உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, விதிக்கப்பட்ட ஒரு மாதம் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்படாததை தொடர்ந்து சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரியாக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அவர் தற்போது தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராக இருக்கிறார்.விசாரித்த சென்னை ஐகோர்ட், அன்சுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, '' பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு, 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இந்த தொகையை, அன்ஷுல் மிஸ்ராவின் ஊதியத்தில் அரசு பிடித்தம் செய்ய வேண்டும்' என ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பளித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து அன்ஷுல் மிஸ்ரா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று (ஜூன் 12) ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு, விதிக்கப்பட்ட ஒரு மாதம் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட 25,000 ரூபாய் அபராத தொகையை 3 வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramaswamy SD
ஜூன் 15, 2025 13:50

நிலம் கையகப்படுத்திய அரசுக்கு வீடுகட்டவோ அல்லது ரோட விரிவாக்கம் செய்ய நாற்பது ஆண்டாக என்ன செய்து கொண்டிருக்கிறது.கையகப்படுத்திய நிலத்தை தற்சமயம் யார் அனுபவித்து வருகிறார்.பட்டா நிலத்தை புறம்போக்காக மாற்றிய அதிகாரி யார். அவர்கள் யாராக இருந்தாலும் நீதி மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கிய நேரத்தில் பட்டா நிலத்த புறம்போக்காக மாற்றி யாருக்கு சலுகை செய்த அதிகாரியை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும்.


D Natarajan
ஜூன் 12, 2025 21:16

எதற்கு இந்த... நீதி மன்றம். வெட்கக்கேடு


சிட்டுக்குருவி
ஜூன் 12, 2025 18:07

அரசியல் அமைப்பு படி ஆட்சியின் கடமை சட்டம் இயற்றுவதும் ,மக்கள் நன்மைக்கான திட்டம் தீட்டுவதும் ,அந்த திட்டத்தை நிறைவு செய்வதை கண்காணிப்பதும்தான் .அரசின் திட்டங்களை சட்டதிட்டங்களுக்குட்பட்டு நிறைவேற்றுவது அரசு அதிகாரிகளின் தனிப்பட்ட கடமை .இதில் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு தன்னிச்சையாக நிறைவேற்றுவது தலையாய கடமை .தவறும் பட்சத்தில் அதிகாரிகளே பொறுப்பேர்க்கவேண்டும் என்பது இதில் இருந்து கர்ப்பிக்கப்படும் பாடமாகும் .அதிகாரிகள் உணரவேண்டும் .அதிகாரிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் காமராஜரின் ஆட்சிக்காலத்தில் நடந்த உண்மைநிகழ்வு .காமராஜரின் நண்பர் ஒருவர் சினிமா அரங்கை புதிதாக கட்டி திருப்புவிழாவிற்கு ஏற்பாடு செய்து முதன்மந்திரி காமராஜர் அவர்களை திருப்புவிழாவிற்கு அழைத்திருந்தார் ..திறப்புவிழா அன்றுவரை மின்சாரமைப்புகளை சரிவர செய்யாததினால் கலெக்டர் அனுமதி கிடைக்கவில்லை .திறப்புவிழாவை முடித்துவிட்டு காமராஜர் நேரில் கலெக்டர் வீட்டிற்க்கே சென்று அவரின் நேர்மையை பாராட்டினார் என்பது உண்மை . இதை போன்ற நேர்மையை எல்லா காலங்களிலும் அதிகாரிகள் பின்பற்றினால் நேர்மை செழிக்கும் ,அதிகார மீறல்கள் குறையும், அதனால் ஏற்படும் லன்ஜ லாவண்யங்கள் குறையும்.


K V Ramadoss
ஜூன் 12, 2025 19:48

அரசாங்க அதிகாரிகள் நேர்மையாக இருந்து, ஒன்றுபட்டால் லஞ்ச லாவண்யங்களை நிச்சயமாக ஒழிக்க முடியும்.


என்றும் இந்தியன்
ஜூன் 12, 2025 17:24

இப்போது சமீப காலமாக வரும் தீர்ப்பு நிச்சயம் நீதிபதிகளால் எழுதப்படவில்லை. பணம் வாங்கி அதை பொறுத்து நீதி எழுதப்படுகின்றது அநீதிபதிகளால் என்று சந்தேகமின்று தெளிவாகத்தெரிகின்றது


GMM
ஜூன் 12, 2025 16:37

பணியில் உள்ள அதிகாரி மீது நீதிபதி பொது மக்கள் போல் சிறை, அபராதம் முன் அனுமதி இல்லாமல் விதிக்க எந்த சட்ட பிரிவு அனுமதிக்கிறது என்று மனு தாக்கல் செய்த வக்கீல் கூற முடியுமா? நிர்வாகத்தில் ஊழல், தாமதம் போன்ற குறை உண்டு. அதனை நிவர்த்தி செய்ய கட்சிகள் அரசு அலுவலகம் சென்று ஆதிக்கம் செலுத்துவதை தேர்தல் ஆணையம் தடுக்க முடியவில்லை. உடனே வழக்கு. உலகம் முழுவதும் செய்தி. நிர்வாகத்தை திராவிடம் பாழ் ஆக்கி விட்டது. ஒரு நேர்மையான அரசு அதிகாரி தவறான வாதம் செய்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் கட்சிகளால் நீதி, நிர்வாக சண்டையாக மாறும். குழப்பம் உருவாகும்.


M S RAGHUNATHAN
ஜூன் 12, 2025 16:20

தீர்ப்பை அமல்படுத்தால் ஏற்பட்ட விளைவுகளுக்கு யார் பொறுப்பு ? அவமதிப்பு வழக்கு தொடர்ந்தவருக்கு என்ன நிவாரணம்? பணம் படைத்தவர்களும், அரசியல் அதிகாரம் உள்ளவர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் ஒரு நீதி, சாமான்ய சாதாரண மக்களுக்கு ஒரு நீதி. எங்கே போகிறது நீதி பரிபாலனம் ?


M S RAGHUNATHAN
ஜூன் 12, 2025 15:33

இதுக்கு பருத்தி மூட்டை கோடௌனிலேயே இருந்திருக்கலாம்.


rama adhavan
ஜூன் 12, 2025 14:21

இது போன்ற தமாஷ் தீர்ப்புகளை பார்த்து சிரிப்பு வருகிறது. கீழ் கோர்ட் தண்டனை தருமாம். அதை உடன் மேல் கோர்ட் அதை நிறுத்துமாம். இதன் படிப்பினை - நிதி வெல்லும் நீதி அடி வாங்கும்.


தமிழன்
ஜூன் 12, 2025 13:51

இது போல சாதாரண மனிதருக்கு வாய்ப்பு கிடைக்குமா? குற்றவாளிகளிடம் கரிசனம் காட்டும் மன்றங்கள் மக்களிடமும் காட்ட தவறுவது ஏன்? மக்களும் தான் வரி கட்டுகிறார்கள் . வரி மட்டும் தான் எல்லோருக்கும் சமமாக இருக்குமா.. தண்டனை உட்பட மற்றவை இருக்காதா


Ramesh Sargam
ஜூன் 12, 2025 12:38

குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கே நீதிமன்றம் ஆதரவு. இப்படி இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். இந்த தீர்ப்பு என்ன சொல்கிறது? நாமும் பல தவறுகள் செய்துவிட்டு தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்றல்லவா...? நம் நாட்டில் நீதிமன்றங்களின் செயல்பாடே சரியில்லை. அவர்களை யார் தண்டிக்கமுடியும்? நாட்டின் பிரஜைகள் நினைத்தால் அப்படிப்பட்ட நீதிமன்றங்களுக்கும் பாடம் புகட்டலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை