உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும்: தி.மு.க., கூட்டிய கூட்டத்தில் தீர்மானம்

தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும்: தி.மு.க., கூட்டிய கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: ''லோக்சபா தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அதை பார்லிமென்டில் பிரதமர் அறிவிக்க வேண்டும்,'' என்று வலியுறுத்தி சென்னையில் தி.மு.க., கூட்டிய கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னை கிண்டியில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்வர்கள் மற்றும் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

முக்கியமான நாள்

கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:அழைப்பை ஏற்று வருகை தந்துள்ள அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன். ஜனநாயகத்தை காக்க அனைவரும் ஒன்று திரண்டு உள்ளோம்.பன்முகத் தன்மை கொண்டது இந்தியா. தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களில் கடுமையாக பாதிக்கும். பல்வேறு மொழி, இனம், கலாசாரம் கொண்டது இந்தியா.

கூட்டாட்சி

ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளோம். இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். இது எண்ணிக்கை பற்றியதல்ல; அதிகாரம் பற்றியது.மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை நடந்தால், சொந்த நாட்டிலேயே அதிகாரம் அற்றவர்களாக நம்மை மாற்றி விடும்.

மாநில உரிமைகள்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். இது, தொகுதி மறு சீரமைப்புக்கு எதிரான போராட்டம் அல்ல; நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சி.இது தொடர்பாக கோவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை. குழப்பமாக இருக்கிறது. மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாகவே பா.ஜ., எப்போதும் இருந்து வருகிறது.

12 தொகுதிகள்

தொகுதி குறைந்தால் நிதி பெறுவதில் சிரமம் ஏற்படும். அனைத்து தரப்பு மக்களின் விளைவாகவே தேசம் உருப்பெற்றது. கூட்டாட்சிக்கு வரும் சோதனைகளை ஜனநாயக அமைப்புகள் தடுத்து நிறுத்தின.பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒன்று கூடி உள்ளோம். கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நடவடிக்கை இது. நமது பண்பாடு அடையாளம் ஆபத்தை சந்திக்கும். சமூக நீதி பாதிக்கப்படும். தமிழகம் 8 முதல் 12 தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது. தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழந்து விடும்.

வலிமை குறையும்

மாநில உரிமையை நிலைநாட்ட தொடர் நடவடிக்கை அவசியம். ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் தான் வெற்றி பெற முடியும். எந்த சூழ்நிலையிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. குறையவும் விடக்கூடாது. மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை குறைந்தால், நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமை குறையும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மம்தா புறக்கணிப்பு

தி.மு.க., கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, பிஜூ ஜனதாதளம், ஆம் ஆத்மி, ஜனசேனா, பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, கேரளாவை சேர்ந்த கட்சிகள் என 8 மாநிலங்களை சேர்ந்த 23 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கூட்டம்

கூட்டம் முடிவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டம், ஹைதராபாத்தில் நடக்கும் என்று அறிவித்தார்.

தீர்மானங்கள்

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :* ஜனநாயகத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அதனை வெளிப்படையாகவும், தொடர்புடைய அனைத்து மாநிலங்கள், மாநில அரசுகள், அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசித்து, விவாதம் மேற்கொண்டு அதில் கிடைக்கும் கருத்துகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். * 42, 84 மற்றும் 87-வது அரசியலமைப்புத் திருத்தங்களின் நோக்கம் மக்கள்தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களை பாதுகாப்பதும் / ஊக்குவிப்பதும் ஆகும். கடந்த 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான லோக்சபா தொகுதிகளின் மறுசீரமைப்பை மேலும், 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும். * மக்கள்தொகை பெருக்கத்தை திறம்பட செயல்படுத்தி அதன் விளைவாக மக்கள்தொகை விகிதம் குறைந்த மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்கு மத்திய அரசு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களைச் செய்ய வேண்டும். * குறிப்பிட்ட மாநிலங்களின் எம்.பி.,க்கள், மேலே குறிப்பிடப்பட்ட கொள்கைகளுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து பார்லிமென்ட்டில் குரல் எழுப்புவார்கள். * எம்.பி.,க்கள் குழு, பார்லிமென்ட் கூட்டத்தொடரின்போது பிரதமரிடம் தங்களது கருத்தை தெரிவிக்கும். * கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சிகள், இந்த பிரச்னையில் அந்தந்த மாநிலங்களில் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். * கடந்த கால தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வரலாறு, அந்த நடவடிக்கைகளின் விளைவுகள் குறித்த தகவல்கள் மக்களிடம் தெரிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

தாமரை மலர்கிறது
மார் 22, 2025 18:58

தென்னிந்தியா மக்கள் தொகை 26 சதவீதலிருந்து 19 சதவீதமாக குறைந்துவிட்டது. அதற்கு ஏற்றவாறு தான் சீட்கள் கொடுக்கப்படும். ஊரை கூப்பிட்டு ஒப்பாரி வைப்பதால் ஒன்றும் நடக்கபோவதில்லை. தமிழகமேயர் ஸ்டாலினுக்கு என்ன பவர் இருக்குன்னு இத்தனை பேர் தமிழகத்திற்கு வெட்டியா வந்துட்டாங்க. போய் எல்லோரும் அமித் ஷாவை பாருங்க. ஏதாவது ஒன்னு ரெண்டு சீட் அட்ஜஸ்ட் பண்ணுவார்.


Bhakt
மார் 22, 2025 19:50

சும்மா வந்திருக்க மாட்டாங்க. Rs.200 200 பெட்டிகள் நிறைய வாங்கிகொண்டு தான் வந்திருப்பார்கள்.


R.P.Anand
மார் 22, 2025 18:09

மக்கள் தொகை குறை சமே அதுக்கு என்ன குடுத்த. இப்போ டாஸ்மாக் ஓபன் பண்ணி இன்னும் குறைசுட்ட


visu
மார் 22, 2025 17:37

ஏற்கனவே 1971 முதல் இரெண்டு முறை தொகுதி மறுவரையை தள்ளி வைத்து 50 வருடங்கள் கடத்தியாகி விட்டது 3 முறை 25 வருடம் தள்ளி வைத்தால் ஜன நாயக நாட்டில் மக்கள் உரிமையை தடுக்க முடியுமா? தொகுதி குறைந்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை அரசியலை தொழிலா செய்யும் கட்சிகளுக்குத்தான் பாதிப்பு அதெற்குதான் மக்களை தூண்டுகிறார்கள் இதில் வட இந்தியா மாநிலங்கள் பேருக்குத்தான் பேசுவாங்க அவங்களுக்கு அதிக தொகுதி கிடைத்தால் அவங்க அரசியலுக்கு நல்லதுதானே


தமிழ்வேள்
மார் 22, 2025 16:19

தொகுதி மறுசீரமைப்பு செய்வதோடு , தமிழகத்தையும் மூன்று தனி மாநிலங்களாக , சென்னையை தனி யூனியன் பகுதியாக பிரிப்பார்கள் ....அப்போ என்ன செய்வே ? என்ன செய்வே ?


Mediagoons
மார் 22, 2025 16:00

ஒட்டுமொத்த நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தில் அணைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகளை உயர்த்தி கொடுத்துவிடலாம். ஒட்டு மொத்த நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் இந்து மதவாத, இந்தி இனவாத , வட இந்திய, அரசு நியாயமாக செயல்படாது .


krishna
மார் 23, 2025 21:31

EERA VENGAAYAM PERA PAARU MEDIAGOONS.KEVALAM.MURASOLI THUDAITHA MOOLAYODU THIRIUM OOPIS 200 ROOVAA ENA BOLI PEYARIL KADHARU.CORRECTAA SET AAGUM.


Balaa
மார் 22, 2025 15:19

அப்ப அடுத்த 25 வருடங்களுக்கு தேஜ முன்னணி ஆட்சிதான்..... வியட்நாம் வீடு ராகுல் கோச்சுக்க போரார்...


Balaa
மார் 22, 2025 15:17

ம்ம்ம்.....ஜாலிடே டூர். ஐதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் ।....


ram
மார் 22, 2025 14:49

தி.மு.க விட கோமாளிகள் வேற எங்கேயும் பார்க்கமுடியாது என்பது இதிலிருந்தே நல்லா தெரியும். ஈந்த கோமாளிங்க எப்படி நாட்டை நல்வழியிலே வழிநடத்தும்.. இவங்கதானே இந்த தொகுதி மாற்றத்தை கொண்டுவந்தது.. அதுக்கு இவங்களே தடையும் கொண்டு வருவாங்களாம்... உங்களோட பைத்தியக்கார தனத்துக்கு அளவேயில்லையா... தேவையற்ற நேரம் வீனடிப்பு சம்பளம் என்ற பெ.யரிலே மக்களோட வரிப்பணம் வீணடிப்பு.. இதையெல்லாம் மத்திய அரசு வேடிக்கைதான் பார்க்குது..


naranam
மார் 22, 2025 14:45

பரமார்த்த குருவும் சீடர்களும்! இவர்களின் கொமாலித் தனத்துக்கு அளவே இல்லை. நல்ல தமாஷ் தான். இவர்களின் ஓலம் தோற்றவர்களின் அழுகுரல் போல ஒளிப்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


எஸ் எஸ்
மார் 22, 2025 14:44

பிஜேபி மற்றும் அதன் கூட்டணி கட்சி முதல்வர்கள் இதே போல் கூட்டம் நடத்தி பதிலடி தர வேண்டும்


முக்கிய வீடியோ