ஒப்பந்த முறையில் தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கும்
உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக, ஒப்பந்த முறையில் தி.மு.க., அரசு நியமனம் செய்து வருகிறது. இது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும்.ஏழை, எளிய மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டித் தருகிறது. இந்தப் பணிகள் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை கண்காணிக்கும் பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள் நிரந்தர பணியில் இருப்பர். ஆனால், இந்த பணிகளையும் ஒப்பந்த முறையில் நிரப்ப, தி.மு.க., அரசு முயற்சிப்பது சமூக நீதிக்கு எதிரானது.அரசின் ஒப்பந்த பணிகளை கண்காணிக்கும் பொறியாளர்கள், ஒப்பந்த பணியாளர்களாக இருப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்