மேலும் செய்திகள்
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் குழு: இபிஎஸ் அறிவிப்பு
2 hour(s) ago | 4
யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா
4 hour(s) ago | 4
சென்னை: மதுரை, கோவை உள்ளிட்ட, எட்டு நகரங்களுக்கான புதிய முழுமை திட்டத்தின் வரைவு ஆவணம், பொது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் முழுமை திட்டங்களை, உடனடியாக தயாரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, படிப்படியாக முழுமை திட்ட தயாரிப்பு பணிகளை, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., மேற்கொண்டு வருகிறது. மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம், வேலுார், திருப்பூர், ஈரோடு ஆகிய, எட்டு நகரங்களுக்கான முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த வரைவு ஆவணங்கள் மீது, பொது மக்களின் கருத்து பெற வேண்டும். இதற்கான வரைவு ஆவணங்களை வெளியிட, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் சி.சமயமூர்த்தி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், எட்டு முழுமை திட்ட வரைவு ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, டி.டி.சி.பி., இயக்குனர் பி.கணேசன் கூறியதாவது: நகரங்களுக்கான முழுமை திட்டங்களை தயாரிப்பது தொடர்பான பணிகளை, குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிக்க, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதன்படி, ஜன., 15க்குள் முழுமை திட்டங்களை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முழுமை திட்டங்களை வெளியிடும் நகரங்களுக்கு, சிறப்பு நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில், எட்டு நகரங்களின் முழுமை திட்டங்கள் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வெளியிடப்பட்டு உள்ளன. இதனால், ஒரு நகரத்துக்கு, 50 கோடி ரூபாய் வீதம், எட்டு நகரங்களுக்கு, 400 கோடி ரூபாய் சிறப்பு நிதியை பெற முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 4
4 hour(s) ago | 4