உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் போராட்டம்

 நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் போராட்டம்

சென்னை: நெல் கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒருங்கிணைந்த பருவகால பணியாளர் கூட்டமைப்பினர், சென்னையில் உள்ள தமிழக நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக பருவகால பணியாளர்களை நிரந்தரம் செய்வதற்காக, 2013 முதல், 2016 வரை பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு, 1,600 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த பட்டியலை, அரசு நிறுத்தி வைத்துள்ளது. பருவகால பணியாளர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி