மாநாட்டு தீர்மானங்கள்; ஹிந்து முன்னணி உறுதி
மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்ததையடுத்து, போலீஸ் கமிஷனரை ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர், காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:
மாநாட்டில் திருப்பரங்குன்றம் மலை மீது மீண்டும் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும். முருகன் மலைகளை காக்க வேண்டும். கோவில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை செயல்படுத்துவதுதான் எங்களது அடுத்தகட்ட பணி. இவ்வாறு அவர் கூறினார்.