உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆய்வு மாணவர்களை மனிதர்களாக மதிப்பதில்லை: பட்டமளிப்பு விழாவில் கவர்னரிடம் புகார்

ஆய்வு மாணவர்களை மனிதர்களாக மதிப்பதில்லை: பட்டமளிப்பு விழாவில் கவர்னரிடம் புகார்

திருச்சி : 'பாரதிதாசன் பல்கலையில் பிஹெச்.டி., படிக்கும் மாணவர்களை மனிதர்களாக மதிப்பதில்லை' என்று, பல்கலை பட்டமளிப்பு விழாவில், பட்டம் வாங்கியவர் கவர்னரிடம் புகார் அளித்தார்.திருச்சி பாரதிதாசன் பல்கலையின், 39வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 520 பேருக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். விழாவில், முனைவர் பட்டம் பெற்ற, திருச்சியை சேர்ந்த இஸ்ரேல் இன்பராஜ் என்பவர், பட்டத்தை வாங்கிய பின், தன் பாக்கெட்டில் வைத்திருந்த கடிதம் ஒன்றை கவர்னர் ரவியிடம் வழங்கினார்.கவர்னர் அதை வாங்கி, தன் உதவியாளரிடம் கொடுத்தார். பட்டம் வாங்க வந்தவர் திடீரென கடிதம் கொடுத்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். கடிதம் குறித்து இஸ்ரேல் இன்பராஜ் கூறியதாவது: நான் மனித வள மேலாண்மை துறையில் ஆய்வு படிப்பு படித்துள்ளேன். பல்கலையில் பிஹெச்.டி., படிக்க அனுமதி கடிதம் வாங்கவே, ஐந்து முறை சென்னையில் இருந்து வந்து சென்றேன். எனக்கான கைடு, வழிகாட்டுதல் படி தான், ஆய்வுப்படிப்பை துவங்கினேன். ஆனால் சிறிது காலத்துக்கு பின் சரியான வழிகாட்டுதல் இல்லை. இதே நிலை தான் எல்லா துறைகளிலும் உள்ளது.பல்கலையின் ஆய்வுத்துறையினர் மாணவர்களை மிகவும் துன்புறுத்துகின்றனர். கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வருபவர்களிடம் கூட கருணை காட்டாமல், துன்புறுத்துகின்றனர். அதிக நேரம் காக்க வைக்கின்றனர்.பல்கலையின் ஆய்வுத்துறையினர் பிஹெச்.டி., மாணவர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. சர்வ சாதாரணமாக மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. பட்டமளிப்பு விழாவை கூட தெரிவிக்கவில்லை. நாங்களே தெரிந்து, விண்ணப்பித்து பட்டம் பெற வந்துள்ளோம். முனைவர் பட்டம் பெற, 4 ஆண்டுகள் தான். ஆனால் இங்கு, 6 முதல், 9 ஆண்டுகள் ஆகின்றன. வேண்டும் என்றே இத்தனை ஆண்டுகள் அலைக்கழித்து பட்டம் வாங்க வேண்டியுள்ளது. இதே முனைவர் பட்டம் வெளியே விற்கப்படுகிறது. இதுபோன்ற அவலங்களை புகார் அளித்தால், அந்த மாணவர் பட்டம் பெற முடியாது. ஆய்வுத்துறையினர் மாணவர்களை அவமானப்படுத்துகின்றனர். இதை கவர்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லவே புகார் அளித்தேன். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே, சேலம் பெரியார் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் என்பவர், பிஹெச்.டி., மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து, கவர்னரிடம் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தமிழ் நாட்டு அறிவாளி
அக் 30, 2024 12:04

இதே முனைவர் பட்டம் வெளியே விற்கப்படுகிறது. இதை நீ சொல்லும் போதே தெரிகிறது நீ எந்த மனநிலையில் PhD சேர்ந்து இருப்பீர்கள் என. இது ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடிக்கும் ஒரு டிகிரி கிடையாது. மாணவர்கள் முயற்சி இல்லாமல் கைடு முடித்து கொடுக்க முடியாது. தமிழ்நாட்டில் பட்டமளிப்பு விழாவில் இது எதோ திட்டமிட்டு நடக்கிறது என நினைக்கிறேன்


N.Purushothaman
அக் 30, 2024 13:45

அதுக்காக அந்த பல்கலையில் சேர்ந்த பாவத்துக்கு பத்து வருஷம் முனைவர் பட்டத்திற்கு கால விரயம் செய்யணுமா ?


KAMARAJ M
அக் 30, 2024 11:15

பிட் மேலே மரியாதையை poichu


N.Purushothaman
அக் 30, 2024 10:26

பாரதி தாசன் அவர்களையே திருட்டு திராவிட கட்சி தங்களின் "ஆளாக"காட்டி கொள்ளும் போது இந்த புகார் எல்லாம் சப்பை மேட்டர் .....நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாத தற்குறிகள் ஆராட்சி செய்யும் தமிழகத்தில் இதெல்லாம் சர்வ சாதாரணம் ....


veeramani
அக் 30, 2024 09:41

நானும் ஒரு விஞ்ஞானியாக உயர் பதவி வகித்தவர். பி எச் டி படிப்பது ...சரியாகி சொன்னால் ஆய்வு செய்து படிக்கவேண்டும் . இன்று வரு இளைய தலைமுறையினர் உடனடியாக பட்டம் எதிர்பார்க்கிறார்கள். ஒரு வழிகாட்டி அத்துறையில் பேராசியர்களாக இருப்பார். இவரின் வழிக்காட்டுதலுடன் மட்டும்தான் முனைவர் பட்டம் பெற இயலும். உலக நியதி. ஆனால் இளைஞர்கள் ஆராய்ச்சி செய்வது கிடையாது எதையாவது எழுதி பட்டம் எதிர்பார்க்கிறார்கள். இந்த போக்கு சகிக்கவியலாது


Barakat Ali
அக் 30, 2024 09:34

நல்லா படிச்சவங்க / உயர்கல்வி படிச்சவங்க திராவிட மாடலை நம்பலை ..... நல்லாவே புரிஞ்சி வெச்சிருக்காங்க .... ஆனா அவங்க சமூகத்தில் மிகவும் குறைவு ......


Barakat Ali
அக் 30, 2024 09:17

திராவிடக்கட்சிகள் அடுத்தடுத்து ஆட்சி அமைத்ததில் இருந்தே பல்கலைக் கல்வித் தரம் படுபாதாளத்துக்குப் போய்விட்டது ....... இந்தக் கும்பலுக்கு அடிவருடுபவர்கள்தான், மூளைச்சலவை செய்யப்பட்டு நேர்ந்து விடப்பட்டவர்கள்தான், அவர்கள் படியளப்பதால் சோறுண்பவர்கள்தான் கவர்னரை லப்பர் இஷ்டாம்பு என்கிறார்கள் ....


வாசகர்
அக் 30, 2024 08:55

நல்ல வேலை புகார் கொடுத்தவர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர். இல்லை என்றால் சங்கி பட்டத்தை கொடுத்து மொத்த பிரச்சினையையும் மூடி இருப்பார்கள். RSB மீடியா மற்றும் பத்திரிகைகள் ஒத்து ஊதி இருக்கும், தினமலர் தவிர. பட்டமளிப்பு விழாவில் கவர்னரிடம் இவ்வாறு மனு கொடுப்பது, உணர்த்தும் விசயம் கவர்னரின் செயல்பாடு அவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுத்து உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட்டு நமது கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட ஆவன செய்ய வேண்டும். கவர்னர் ரவி இல்லை என்றால், இந்த பிரச்சினை வெளி உலகிற்கு தெரிந்திருக்காது


R.RAMACHANDRAN
அக் 30, 2024 06:56

2047 க்குள் லஞ்ச ஊழல் மிக்க அதிகார வர்கம் இந்த நாட்டின் வளங்களை எல்லாம் தகுதியில்லாதவர்களுக்கு விற்று அவர்களின் பல தலைமுறைகள் பயனடையும் வண்ணம் சொத்துக்களை குவித்துவிடுவார்.இவர்களால் நாடு வளர்ந்துவிடும் என்பது மாயையே.


visu
அக் 30, 2024 06:41

இது வழக்கமான விஷயம்தான் வழிகாட்டுபவரின் எடுபிடி வேலைகளை செய்து கேட்ட பணம் பொருள் கொடுத்தால்தான் PhD வாங்க முடியும் .இத்தேர்க்கு எந்த வரைமுறையும் இல்லை என்பதால் இதுதான் தற்போதைய நடைமுறை அதாவது காசு இருபவன்தான் PhD வாங்கமுடியும்


கிஜன்
அக் 30, 2024 05:47

சில பேருக்கு ஆசிரியர்கள் நடக்கும் விதத்தை பார்க்கும்போது ... படித்து என்ன கிழிக்கப்போறோம் என்ற எண்ணம் வருகிறது .... மாணவர்களை மிக மோசமாக நடத்துகிறார்கள் .... புகார் அளித்த மாணவர்கள் மீது கோபப்படாமல்.... மேதகு ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் ...