உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளங்கோவன் தொடர்பு இடங்களில் வருமான வரி சோதனை நிறைவு

இளங்கோவன் தொடர்பு இடங்களில் வருமான வரி சோதனை நிறைவு

திருச்சி:கோவையில் செயல்பட்டு வரும் ஆதித்யா அஸ்வின் பேப்பர் நிறுவன உரிமையாளர் பாலசுப்பிரமணியன். இவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த, 22ம் தேதி காலை, சென்னை மற்றும் கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை துவக்கினர். அதே நேரத்தில், பாலசுப்பிரமணியத்தின் சம்பந்தியும், முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் புறநகர் அ.தி.மு.க., மாவட்டச்செயலருமான இளங்கோவனுக்கு சொந்தமாக, திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள எம்.ஐ.டி., கல்வி நிறுவனங்களிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை துவக்கினர். திருச்சி வருமான வரித்துறை இணை கமிஷனர் பாலமுரளீதரன் தலைமையில் 12 அதிகாரிகள், இரு குழுக்களாக பிரிந்து, புதுப்பட்டியில் உள்ள எம்.ஐ.டி., கல்வி நிறுவனங்களிலும், வெள்ளாளப்பட்டியில் உள்ள எம்.ஐ.டி., வேளாண் தொழில்நுட்ப கல்லுாரியிலும் சோதனை நடத்தினர். கடந்த, 22ம் தேதி காலை 8:00 மணிக்கு துவங்கிய சோதனை, நேற்று காலை, 7:20 மணி வரை, 96 மணி நேரம் நடந்தது. நேற்று காலை சோதனையை முடித்துக் கொண்டு அதிகாரிகள், சில ஆவணங்களை மட்டும் கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ