உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக காங். எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை: அதிகாரிகளை தாக்கிய வழக்கில் தீர்ப்பு

தமிழக காங். எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை: அதிகாரிகளை தாக்கிய வழக்கில் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: தமிழக காங். எம்.எல்.ஏ.,வுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.தமிழக காங். சட்டமன்ற குழு உறுப்பினரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் ராஜேஷ் குமார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4brsgj95&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02014ம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை மீட்கச் சென்ற அதிகாரிகளை அவர் தடுத்தி நிறுத்தி தாக்கியதாக புகார் எழுந்தது.இந்த சம்பவத்தில் ராஜேஷ்குமாருடன் சேர்த்து 6 பேர் மீது அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் 3 பேர் உயிரிழந்து விட, எஞ்சிய 3பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, கிள்ளியூர் காங்.எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் உள்பட 3 பேருக்கும் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ramesh Sargam
ஏப் 21, 2025 19:45

இப்பொழுது அவர் மேல்முறையீடு என்று செல்வார். நீதிமன்றமும் அவரை மன்னித்து விடுதலை செய்யும். That is all your honour.


visu
ஏப் 21, 2025 19:32

நம்ம ஆட்டம் கேலி கூத்தாகி விட்டது குற்றவாளியை அமைச்சராக்க காவெர்னெர் மறுத்தால் உச்ச நீதிமன்றம் அமைச்சராக்குங்கள் என்று உத்தரவு பிறப்பிக்கிறது ஏன் என்று உள்ள வேண்டாமா ? பதவியில் இருக்கும் யாரும் சிறைக்கே செல்வதில்லை மேல்முறையீடு அது இது என்று சிறைக்கே செல்லாமல் இறந்தே விடுகிறார்கள் சாமானியர்களுக்கு இதே விதி கிடையாது பசிக்கு ரொட்டி திருடியவனை நாங்க சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உள்ள தள்ளிடறாங்க


தத்வமசி
ஏப் 21, 2025 18:59

பதினொரு வருடங்கள் கழித்து தண்டனை. இதற்கு இப்போது மேல் அப்பீல் வரலாம். அப்படி வந்தால் இன்னும் வழக்கு நீடிக்கும். இந்த லட்சணத்தில் கவர்னரும் ஜனாதிபதியும் மூன்று மாதங்களுக்குள் முடிவு சொல்ல வேண்டுமாம்.


Iniyan
ஏப் 21, 2025 18:45

அயோக்கிய நீதிமன்றங்கள்


ஆரூர் ரங்
ஏப் 21, 2025 18:28

பொன்முடியின் மூன்றாண்டு த‌ண்டனை தாற்காலிகத் தடையுத்தரவில் உள்ளது. ஆறேழு ஆண்டுகளுக்கு முன் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்ற எம்எல்ஏ ஜவாஹிருல்லா வெளியில்தானே இருக்கிறார்? இவருக்கும் ஒரு வழி இல்லாமலா போகும்?


Palanisamy Sekar
ஏப் 21, 2025 18:24

தமிழகத்தில் ஏன் இப்படிப்பட்ட நபர்களெல்லாம் பதவிக்கு வருகின்றார்களோ தெரியல. ஆட்சியாளர்களின் மந்திரி பட்டியலில் பலரும் கோர்ட்டாரால் தண்டனைக்கு உள்ளானவர்களாக இருக்கின்றார்கள். கூட்டணியில் உள்ள காங்கிரசின் மாநில தலைவர் மீது 543 கோடி அளவுக்கு ஊழல் புகார் வாசிக்கப்பட்டது. இப்போது எம் எல் ஏ..அய்யகோ இதுதான் திராவிட மாடல் அரசு என்பதா? இவர் எவ்வளவு பணத்தை வாரிக்கொடுத்து வெளியே உலா வரப்போகிறாரோ தெரியல. மேல் முறையீடு என்று ஒன்றை தடை செய்தால் மட்டுமே இவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள். போகிற போக்கை பார்த்தால் ஒருத்தன் கூட உருப்படியான ஆளாக இருக்க மாட்டார்கள் போல தெரியுதே..அட தேவுடா


Keshavan.J
ஏப் 21, 2025 18:17

பதினோரு வருஷம் கழித்து தீர்ப்பு. இந்த அழகுலே கணம் கோட்டார் அவர்கள் ஜனாதிபதி பார்த்து மூன்று மாதத்திற்குள் மசோதாக்களை படித்து பார்த்து கையெழுத்து போடணும் என்று சொல்கிறார்கள். சரியான காமெடி


MUTHU
ஏப் 21, 2025 19:52

போலீஸ் நபர்களுக்கு கூட குற்ற விசாரணை முடிவுகள் கொடுக்க எந்த கட்டுப்பாடும் கிடையாது.


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 18:15

நன்னடத்தை மற்றும் ஏதாவது தலைவர்கள் பிறந்தநாளை கருதி 89 நாள் தண்டனைகள் தள்ளுபடி செய்யலாம் ..நூறு ரூபா அபராதம் கட்ட தவறினால் பத்து நிமிஷம் தண்டனையை அதிகப்படுத்தலாம்


மோகனசுந்தரம் லண்டன்
ஏப் 21, 2025 18:07

அநீதிக்குத் துணை போகும் நீதிபதிகளும் நீதிமன்றமும். மேலே ஒருவன் இருக்கிறான் கோபாலு. சிறிய வழக்கையும் நீண்ட காலம் எடுத்து செயல்படும் கோர்ட்டை கண்டிக்க வேண்டும்.


Venkateswaran Rajaram
ஏப் 21, 2025 17:49

எங்கே அந்த ஜாமீன் நீதிபதிகள் ?