கான்ட்ராக்ட் நிறுவனங்கள் கல்தா
வேளாண் துறையினர் கூறிய தாவது: ஏப்ரல் துவங்கி அக்டோபர் வரை காரீப் சீசன், செப்டம்பர் துவங்கி, பிப்ரவரி வரை ராபி சீசன். இரு வேறு கட்டங்களிலும் டிஜிட்டல் பயிர் சர்வே செய்ய வேண்டும். அதனடிப்படையில் தான், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பெற முடியும். இந்நிலையில், பயிர் சர்வே பணிக்கு தனியார் கான்ட்ராக்ட் நிறுவனத்தினர் ஆட்களை ஏற்பாடு செய்யாததால், வேளாண் துறையினரை இப்பணியை செய்து முடிக்க வேண்டும் என்று, உயரதிகாரிகள் நிர்ப்பந்திக்கின்றனர். முழு நேரமும் இந்த பணியை செய்வதால், துறை சார்ந்து தினசரி மேற்கொள்ள வேண்டிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, களப்பணியில் ஈடுபடும் வேளாண், தோட்டக்கலை துறையினரே, தங்களுக்கு தெரிந்த விவசாய குடும்பத்தில் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து, டிஜிட்டல் பயிர் சர்வே செய்யும் பணியில் ஈடுபடுத்த, உயரதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால், இந்த வேலை நிரந்தரமில்லை எனக்கருதி, யாரும் முன்வருவதில்லை. இந்நிலையில், 'டிஜிட்டல் பயிர் சர்வே' பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வேளாண், தோட்டக்கலை கள அலுவலர்களை உயரதிகாரிகள் நிர்ப்பந்திக்கின்றனர். மாறாக, 'கான்ட்ராக்ட்' டெண்டர் எடுத்த நிறுவனத்தினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.