உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யு.பி.எஸ்.சி., தேர்வு மையத்தில் ஹிந்தி அறிவிப்பால் சர்ச்சை

யு.பி.எஸ்.சி., தேர்வு மையத்தில் ஹிந்தி அறிவிப்பால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. காலை, மாலை என, இரு வேளைகளில் முதல்நிலை தேர்வு நடந்தது.அந்த வகையில், சென்னையில் 69 இடங்களில் நடந்த தேர்வில், 24,364 பேர் பங்கேற்றனர். தேர்வர்களுக்கு உதவும் வகையில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என, இரு மொழிகளில் அறிவிப்பாணைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், சென்னை மண்ணடி, நாராயணப்பா தெருவில் உள்ள மையத்தில், தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஹிந்தி மொழியில் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். வழிகாட்டு நெறிமுறையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சண்முகம்
மே 27, 2025 00:30

IAS/IPS வடக்கனுங்களுக்கு ஆங்கிலம் புரியாதே! இந்தியில் சொல்லித்தான் ஆகணும்


அப்பாவி
மே 26, 2025 06:23

தமிழை நேசிக்கிறேன், தமிழை சுவாசிக்கிறேன்னுட்டு இந்தியை திணிக்கிறேன்.


Svs Yaadum oore
மே 26, 2025 07:26

விடியல் டெல்லியில் ஹிந்திக்காரன் உத்தர பிரதேசம் காங்கிரஸ் இத்தாலி வீடு தேடி சென்று பார்த்தாராம் .....பார்த்த பிறகு சிறப்பான அரவணைப்பு, குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு என்று விடியல் செண்டிமெண்ட்....அதனால் ஹிந்தியும் ஒரே குடும்பத்து மொழிதான் ...எந்த வித்தியாசமும் கிடையாது ..


Svs Yaadum oore
மே 26, 2025 06:18

வழிகாட்டு நெறிமுறைகள் ஹிந்தி மொழியில் மட்டுமே இருந்ததாம் ...ஒரே குடும்பத்து மொழி என்பதால் அது போல ஒட்டியுள்ளார்கள் ...இங்கிருந்து விடியல் டெல்லி சென்று பிறகு டெல்லியில் ஹிந்திக்காரன் காங்கிரஸ் இத்தாலி வீடு தேடி சென்று பார்த்தாராம் .....பார்த்த பிறகு சிறப்பான அரவணைப்பு , குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு என்று விடியல் செண்டிமெண்ட்.....இதை பார்த்து ஒரே குடும்பத்து மொழி ஹிந்தி என்று ஹிந்தியில் அடித்து ஒட்டியுள்ளார்கள் ....விடியலே ஒரே ஹிந்தி குடும்பம் என்று சொன்ன பிறகு இதில் என்ன பிரச்சனை?? ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை