உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் போலி; 10 லட்சம் பேர் நீக்கப்பட்டதாக சர்ச்சை!

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் போலி; 10 லட்சம் பேர் நீக்கப்பட்டதாக சர்ச்சை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தி.மு.க.,வின் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கையில் 10 லட்சம் உறுப்பினர்கள் நீக்கப்பட்டு மீண்டும் சரிபார்த்து பதிவிடும் வகையில் செயலியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கட்சியினரை சோர்வடைய செய்துள்ளது.மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் 'சட்டசபை தேர்தலுக்குள் ஒரு ஓட்டுச் சாவடிக்கு 30 சதவீதம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்' என கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி 2 கோடிக்கும் மேல் புதிய உறுப்பினர்களை சேர்த்து அதில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் தி.மு.க., திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்தை ஜூலை 1ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., சீட், பதவி கனவில் உள்ள மாவட்ட, பகுதி, வட்ட, ஒன்றிய செயலாளர்கள் என ஒட்டுமொத்த கட்சி நிர்வாகமும் வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.இப்பணியை 'பென்' என்ற நிறுவனம் கண்காணித்து ஆலோசனை அளித்து வருகிறது. ஒரு ஓட்டு சாவடிக்கு 30 சதவீதம் என்ற உறுப்பினர் சேர்க்கை 'டார்க்கெட்' சில நாட்களுக்கு முன் 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இச்சேர்க்கைக்கு அலைபேசி ஓ.டி.பி., பெறக்கூடாது என்ற வழக்கால் நெருக்கடியும் ஏற்பட்டது.இந்நிலையில் இதுவரையான சேர்க்கை ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு அலைபேசி எண்ணை அதிகபட்சம் 7 உறுப்பினருக்கு குறிப்பிடலாம் என்பதற்கு பதில் 11 முதல் 50 உறுப்பினர்கள் வரை ஒரே எண் குறிப்பிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றில் பல எண்களை தொடர்புகொண்டு, நீங்கள் 'ஓரணியில் தமிழ்நாடு'ல் உறுப்பினராக சேர்ந்துள்ளீர்களா என விசாரித்தபோது சிலர் 'இல்லை' எனவும், சிலர் 'நம்பர் கேட்டாங்க கொடுத்தோம் உறுப்பினராக விருப்பம் இல்லை' எனவும் பதில் அளித்தனர். சிலர் எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக தெரியவந்தது.இந்நிலையில் ஒரு அலைபேசிக்கு 2 பேர் வரை தான் சேர்க்க வேண்டும். ஒரே எண்ணில் 11 பேருக்குள் சேர்த்தவர்களை மீண்டும் சரிபார்க்கும் வகையிலும், 50 பேர் வரை சேர்த்தவர்கள் விவரங்களை நீக்கும் பணியும் நடக்கிறது. இதன் மூலம் 3 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில் 10 லட்சம் பேர் வரை நீக்கப்படும் பட்டியலில் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: ஆரம்பத்தில் தெளிவாக வழிகாட்டுதல் இல்லை. ஒரு அலைபேசி எண்ணில் 7 பேர், 5 பேர், 11 பேர் சேர்க்கலாம் என மாறி மாறி தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அனைவருக்குமே தனித்தனி அலைபேசி எண்கள் இருப்பதில்லை. அதேநேரம் 18 வயது பூர்த்தியடைந்த பெண்ணின் எண்களை யாரும் தரத் தயாராக இல்லை. ஆனால் 2 பேருக்கு ஒரு அலைபேசி எண் தான் குறிப்பிட வேண்டும் என்ற அடிப்படையில், இதுவரை சேர்த்தவர்களை நீக்கி விட்டு, மீண்டும் அவர்களை சரிபார்த்து அலைபேசி எண்களை சேருங்கள் என வலியுறுத்தப்படுகிறது. இதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தமிழ்வேள்
ஜூலை 31, 2025 22:18

பெண்களின் கைபேசி எண்கள் எதற்கு? திமுகவில் ஒரு ஞானசேகரன் போதாதா?


lana
ஜூலை 31, 2025 13:47

சேர்ந்த மொத்தம் போலி தான். இதுல checking வேறா. போய் பிள்ளை குட்டிகள் ஐ படிக்க வைத்து உருப்பட வைக்கலாம் என்றால் அதுக்குள்ள ஒரு துணை முந்திரி நான் நல்லா படிக்க வில்லை அதனால் முந்திரி ஆகிவிட்டேன் என்று உருட்டு வேறு


M Ramachandran
ஜூலை 31, 2025 11:58

பொய்யுரைத்தல் களவாடுதல் பிரன் மனை ஏகுதல் கற்பழிப்பு கொலை கொள்ளை ஏமாற்றுதல் அரசு கஜானாவை குடும்ப நன்மைக்கு திறந்து விடுதல். காவல்துறையை ஏவல் துறை ஆக்கி தங்களுக்கு வேண்டிய குற்றவாளிகளை வெளியில் உளவு விட்டு மக்கள் மனதில் அச்சம் உண்டாக்குதல் வேண்டாதவர்களை முக்கியமா தங்கள் ரகசியங்களை வெளியிடுவோரை எதிர் கட்சியினரை பொய் கேசு போட்டு சிறையின் உள்ளே வைத்து நய்ய புடைத்தல்இந்த குணநலங்கள் கொண்ட கட்சி. இப்போ உறுப்பினர் செயற்கை செய்யும் தில்லுமுல்லு கலக்கத்தை உண்டாக்கும் கழகம் எது?


T MANICKAM
ஜூலை 31, 2025 10:51

அது எல்லாம் சரி நம்ம ஓரணியில் சேர்ந்த மக்களுக்கு இதோட கொள்கை என்னவென்று தெரியுமா


Natarajan Ramanathan
ஜூலை 31, 2025 10:27

எத்தனை வயது பெண்களாக இருந்தாலும் போன் நம்பரை மட்டும் தீயமுகவிடம் கொடுத்து விடாதீர்கள்.


RRR
ஜூலை 31, 2025 09:19

கேடுகெட்ட திராவிஷ விடியாமூஞ்சி திருட்டு உருட்டு திமுக ஆட்சி...


Tamilan
ஜூலை 31, 2025 09:12

மாண்புமிகு முதல்வரின் நடவடிக்கையால் சரி செய்யப்பட்டுள்ளது. இனியும் உத்தமமான உறுப்பினர்கள் சேர்ந்தது பல கோடிகள் . பாஜாவும் அதிமுகவும் திமுகவின் முன் பிச்சையெடுக்க மறுக்கின்றன


Mettai* Tamil
ஜூலை 31, 2025 09:18

போறபோக்க பார்த்தா எல்லோருமே அவங்ககிட்ட தான் பிட்சை எடுக்கணும் போல .....


vivek
ஜூலை 31, 2025 09:21

திருட்டு திராவிடம் செய்வது உத்தமமான டக்கல்டி


D Natarajan
ஜூலை 31, 2025 08:09

பட்டா வாங்க லஞ்சம். அதேபோல மக்களும் ஓரணியில் சேர்வதற்கு 1 லட்சம் நன்கொடை கேட்க வேண்டும்.


S.V.Srinivasan
ஜூலை 31, 2025 07:55

அரசு செயல்பாடும் ஒன்னும் சொல்றமாதிரி இல்லை. அரசியல் செயல்பாடும் தத்தி தனமா இருக்கு. எதிலும் ஊழல், எல்லாத்துலயும் ஊழல். ஆண்டவா தமிழ் நாட்டை காப்பாத்துப்பா.


Padmasridharan
ஜூலை 31, 2025 07:22

நாம நேர்மையா இருந்தா எல்லாமும் நேர்மையா நடக்கும் சாமி. ஒருத்தர் பண்ற தவறு அவங்களுக்கு தற்காலிகமா சந்தோசத்த கொடுத்தாலும் மத்தவங்களுக்கு அது நிறைய கெடுதல தரும். இப்படித்தான் அம்மா உணவகத்துல சாப்பிட வர்றவங்கள என்ன பன்றாங்க, கல்யாணம் ஆச்சா, போன் நம்பர் கொடுங்கனு கேட்டாங்க. ஏதோ செயலில பதிவு பண்ணணுமாம். சாப்பிட வர்றவங்கள எதுக்கு கேட்கறீங்க, எப்படி சொல்வாங்க இதெல்லாம்னு கேட்டதுக்கு சும்மா அவங்க ஒரு பெரிய தனி கணக்கே கொடுத்து இருக்காங்க அரசாட்சிக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை