உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5 கோடி ஊழலில் அலட்சியம்: பழங்குடியினர் நலத்துறை மீது புகார்

ரூ.5 கோடி ஊழலில் அலட்சியம்: பழங்குடியினர் நலத்துறை மீது புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பழங்குடியினர் வாழ்விட மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் நடந்த மோசடி தொடர்பாக, ஒருவர் மட்டுமே பணியிட மாறுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், பழங்குடியினர் நலத் துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 2023ம் ஆண்டு, பழங்குடியினர் வாழ்விட மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுதுமாக பயன்படுத்தப்படாமல், ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில், சேலம் மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலக இளநிலை பொறியாளர் விஸ்வநாதன் என்பவர் மட்டும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த முறைகேட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக, பொது மக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, கடலுாரை சேர்ந்த பழங்குடியின மக்கள் கூறியதாவது:கடந்த, 2023ம் ஆண்டு கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில், 53 இடங்களில் சாலை மேம்பாடு மற்றும் ஆறு இடங்களில் குடிநீர் வசதிகள் செய்யவும், 5.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை முறையாக செலவிடாமல், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மோசடி செய்தனர்.இது குறித்து, கடந்தாண்டு டிச., மாதம் ஆதி திராவிடர் நலத் துறை செயலரிடம் புகார் அளித்தோம். அவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டது. கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் முன்பு இளநிலை பொறியாளராக பணியாற்றி, தற்போது சேலம் பழங்குடியினர் நலத்துறையில் பணியாற்றி வரும் விஸ்வநாதன் மட்டும், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள் சிலர் ஆளும் கட்சி தொடர்புடையவர்கள் என்பதால், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் கண்டுகொள்ளாமல் காலம் கடத்தி வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R.RAMACHANDRAN
ஜூலை 03, 2025 09:31

5 கோடி என்ன பல ஆயிரம் கோடிகள் அரசு பணம் கொள்ளை போகின்றது பல் வேறு திட்டங்களில்.கூடி கொள்ளை அடிப்பதால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.மாறாக காவல் துறையை ஏவி விட்டு புகார் செய்பவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து முடிந்தால் என்கவுண்டரில் சுட்டுத் தள்ளுவர்.அது வெற்றி பெறவில்லை எனில் நீதிபதிகளுக்கு லஞ்சம் வழங்கி சிறைக்கு அனுப்புவர்.இது தான் மக்களாட்சியின் மாண்பு.


D Natarajan
ஜூலை 03, 2025 07:52

வாழ்க விடியல். கொள்ளையோ கொள்ளை. தமிழகம் அதல பாதாளத்தில் . மக்களே 2026ல் உங்களின் அதிகாரத்தை நிலை நாட்டுங்கள்