உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு பேச்சு: திருப்பூரில் இயக்குநரால் எழுந்தது சர்ச்சை

ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு பேச்சு: திருப்பூரில் இயக்குநரால் எழுந்தது சர்ச்சை

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில், ஆர்.எஸ்.எஸ்., குறித்து தவறாக பேசிய திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பனை கண்டித்து, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக, இதைத் தட்டிக்கேட்ட ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி தாக்கப்பட்டார்.திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், திருப்பூர் காங்கேயம் ரோட்டில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசினார். அதில், காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்., தான் என்றார். இதையறிந்து, அங்கு சென்ற ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி மோகன சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம், 'இதுபோன்று சர்ச்சையான பேச்சுகளை எப்படி அனுமதிக்கிறீர்கள்?' என்று, கேள்வி எழுப்பினர்.இருதரப்பு இடையே வாக்குவாதம் எழுந்தது. கூட்டத்தில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியை தள்ளி விட்டார். வாக்குவாதம் முற்றியது. ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியை சிலர் சூழ்ந்து தாக்கினர். போலீசார் சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். சர்ச்சை பேச்சு, தாக்குதல் குறித்து அறிந்த ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொதுச்செயலர் கிஷோர்குமார், பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் தொண்டர்கள், காங்கேயம் ரோட்டில் இரவு, 11:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.ஆர்.எஸ்.எஸ்., குறித்து தவறாக பேசிய இயக்குநர் மீதும், நிர்வாகியை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போராட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினரிடம், போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தியும், போராட்டத்தை கைவிட மறுத்தனர்.இது தொடர்பாக சட்ட ரீதியாக அணுகுமாறும், போலீசில் புகார் கொடுக்கவும் தெரிவிக்கப்பட்டது.மறியல் ஒரு புறம் நடக்க, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர், மறியலில் ஈடுபட்டவர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி மறியலில் ஈடுபட்டனர். இருதரப்பினரிடம் பல கட்ட பேச்சு நடத்தி போராட்டத்தை கலைத்தனர். நள்ளிரவு போராட்டம் முடிவுக்கு வந்தது. சர்ச்சை பேச்சு, தாக்குதல் உள்ளிட்டவை குறித்து நேற்று ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., தரப்பில், திருப்பூர் தெற்கு போலீஸ் மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் புகார் அளித்தனர்.

புத்தக காட்சியும்,

சர்ச்சை பேச்சுகளும் திருப்பூரில், அரசு சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் பேச்சாளர்களால் சர்ச்சைகள் எழுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஆண்டு ஆண்டாள் பிரியதர்ஷினி என்பவர் பேசுகையில், 'கொங்கு மண்ணில் நச்சு பாம்புகள் புகுந்து விட்டன' என்றார். இதை கேட்டு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, தனியார் பள்ளி மாணவர்கள் நடத்திய நடன நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பாடல் வரிகள் இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புத்தக திருவிழா அனைவருக்குமான பொது நிகழ்ச்சி. ஒரு தரப்பின் கருத்துக்களை பிரசாரம் செய்யும் அரசியல் பொதுக்கூட்டம் போல் நிகழ்ச்சிகள் நடந்ததாக, வாசகர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விஷயத்தில், கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், புத்தக கண்காட்சிக்கும், பொதுமக்களின் எண்ணிக்கை சரிந்து விடும். வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வை அனுமதிக்க கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Balasubramanian
ஜன 26, 2025 17:47

சாதாரணமாக சொல்வார்கள் போலீஸ் கையில் லாட்டி எதற்காக.


venugopal s
ஜன 26, 2025 16:11

இவர்கள் மற்றவர்கள் எல்லோரையும் அவதூறாகப் பேசுவார்கள், அவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்.மற்றவர்கள் மட்டும் இவர்களைப் பற்றி உண்மையைச் சொன்னால் கூட பொறுத்துக் கொள்ள முடியாதோ?


AMLA ASOKAN
ஜன 26, 2025 14:53

எதற்கு அங்கு சென்று ஆர்பாட்டமோ, கூச்சலோ போட வேண்டும்? எதிர்வினையை நாகரீகமாக ஆற்றலாம். சச்சரவு, சர்ச்சை, சண்டை - இது தான் இன்றைய அரசியல் நிகழ்வுகள். மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .


Barakat Ali
ஜன 26, 2025 14:41

ஆர் எஸ் எஸ் ஐ குறித்து அதைப்பற்றி அறியாதவர்கள்தான் யாரையோ மகிழ்விக்க அவதூறு பரப்புகிறார்கள் ... அவ்வாறு அவதூறு பரப்புவதால் அவ்வியக்கத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடி வருகிறது .....


Sivasankaran Kannan
ஜன 26, 2025 14:27

திராவிடர்கள் நடத்தும் திராவிட புத்தக விழாவை புறக்கணித்தால் ...


Aravind
ஜன 26, 2025 13:33

ஆர். எஸ். எஸ் அமைப்பை பற்றி இவருக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை, இவர் கூழுக்காக வாயை வாடகைக்கு விடுபவர்


sridhar
ஜன 26, 2025 12:44

மட்டமான கூத்தாடிகளுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கும் சமுதாயம் இப்படி தான் இருக்கும்.


Shankar
ஜன 26, 2025 11:26

எல்லாம் யார் அந்த சார் என்பதை மறைக்கத்தான்.


திகழ்ஓவியன்
ஜன 26, 2025 12:43

சுதந்திர போராட்டத்திற்கு ஒரு துரும்பு கூட அசைக்கா RSS இன்று தேசிய கொடி ஏற்றியது இது தான் காலக்கொடுமை ஏன் 2002 வரை கூட RSS headquarters இல் தேசிய கொடி ஏற்றியதா BEHIND THE SCREEN


J.Isaac
ஜன 26, 2025 10:36

ஆர்எஸ்எஸ்ஐ சார்ந்தவர் தானே


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 26, 2025 12:20

RSSஐ சார்ந்தவர் என்றால் சம்பவம் நடந்த அன்றே அகில உலக அளவில் டிரெண்ட் ஆகியிருக்குமே....திராவிட மாடல் அமைச்சர் அல்லவா அந்த "சார்"


netrikannan
ஜன 26, 2025 09:51

இது போன்ற நிகழ்வுகளை மக்கள் புறக்கணித்தாலே போதும் ,


முக்கிய வீடியோ