிறது. வெட்கம். வேதனை.


பெரிய குத்தூசி
ஏப் 22, 2025 19:38

அரசு தரப்பு: புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி விசாரணையை போலீசார் முடித்துவிட்டனர். இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதி: மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் சட்டத்திற்குட்பட்டு உரிய முறையில் நிவாரணம் தேடலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார். முகாந்திரம் இல்லையா? அப்போ வீடியோ ஆதாரம் என்னவாம்? எப்ப நீதிபதிகளே பேசாம அறிவாலயத்துல போய் ஏதாவது உருப்படியா செய்யலாமுல.


Jagadeesan Rajaguru
ஏப் 23, 2025 23:19

இது அவர்களின் தனிப்பட்ட இயக்க வரலாறு பற்றி பேசும்போது வேறு ஒருவர் பேசியதை சுட்டிக்காட்டி பேசிய பேச்சு. இது அவரின் கருத்தல்ல. பொதுக்கூட்ட நிகழ்வில் பேசியது இல்லை. இது தெரியாமல்............


முக்கிய வீடியோ