உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் இலவச பட்டாவுக்கு ரூ.10,000: தி.மு.க.,வினர் லஞ்சம் கேட்பதாக சர்ச்சை

அரசின் இலவச பட்டாவுக்கு ரூ.10,000: தி.மு.க.,வினர் லஞ்சம் கேட்பதாக சர்ச்சை

சேலம்: அரசு வழங்கும் பட்டாவுக்கு, தி.மு.க.,வினர் தலா, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக, அ.தி.மு.க., நிர்வாகி பேசிய ஆடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், வளையக்காரனுார் ஊராட்சியில், இரு மாதங்களுக்கு முன், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. அதில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, 50க்கும் மேற்பட் டோர் மனு அளித்தனர். இதுகுறித்து, வருவாய்த்துறையினர் விசாரித்து, 30 பேருக்கு பட்டா வழங்க முடிவு செய்தனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களை, வி.ஏ.ஓ., உள்ளிட்டோர் அளவீடு செய்தனர். ஆனால், தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க, தலா, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, அ.தி.மு .க.,வின் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இளைஞர் அணி இணை செயலர் ஜீவா கார்த்திக், வருவாய்த்துறையினர் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 'அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாவுக்கு, ஏழைகளிடம் எதற்கு, 10,000 ரூபாய் கேட்கிறீர்கள்? தி.மு.க., ஒன்றிய துணை செயலர் செந்தில் உள்ளிட்டோர் பணம் கேட்பதாக கூறுகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிப்பேன்' எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அவர் பேசிய ஆடியோ, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. மேலும், 'தி.மு.க.,வை சேர்ந்த, அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய செயலர் ரத்தினவேல், இலவச வீட்டு மனை பட்டாவுக்கு பணம் கேட்பதாகவும், அவரது அராஜக போக்கை கண்டித்து, போராட்டம் நடத்துவோம்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். ஜீவா கார்த்திக் கூறியதாவது: பட்டா பெறும் பயனாளிகளிடம், தலா, 10,000 ரூபாய் கேட்டுள்ளனர். இது தெரியவர, தி.மு.க., ஒன்றிய செயலர் ரத்தினவேல், கிராம உதவியாளர் உள்ளிட்டோரிடம் கேட்டேன். ரத்தினவேல் கேட்டதாக கூறவில்லை. இங்குள்ள தி.மு.க.,வினர் கேட்பதாக, ஒன்றிய செயலரிடம் கூறினேன். நான் பேசிய ஆடியோ பரவியதால், தி.மு.க.,வினர் மொபைல் போனிலும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். பட்டாவுக்கு பணம் வசூலிப்பதை, மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க., ஒன்றிய துணை செயலர் செந்தில் கூறுகையில், ''என் மீதும், ஒன்றிய செயலர் மீதும், அ.தி.மு.க., நிர்வாகி அவதுாறு பரப்புவதால் அவர் மீது வீராணம் போலீசில் புகார் அளிக்க உள்ளேன்,'' என்றார். தி.மு.க., ஒன்றிய செயலர் ரத்தினவேல் கூறுகையில், ''வளையக்காரனுாரில் பட்டா வழங்க, யாரிடமும் நான் பணம் கேட்கவில்லை. என் மீது தவறான தகவல் கூறி, சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஜீவா கார்த்திக் என்னிடம் பேசும்போது, 'நேரில் வந்து விசாரிக்கிறேன். இப்பிரச்னை குறித்து தெரியாது என்றேன். அவ்வளவு தான்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

K Veerappan
டிச 11, 2025 11:55

இவங்க ஆட்சியில் கேட்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.


Ramesh Sargam
டிச 11, 2025 11:48

தி.மு.க.,வினர் லஞ்சம் கேட்பதாக சர்ச்சை. திமுகவினர்தான் லஞ்சம் கேற்பார்கள். திமுகவினரை விட்டு வேறு யார் கேற்பார்கள் ? அவர்களுக்கு மட்டும்தான் அந்த உரிமை இருக்கிறது.


N S
டிச 11, 2025 11:46

லஞ்சம் என்று சொல்லாதீர்கள். இலவசமாக தந்ததிற்கு பிரதிபலன். கேட்டு வாங்கிகொள்கிறார். அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.


DMK Thondan
டிச 11, 2025 11:44

அதுதான் எங்கள் கொள்கையே


Vijay
டிச 11, 2025 09:45

இவங்க கேட்காமல் இருந்தால் தான் சர்ச்சை


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 11, 2025 09:15

பசி, தாகம் இரண்டும் இன்றியமையாதது.. அது போலதான் திமுக என்னும் கிருமிக்கு லஞ்சமும் ....


Modisha
டிச 11, 2025 08:58

திமுககாரன் நல்லவன் என்று சொன்னால் அதுதான் அவதூறு , அதற்கு தான் அவர்கள் வழக்கு போடவேண்டும்.


sundarsvpr
டிச 11, 2025 08:41

லஞ்சம் வாங்குவது மாட்டிர்கள் இல்லை. கொடுக்க சக்தியுள்ளவர் இருக்கும்போது வாங்குவது தவறவில்லை. திராவிட முன்னேற்ற கட்சி நாஸ்திக கட்சி. அந்த கட்சிக்கு வாக்கு அளிக்கும் மக்களும் நாஸ்திகர்கள்தான். லஞ்சம் வாங்குவதில் நேர்மை இருந்தால் தவறு இல்லை. நாஸ்திகர்இடையும் நேர்மை உண்டு. ஒருவனிடம் பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும். திருமணத்திற்கு பணம் தேவை. யாரும் கேட்டால் உதவ மாட்டிர்கள் அவன் லஞ்சம் கேட்டால் தவறவில்லை. ஆனால் தி மு க நிர்வாகிகள் அப்படிப்பட்டவர்கள் இருப்பதாக தெரியவில்லை.


Field Marshal
டிச 11, 2025 08:16

திமுகவில் மேல்மட்டம் முதல் கவுன்சிலர் வரைக்கும் தகுதிக்கு ஏற்றாற்போல குறிப்பிட்ட எல்லைக்குள் சம்பாதிப்பார்கள் ... ரிட்டயர்மெண்ட் கிடையாது


raja
டிச 11, 2025 08:15

அட திராவிடர்கள் ரொம்ப கொரைச்சலா கேக்குறானுவோ...நம்ப முடியலையே... இதே ஒன்கொள் கோவால் புற திருட்டு திராவிடர்கள் இருந்திருந்தால் லட்சம் கோடிகளில் அல்லவா கேட்பானுவோ...


முக்கிய வீடியோ