உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர்களை மீட்க கோரி காங்., - எம்.பி., கடிதம்

மீனவர்களை மீட்க கோரி காங்., - எம்.பி., கடிதம்

சென்னை : வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, குமரி தொகுதி, காங்கிரஸ் எம்.பி., விஜய்வசந்த் எழுதிய கடிதம்:ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் மூண்டுள்ள சூழ்நிலையில், தற்போது, அமெரிக்காவும், ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு சிக்கிய இந்திய மாணவர்களை, மத்திய அரசு சில நாட்களுக்கு முன் மீட்டு வந்தது. ஈரானில், ஆயிரத்துக்கும் அதிகமான குமரி மீனவர்கள் தங்கி தொழில் செய்து வருகின்றனர்.இஸ்ரேலிலும், பல மீனவர்கள் பணி செய்து வருகின்றனர். அவர்கள் தற்போது பதற்றத்துடன் இருக்கின்றனர். எனவே, மத்திய அரசு அங்குள்ள மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி