உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடந்து முடிந்தது நீட் தேர்வு; ஜூன் 14ல் ‛ரிசல்ட்

நடந்து முடிந்தது நீட் தேர்வு; ஜூன் 14ல் ‛ரிசல்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வு, தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று (மே 05) மதியம் 2 மணிக்கு துவங்கியது. மாலை 5.20 மணிக்கு நிறைவு பெற்றது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஜூன் 14ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு என்ற நீட் தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=589d1cvz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீட் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. அதன்படி, 2024 - 25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும், 557 நகரங்களில் இன்று( மே 05) நடைபெற்றது.தமிழகம் உட்பட நாடு முழுவதும் 'நீட்' நுழைவு தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு துவங்கி நீட் தேர்வு மாலை 5.20 மணிக்கு நிறைவு பெற்றது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். சென்னையில் 36 மையங்களில் மொத்தம் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை ஆர்வமுடன் எழுதினர்.

மதிப்பெண் எப்படி?

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 50 கேள்விகள் என, 200 கேள்விகள் கேட்கப்படும். அவற்றில், 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என, மொத்தம் 720 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண், 'நெகட்டிவ்' என்ற அடிப்படையில் குறைக்கப்படும்.

ஜூன் 14ல் ரிசல்ட்

இன்று நடந்து முடிந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் 14ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Jai
மே 05, 2024 21:08

ஒரு பக்கம் நீட் தேர்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. மறுபுறம் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்ய நாடகமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது அதையும் மக்கள் நம்பிக்கொண்டு தான் உள்ளனர்.


Rpalnivelu
மே 05, 2024 17:47

நீட் தேர்வு அறிவு.. நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து திருட்டு திராவிட மாநாட்டு குப்பை தொட்டியிலே வாழ்க


Jai
மே 05, 2024 16:42

ஒரு கோடி பேரிடம் வெட்டியாக கையெழுத்து வாங்கி பிறகு அதை குப்பையில் தூக்கி போட்டதால் இங்கு மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டியதாகி விட்டது. வருட வருடம் நீட் தேர்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் ரத்து செய்ய ரகசியம் மட்டும் வெளியாகவில்லை. நாடக கம்பெனி நடத்தும் நாடகத்தை தொடர்ந்து மக்கள் மனதார நம்பி கொண்டு இருக்கின்றனர். இன்னும் பல நாடகங்கள் மக்களுக்காக நடத்தப் போகிறார்கள் ஏமாற தயாராகுவோம்.


Siva
மே 05, 2024 15:27

இது தான் திராவிட முன்னேற்றக் மாடல் எல்லாருக்கும் நல்ல நாளாக அமையட்டும் எல்லாம் வல்ல இறைவன் செயல்


subramanian
மே 05, 2024 15:23

திறமையான டாக்டரை உருவாக்க நீட் தேர்வு அவசியம்


ஆரூர் ரங்
மே 05, 2024 15:21

பதில் தெரியாது விடைத்தாள்ல எழுதுனா நீட் தானாவே ஒழிஞ்சுடும்.


கல்யாணராமன்
மே 05, 2024 16:08

உங்கள் உறவினர்கள், நண்பர்கள் யாராவது நீட் தேர்வு எழுதினால் இப்படி எழுத சொல்லி பரிட்சித்து பார்


SIVA
மே 05, 2024 16:32

என்ன அநியாயம் சார் தமிழ் நாட்டில் பத்து கோடி மக்கள் இருக்காங்க ஆனால் இரண்டு லட்சம் பேர் கூட நீட் தேர்வு எழுத வில்லை , அப்படி என்றால் நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு உள்ளது ,


subramanian
மே 05, 2024 15:19

நீட் தேர்வு பல ஏழைகளுக்கு டாக்டர் ஆசை நிறைவேற உதவி ஆக உள்ளது குறுக்கு வழியில் டாக்டர் ஆக நினைப்பவனுக்கு தடையை ஏற்படுத்த முடியும்


subramanian
மே 05, 2024 15:08

ஆம் பக்கம் வேலை பார்த்து வந்த புலம்பல் எங்கயாவது கேட்கும்


pandit
மே 05, 2024 15:00

அனைவரும் வெற்றி பெற வாழ்த்துககள்


Palanisamy Sekar
மே 05, 2024 14:48

ஒன்றரை லட்சத்தில் ஒருவர்கூடவா திமுகவுக்கு கிடைக்காமல் போனார்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை