உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி

என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் நடந்த அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம், ''என்னை கொலை செய்ய சதி முயற்சி நடக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் என்னைக் காப்பாற்றினார்'' என குறிப்பிட்டார்.திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம், அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், எஸ்.ஆர்.எம்., பல்கலை தமிழ்ப்பேராயம் ஆகியவை இணைந்து நடத்தும், ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில், இன்று (மே 03) துவங்கியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qdjif0am&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=03 நாட்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இன்று மத்திய அமைச்சர் நட்டா, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில், நேற்று விபத்தில் சிக்கி உயிர் தப்பியதை சுட்டிக்காட்டி, மதுரை ஆதினம் பேசியதாவது: பொல்லாப்பயலுக. அப்பா, இந்த தொலைக்காட்சி, ஒன்று என்றால் ரெண்டு என்கின்றனர். நேற்று கூட ஒரு சம்பவம் நடந்து விட்டது. என்னை கொலை செய்ய சதி செய்து விட்டனர். தருமை ஆதினம் ஆசி தான் என்னை காப்பற்றியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமான் தான் என்னை காப்பாற்றினார். இன்று இந்த இடத்திலே நிப்பேனா என்ற அளவுக்கு நேற்று ஆகி விட்டது. அவ்வளவு துாரம் நடந்து விட்டது. நல்ல காரியத்தை பேச முடியவில்லை ஐயா. இவ்வாறு மதுரை ஆதினம் பேசினார்.

மனிதாபிமானம்; நட்டா பேச்சு!

மாநாட்டில் நட்டா பேசியதாவது: வாழ்க தமிழ், வளர்க தமிழகம். ஆன்மிகம் மட்டுமின்றி சமூக சேவையிலும் தருமபுரம் ஆதினம் ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்கது. மனிதாபிமானத்தை சைவ சித்தாந்தம் வலியுறுத்துகிறது. தேவாரம், திருவாசகம் தற்போதும் உணர்வுப்பூர்வமாக பாடப்படுகிறது. பாரம்பரிய சைவ சித்தாந்தம் பின்பற்றும் சைவ ஆதினம் பற்றி நான் அறிவேன். சைவ சித்தாந்தத்திற்கு தமிழகம் சிறந்த மண். இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் ரவி பேச்சு

''சைவ சித்தாந்தம் தமிழுக்கு அடையாளம். சைவ சித்தாந்தத்தில் சமுதாய வேறுபாடு கிடையாது. சனாதன தர்மமே ஆன்மிகத்தின் அடையாளம். அனைவரும் ஒன்று என சனாதனம் கூறுகிறது. பக்தி நிலையிலேயே சிவனை அடைய முடியும். பக்தி தான் ஆன்மிகத்தை காப்பாற்றுகிறது'' என மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sangi Saniyan
மே 03, 2025 17:07

உலகத்துல உள்ள லூஸ் எல்லாம் எல்லாம் நம்ம நாட்டில் தான் இருக்குதுக?


Barakat Ali
மே 03, 2025 14:12

மடத்து சொத்துக்கள் முன்னாடி நின்னு எங்க துக்ளக்கார் செலுப்பி எடுத்துட்டாரோ ????


தமிழன்
மே 03, 2025 13:53

கொலை முயற்ச்சி தான் என்றால் அதற்கான அவசியம் என்ன? அதை சாமி சொல்லவில்லை


Ramesh Sargam
மே 03, 2025 15:06

மடத்தின் சொத்துக்களை ஆட்டை


Mohan
மே 03, 2025 17:38

இதா இருட்டுக்கடைல அல்வா வாங்கி காசு கூட குடுத்துருக்கமாட்டான் ஏழரை வந்ததுள்ள ..அதையே ஆட்டைய போட்டு அல்வா வித்து உலகளவில் பேமஸ் ஆகலாம்னு கணக்கு போட்ட மாதிரி ..அமுக்கம ஆதீனத்தை போட்டுட்டா பிரச்சனைன்னு சொல்லி நம்ம ஆளுங்கள அனுப்பி ஆதாய போற்றுலாம் இல்ல ...இந்நேரம் ஆதீன சொத்துக்களை கணக்கு போட்டு இருப்பாங்க இந்த குடும்பம். ஆனா இவுனுகளுக்கு ஒண்ணுமே வரமாட்டேங்குது பாரு ...எமனையே வித்திருவங்க போல


Padmasridharan
மே 03, 2025 13:51

கொலை செய்ற அளவுக்கு என்ன குத்தம் சாமி. தவறு செய்யும் மனுஷா. காப்பாற்றுவது கடவுள்.. நன்று. . நன்று சாமி


sridhar
மே 03, 2025 13:28

ஹிந்துக்களே , கோவிலுக்கும் போங்க . திமுகவுக்கும் வோட்டு போடுங்க . .. என்ன ஜென்மங்களோ


thehindu
மே 03, 2025 13:17

காமெடிகளா, அல்லது ?


M R Radha
மே 03, 2025 13:46

ஓசி 200ரூவா நீயெல்லாம் கருத்து போடாதே


Svs Yaadum oore
மே 03, 2025 13:16

இவ்வளவு தூரம் பேசும் இவர் அவர்கள் யார் என்று அடையாளம் காட்ட முடியுமா ??...மக்களுக்கு உண்மையான சேவை செய்து இருந்தால் இப்போது ஆபத்து என்றால் ஆதரவு பெருகும் ..அதை செய்தார்களா ??...சினிமா மோகத்தில் ஆபாச தற்குறிகள் பெருகியுள்ள நாட்டில் சைவ திருமுறைகளை இளைஞரிடம் கொண்டு சேர்க்க ஆதீனம் என்ன செய்தது ??...நாத்திகர்களை மேடையேற்றி ஹிந்து மதத்தை இகழ்ந்து பேச மேடை அமைத்து கொடுத்தது யார் ??......கூடா நட்பு கேடாக முடியும் என்ற வாக்கு பொய்க்காது ....


Balasubramanyan
மே 03, 2025 12:54

Why he is interested and commenting. It is concerned only or hindus.


hasan kuthoos
மே 03, 2025 12:33

யாரு உங்களை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள் , அதை சொல்லுங்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
மே 03, 2025 17:57

சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இந்துக்களுக்கு எதிராக செயல்படும் கூட்டம்தான். ஆதீனத்தை அகற்றிவிடடால் அடுத்த ஆதீனம் வருவதற்குள் மடத்து சொத்துக்களை அரசுடமை ஆக்குகிறோம் என்று கட்சியுடமை ஆக்கிவிடலாம்


சமீபத்திய செய்தி