மேலும் செய்திகள்
ராமதாஸ் பற்றி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு
27-Nov-2024
சென்னை:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகையை கண்டித்து, வரும் 27ம் தேதி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடக்கும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கையில், 'வரும் 27ம் தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, எனது தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடக்கும். ஜனநாயகத்தின் மீதும், இந்திய அரசியலமைப்பின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் ஒன்று கூடுவோம்' என, கூறியுள்ளார்.'வரும் 27ம் தேதி திருவண்ணாமலை வரும் அமித் ஷா, அம்மாவட்ட பா.ஜ., புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கிறார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்கிறார்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
27-Nov-2024