உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறநிலையத் துறை பெயரை மாற்ற காங்., கோரிக்கை

அறநிலையத் துறை பெயரை மாற்ற காங்., கோரிக்கை

சென்னை:''ஹிந்து சமய அறநிலையத் துறையை, 'தமிழ்நாடு அறநிலையத் துறை' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில் அவர் பேசியதாவது:'ஹிந்து' என்ற வார்த்தை, எந்த அகராதியிலும் இல்லை. எந்த இலக்கியத்திலும் இல்லை. பிரிட்டிஷார் அவர்களின் வசதிக்காக, சிந்து என்பதை, ஹிந்து என மாற்றி இருக்கின்றனர்.எனவே, ஹிந்து சமய அறநிலையத் துறையை, தமிழ்நாடு அறநிலையத் துறை அல்லது திருக்கோவில் அறநிலையத் துறை என மாற்ற வேண்டும்.காலம் மாறிக் கொண்டிருக்கிறது. வரலாறு மாறிக் கொண்டிருக்கிறது. இதையும் மாற்ற வேண்டும். ஹிந்து என்ற பெயரை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.எனவே, அந்த பெயரை மாற்ற வேண்டும். பட்டியல் இனத்தவர்களை தி.மு.க., அரசு தொழில் முனைவோராக்கி உள்ளது. அதனால் பட்டியல் இனத்தவர்களிடம், மற்ற சமூகத்தினர் வேலை செய்யும் நிலை உருவாகி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கோமாளி
ஜன 11, 2025 03:29

நாடத்தின் இடைவெளியில் கோமாளி சிரிப்பு காட்டுவார் அல்லவா.. சிறப்பாக செய்கிறார்


Natchimuthu Chithiraisamy
ஜன 10, 2025 14:14

உன் நோக்கம் என்ன தமிழ் நாட்டில் ஸ்டாலின் சீமான் விஜய் மூன்று கிருதவர்களிடம் போட்டி உள்ளது எனவே இந்து அறநிலைய துறை தேவை இருக்காது. இந்துக்களுக்கும் இது புரியாது


N Sasikumar Yadhav
ஜன 10, 2025 06:19

தமிழக அறநிலைய துறை என மாற்றி இசுலாமிய கிருக்துவ வழிபாட்டுத்தலங்களையும் அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் அப்படியென்றால் பெயரை மாற்றுங்கள்


முக்கிய வீடியோ