உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதி மறுசீரமைப்பு குறித்து நிலைப்பாட்டை வகுக்க குழு; காங்கிரஸ் அறிவிப்பு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து நிலைப்பாட்டை வகுக்க குழு; காங்கிரஸ் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தனது நிலைப்பாட்டை வகுக்க காங்கிரஸ் ஒரு குழுவை அமைக்கும்'' என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்தார்.இது குறித்து, வேணுகோபால் அளித்த பேட்டி: தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் பல சிக்கல்கள் உள்ளன. மேலும் ஒரு தேசியக் கட்சியாக, அனைத்து அம்சங்களையும் கவலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த விஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு செய்தால், லோக்சபாவில் ஒரு சில மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் என்று அச்சம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இன்னும் அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை. இந்தப் பிரச்னையில் உள்ள அனைத்து சந்தேகங்கள், வதந்திகள் மற்றும் ஊகங்களைத் தீர்க்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கையை வெளியிடுவது அவசியம். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை எதிர்க்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தனது நிலைப்பாட்டை வகுக்க காங்கிரஸ் ஒரு குழுவை அமைக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்பட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.காங்கிரஸின் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்கிடையே, 'புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள கூடாது' என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Apposthalan samlin
மார் 27, 2025 17:38

மக்கள் தொகை அதிகமாக இருந்தால் குறைக்க வேண்டும்


krishnamurthy
மார் 27, 2025 17:02

மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் செய்தால்தான் எல்லா மக்களும் பலனடைய முடியும்


M R Radha
மார் 27, 2025 13:12

வெத்து வேட்டு வேணுகோபால் உன்ன யாரு சீண்டரா? இந்திரா வீட்டு பத்து பாத்திரம் கழுவி, வீட்டை கூட்டிய பிரதீபா பாட்டீலுக்கு அடித்த ஜனாதிபதி சான்ஸ் ஒனக்கு கண்டிப்பாக கெடையாது


ஆரூர் ரங்
மார் 27, 2025 12:59

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் அரசு மூன்று முறை தொகுதி மறுவரையறை செய்தது . அப்போதெல்லாம் யாரை கலந்தாலோசித்தனர்?


கண்ணன்
மார் 27, 2025 12:10

எல்லாம் அறிந்த “அறிவாளிகள்”(வெறும் வாளிகள்) நிறைந்த கட்சி !!


Narasimhan
மார் 27, 2025 11:39

உங்க கட்சி உயிரே ஊசலாடிக்கிட்டிருக்கு. திமுகவோ த்ரினாமுலோ குழு அமைப்பதில் நியாயமிருக்கிறது.


புதிய வீடியோ