உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து பண்டிகையை சீர்குலைக்க சதி!

ஹிந்து பண்டிகையை சீர்குலைக்க சதி!

கர்நாடக காங்., அரசு, தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அரசு, இனிப்பு பலகாரங்களுக்கு, புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து மிரட்டுகிறது. மாசு கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றோர் ஹிந்து பண்டிகைகளின்போது மட்டுமே, வெளியே வந்து எச்சரிக்கை செய்யும் அதிசய பிறவிகள். ஹிந்து பண்டிகையின் உற்சாகத்தையும், ஒற்றுமையையும் குலைப்பது தான் இவர்கள் நோக்கம். ர ம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது, பிரியாணி, கேக் வகைகளுக்கு ஏன் இந்த கட்டுப்பாடு வரவில்லை? ஹிந்து பண்டிகை காலத்தின் தான், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்கின்றன. இது, இடதுசாரி அமைப்புகளின் சதிவேலை. இச்சதிகளை, முறியடிக்க வேண்டும். -காடேஸ்வரா சுப்ரமணியம் தலைவர், ஹிந்து முன்னணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

baala
அக் 14, 2025 09:49

யாரு செய்கிறார்கள்? நீங்களா?


மணிமுருகன்
அக் 12, 2025 00:06

அரசியல்வாதிகள் வரும்போது பட்டாசு போடப் படுகிறது பிறந்த நாள் பொய்வழக்கு தீர்ப்பு அமலாக்கத்துறை விசாரிக்க தடை வெடி என்று வருடத்தில் பல நாட்கள்பட்டாசு கொளுத்துவது தவறில்லை மாநிலம் முழுவதும் மக்கள் வருடத்தில் ஒரு நாள் வெடி வெடிப்பதற்கு இவ்வளவு தடை விதிப்பது ஏனோ மாசிக் கட்டுபாடு என்றால் அரசியல்வாதிகளின் வாகன போக்குவரத்தை குறைக்கவும்


Ramesh Sargam
அக் 11, 2025 11:07

கோலாலம்பூர்:மலேஷியாவில் ஹிந்துக்கள் மற்றும் பவுத்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி பரிமாறுவதற்கு தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக செய்தி. ஆனால் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் இந்திய மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகா, தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் ஹிந்துக்களின் மத உணர்வை மதிக்காமல் வரும் தீபாவளி பண்டிகை அன்று ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தடை விதிக்கிறார்கள். மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஹிந்துக்களை மகிழ்வுக்கும் வகையில் அங்குள்ள கவர்னர் தீபாவளிக்கு அரசு விடுமுறை கொடுத்து கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் ஹிந்துக்களை மதித்து அறிக்கை விட்டிருக்கிறார். ஆனால் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் ஹிந்துக்களை மதிக்க தவறிவிட்டன காங்கிரஸ், திமுக போன்ற அரசியல் கட்சிகள். வேதனை.


Ramesh Sargam
அக் 11, 2025 10:35

இப்படி தடை விதித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்துவது சரியல்ல. நகரத்தில் தினம் தினம் வாகனங்கள் உண்டாக்கும் புகையைவிட, இந்த தீபாவளி பட்டாசு புகை அப்படி ஒன்றும் காற்று மாசு ஏற்படுத்திவிடாது.


sundarsvpr
அக் 11, 2025 10:33

தமிழ்நாட்டில் தி மு க ஒரு குறுப்பிட்ட ஜாதி எதிர்ப்பாளர் என்று கூறிக்கொண்டு சீர்குலைப்பவர்கள்.


SS
அக் 11, 2025 10:03

எல்லா பிரச்சனைகளிலும் மத கண்ணோட்டம் கூடாது. தரம் குறைந்த இனிப்புகளை சாப்பிட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கும் அரசாங்கத்தை குறை கூறுவர்....


Barakat Ali
அக் 11, 2025 09:28

உண்மைதான் ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை