எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல்
சென்னை:சட்டசபை துவங்கியதும், சிங்காநல்லுார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., மோகன், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் மறைவுக்கு, சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார். அதைத்தொடர்ந்து, இருவர் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து, அனைவரும் எழுந்து நின்று, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'இந்திய அரசியலில் உறுதியும், தொலைநோக்கும் மிகுந்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா. கர்நாடகா முதல்வராக, அம்மாநிலத்தை குறிப்பிட தகுந்த வளர்ச்சி பாதையில் செலுத்தினார். 'வெளியுறவுத் துறை அமைச்சராக, உலகளவில் தன் தலைமைத்துவத்தாலும், சாமர்த்தியத்தாலும், நாட்டின் நிலையை வலுப்படுத்தினார். அவரது பங்களிப்புகளுக்காக பல தலைமுறைகளுக்கு அவர் நினைவுகூறப்படுவார்' என்று கூறியுள்ளார்.