உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலை உணவு திட்டத்துக்கு அதிக கவனம்; மதிய உணவு திட்டத்துக்கு இல்லை என புகார்

காலை உணவு திட்டத்துக்கு அதிக கவனம்; மதிய உணவு திட்டத்துக்கு இல்லை என புகார்

மதுரை,: தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டம் மீதான கண்காணிப்பு, மதிய சத்துணவுத் திட்டத்தில் இல்லை. சத்துணவு அமைப்பாளர்கள் பற்றாக்குறை, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கண்காணிப்பு இல்லாததால், முழுமையான உணவு கிடைப்பதில்லை என புகார் எழுந்துஉள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய சத்துணவு திட்டம் அமலில் உள்ளது.

ஆய்வு இல்லை

இதுபோல முதல் வரின் காலை உணவுத் திட்டம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2022ல் துவங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. காலை உணவுத் திட்டம் தனியாராலும், மதிய உணவுத் திட்டம் சத்துணவு பணியாளர்களாலும் செயல்படுத்தப்படுகின்றன. காலை உணவுத் திட்டத்தில் பெரும்பாலும் புகாரின்றி நடக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயன்பெறும் மதிய உணவுத் திட்டத்தில் உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்குவதில்லை.இதை கண்காணிக்க வேண்டிய சத்துணவு அமைப்பாளர்கள் பற்றாக்குறையால், ஒருவர் நான்கு பள்ளிகளை கண்காணிக்க வேண்டியுள்ளது, ஒட்டுமொத்தமாக கண்காணிக்க வேண்டிய பி.டி.ஓ.,க்கள் மாதம் ஒருமுறைகூட பள்ளிகளில் ஆய்வு செய்வதில்லை என்பது போன்ற புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

உணவு பட்டியலில் அனைத்து நாட்களிலும் முட்டை இடம் பெறும். ஆனால், மசாலா முட்டை, மிளகு முட்டை, தக்காளி மசாலா முட்டை பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. இரண்டு மற்றும் நான்காவது வாரத்தில் எலுமிச்சை சாதத்துடன் தக்காளி முட்டை, சுண்டல் வழங்க வேண்டும்.

விறகு அடுப்பு

இதில், சுண்டல் தனியாக வேகவைத்து கொடுக்க வேண்டும். ஆனால், அரசு உதவிபெறும் பள்ளிகள் தவிர பெரும்பாலான அரசு பள்ளிகளில் தருவதில்லை. அனைத்து வெள்ளியும் வறுத்த உருளைக்கிழங்கு வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. அரசு உத்தரவுப்படி, சிலிண்டரில் தான் சமைக்க வேண்டும். பல பள்ளிகளில் இன்னும் விறகு அடுப்பு தான் பயன்படுத்துகின்றனர். காலை உணவுத் திட்டத்தை கண்காணிக்கும் அளவிற்கு மதிய சத்துணவு திட்டத்தில் கண்காணிப்பு இல்லை. மதிய உணவு தொடர்பாக பல்வேறு புகார்கள் அரசின் கவனத்திற்கு வராமல், ஆளுங்கட்சியினரால் மூடி மறைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

நாஞ்சில் நாடோடி
ஜூன் 16, 2025 11:41

இலவசம் கொடுத்து பணத்தை வீணடிக்கும் மாடல் அரசு...


புரொடஸ்டர்
ஜூன் 16, 2025 11:21

மதிய உணவு திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி காணாமல் போய்விட்டது.


ஆரூர் ரங்
ஜூன் 16, 2025 11:06

கர்நாடகா போன்ற இடங்களில் வெற்றிகரமாக செயல்படும் அக்ஷய பாத்ரா அறக்கட்டளை காலைஉணவு வழங்குவதை முற்றிலும் இலவசமாக செயல்படுத்த முன்வந்தபோது சுயநல சுரண்டலுக்காக மாநில அரசு மறுத்தது. இப்போது ஏழைகளின் வரிப்பணத்தை செலவழித்து சத்துணவுத் திட்டம். அதுவும் புழு பூச்சி இருப்பதாக குற்றச்சாட்டு. பணப் பற்றாக்குறை காரணமாக மதிய உணவில் பிரச்சினைகள். காசுக்கு வாக்களிப்பது இதில்தான் விடும்.


Svs Yaadum oore
ஜூன் 16, 2025 13:23

அக்ஷய பாத்ரா அறக்கட்டளை காலை உணவு வழங்க விடியல் மறுக்க காரணம் சமூக நீதி மத சார்பின்மைதான் காரணம் .......மத சார்பின்மையை விடியல் எப்போதும் கை விடாது ....


Anand
ஜூன் 16, 2025 10:42

மதிய உணவு திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டமுடியாது, எனவே காலை உணவு என்கிற ஒரு திட்டத்தை கொண்டுவந்து மதிய உணவு திட்டத்தை கெடுக்கவேண்டியது......


அப்பாவி
ஜூன் 16, 2025 07:14

காலைலயே வயிறு நிறைய பொங்கலைப்போட்டு மதியம் வரை தூங்கிடறாங்களாம்.


Svs Yaadum oore
ஜூன் 16, 2025 07:48

உத்தர பிரதேசம் பிஹாரில் இன்னமும் சமையல் செய்ய விறகு அடுப்பு ...இங்கே அதெல்லாம் கிடையாது ..இங்கே எலக்ட்ரிக் அடுப்புதான் ...தமிழ் நாடு ஏற்கனவே முன்னேறிய மாநிலம் ..


ديفيد رافائيل
ஜூன் 16, 2025 11:16

தமிழ் நாட்டில் அனைத்து வீடுகளிலும் electric stove பயன்படுத்துறது கிடையாது


pandit
ஜூன் 16, 2025 07:05

அழுகிய முட்டை தரலாம். அழுகிய கறிகாய் தரமுடியாதே


Svs Yaadum oore
ஜூன் 16, 2025 07:01

அரசு உத்தரவுப்படி, சிலிண்டரில் தான் சமைக்க வேண்டும். ஆனால் பல பள்ளிகளில் இன்னும் விறகு அடுப்பு தான் பயன்படுத்துகின்றனராம் .....இதெல்லாம் உத்தர பிரதேசம் பிஹாரில் இன்னமும் சமையல் செய்ய விறகு அடுப்பு ...இங்கே அதெல்லாம் கிடையாது ..இங்கே எலக்ட்ரிக் அடுப்புதான் ...தமிழ் நாடு ஏற்கனவே முன்னேறிய மாநிலம் ...தமிழ் நாட்டை ஐரோப்பாவிடம் ஒப்பிட வேண்டும் ...பீகார் ஒரிஸ்ஸாவுடன் தமிழ் நாட்டை ஒப்பிட முடியாது ...


Svs Yaadum oore
ஜூன் 16, 2025 06:56

காலை உணவுத் திட்டம் தனியாரால் செயல்படுத்தப் படுகின்றனவாம். இதில் எதற்கு தனியார்? விடியல் இதிலும் கொள்ளையடிக்கவா? சென்னையில் 356 பள்ளிகளுக்கு காலை உணவு தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளனவாம். யார் அந்த தனியார்?? காலை உணவை தயாரிக்கும் பணியை தனியாரிடம் வழங்க கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி முடிவு செய்த போது அதற்கு கடும் எதிர்ப்பு... அதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே கைவிடப்பட்ட ஒரு திட்டத்தை சென்னை மாநகராட்சி அவசர, அவசரமாக செயல்படுத்தத் துடிப்பதன் நோக்கம் என்ன??


Svs Yaadum oore
ஜூன் 16, 2025 06:51

விடியல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டம் மீதான கண்காணிப்பு, மதிய சத்துணவுத் திட்டத்தில் இல்லையாம்.. மதிய உணவு தொடர்பாக பல்வேறு புகார்கள் அரசின் கவனத்திற்கு வராமல், ஆளுங்கட்சியினரால் மூடி மறைக்கப்படுகிறதாம்.. இங்குள்ள பத்திரிகை, தொலைக்காட்சி, நெறியாளனுங்க என்று மொத்தமும் விடியல்.. அதனால் இங்கு நடக்கும் ஊழல் கொலை கொள்ளை பாலியல் குற்றம் என்றது மொத்தமும் விடியல் மறைக்கும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை