உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஜித்தை வாழ்த்தியது இதற்குத்தானா: உதயநிதியை விளாசிய தமிழிசை!

அஜித்தை வாழ்த்தியது இதற்குத்தானா: உதயநிதியை விளாசிய தமிழிசை!

சென்னை: 'விஜய்யை கோபப்படுத்த, அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து சொல்கிறாரா என தெரியவில்லை' என பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் தெலுங்கானா கவர்னருமான தமிழிசை தெரிவித்தார்.சென்னையில், நிருபர்கள் சந்திப்பில், தமிழிசை கூறியதாவது: இன்னைக்கு உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். விஜய்யை கோபப்படுத்த, அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து சொல்கிறாரா என தெரியவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zbk32yd3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் உலக அரங்கில், விளையாட்டை முன்னிறுத்துவதற்கு அஜித்திற்கு வாழ்த்து சொல்லிவிட்டு, இங்கே சாமானிய மக்கள் விளையாடும் மாநகராட்சி விளையாட்டு திடல்களில் 10 பேர் பயிற்சி பெற்றால், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1200 கட்ட வேண்டும் என மிக கொடுமையான தீர்மானத்தை மாநகராட்சி நிறைவேற்றி இருக்கிறது. இது சாமானிய மக்கள் பயன்பெறும் விளையாட்டு திடல்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். மாநகராட்சி திடலுக்கு கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மாநகராட்சி உடனே திரும்ப பெற வேண்டும். போதையில் இருந்து குழந்தைகளை வெளியே கொண்டு வருவதற்கு விளையாட்டு தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

வாபஸ்

சென்னையில் கால்பந்து மைதானங்களை தனியாருக்கு கொடுக்கும் முடிவை சென்னை மாநகராட்சி வாபஸ் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rajasekar Jayaraman
அக் 30, 2024 23:22

பாஜக வுக்குதேவையற்ற துருபிடித்த ஆணி தன் இருப்பை இப்படி காட்டுகிறதோ


பாலா
அக் 30, 2024 21:59

கேள்வியே தவறு...திராவிடியன்னுக்கு வயிற்றோட்டம் ?


அப்பாவி
அக் 30, 2024 19:44

எதுக்கு அஜித்துக்கு வாழ்த்து சொன்னாருன்னு தெரியவில்கையாம். அதுக்கு பேரு விளாசலாம். போன தடவை வாங்குன ஓட்டு கூட இனிமே தேறாது தாயீ.


K.n. Dhasarathan
அக் 30, 2024 19:37

பாவம் தமிழிசை இப்படி அரசியல் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டாரே... அம்மா, இந்த சிண்டு முடியிற வேலைகளை விட்டு விட்டு, தாமரையை எப்படி வளர்ப்பது என்று மட்டும் யோசியுங்கள்.


V Gopalan
அக் 30, 2024 16:17

For BJP, none is required to wipe out, only these two Shri H Raja and Smt Tamilisai. What way it is connected to Shri Ajith and BJP, let the Dy CM of Tamilnadu bless him. These two are frog mouthed. It is better BJP can advice these two maintain silence.


Vijay D Ratnam
அக் 30, 2024 16:13

அஜித் எப்போதும் அரசியலை விட்டு தள்ளியே இருப்பார். ஜெயலலிதாவின் அபிமானியாக இருந்தாலும், அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களிடம் நட்பாக இருந்தாலும், அவர் எப்போதும் அதிமுகவை விட்டு தள்ளியே இருப்பார். அதிலும் திமுகவை விட்டு ஒங்க சங்காத்தமே வேண்டாம் என்று ரொம்ப தள்ளியே இருப்பார். அதிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழாவில் கருணாநிதி முகத்துக்கு எதிரே அவர் கொந்தளித்தபோது சினிமா உலகமே அதிர்ந்தது. இப்போ உதயநிதி விஜய் மீது கோபத்தில் இருக்கிறார். இருக்காதா பின்னே. பள்ளிவாசல்களில் பாதிரியார்கள் உத்தரவுப்படி மைனாரிட்டி வாக்குகளை லம்ப்பாக அள்ளிக்கொண்டு இருந்தார்கள். இப்போ ஜெகன்மோகன் ரெட்டியை கொண்டுவந்தது போல விஜயை கொண்டுவருவது கிருஸ்தவ மிஷனரிகள் என்று செய்திகள் வருகிறது. கிருஸ்தவ வாக்குகள் திமுக கையை விட்டு போனால் அத்தோடு திமுக ஆட்டம் க்ளோஸ். அதான் கதறல் சத்தம் ஆரம்பிக்குது. மிஷனரிகள் வீசும் கரன்சியை அண்டி பொழப்பு நடத்திக்கொண்டு இருந்த திருமாவளவன், சீமான் போன்றவர்கள் கதறல் சத்தம் இனி அதிகமாகும். அதிமுகவுக்கு இதில் பெரிய டேமேஜ் இருக்காது. அதிமுக எப்போதுமே விஜய்க்கு நெருக்கமானது இல்லை. அதனால்தான் அதிமுகவினர் மத்தியில் அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம். பிகாஸ் ஆரம்பகாலத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் திமுக பற்றாளர், கருணாநிதியின் தீவிர ஆதரவாளர். விஜய் சினிமா வாழ்க்கையும் சன் டிவியும் ஒரே நேரத்தில் தொடங்கியது. திமுகவும், சன் டிவியும் வளர்த்தெடுத்த பிள்ளை விஜய்.


sundarsvpr
அக் 30, 2024 14:43

விஜய்யை ஜோசப்விஜய் என்று அழைக்கலாம். ஏன் அஜித் உதயநிதி போன்றோரை அப்படி அழைக்கமுடியுமா இதனால்தான் உதயநிதி அஜித்தை பாராட்டுகிறார். தி மு க கட்சியால் ஹிந்து அறநிலை துறை உள்ளது. அதுபோல் ஜோசப் விஜய் அரசு வந்தால் முஸ்லீம் அறத்துறை கிறிஸ்துவ அற துறை அமைத்தால் அவருடைய மத நல்லிணக்க கொள்கை வரவேற்பார்கள்.


Sundar R
அக் 30, 2024 14:17

தமிழக பாஜக தலைவராகவும், இரு மாநில ஆளுநராகவும் இருந்த தமிழிசை அவர்களிடம் உயர்ந்த தர அரசியலை எதிர்பார்க்கிறோம். இவரது சமீபத்திய அரசியல் இவர் நாட்டை உயர்த்த பேசுகிறாரா? அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்த பேசுகிறாரா? என்று தெரியவில்லை.


Barakat Ali
அக் 30, 2024 13:43

உங்களுக்கு என்னக்கா திடீர்ன்னு சோசப்பு விசய் மீது ரொம்ப பாசம் .........


narayanansagmailcom
அக் 30, 2024 12:45

உதய நிதிக்கு தான் என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை கேட்டால் துணை முதல்வர் பதவி அல்ல பொறுப்பு என்கிறார். தமிழக அரசில் யாரும் அவர்களை உணர்ந்து வேலை செய்வதி இல்லை என்பது நன்றாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் வாங்குவது டாஸ்மாக் போதைமருந்து எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து செய்கிறார்கள். மானகராட்சி பஸ்சில் மகளிருக்கு அபராதம் விதிக்கிறார்கள்அது தான் திராவிட மாடல் ஆட்சி


புதிய வீடியோ