உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஜித்குமாரை அடித்தே கொன்றனர்: முதல் தகவல் அறிக்கையில் திருத்தம்

அஜித்குமாரை அடித்தே கொன்றனர்: முதல் தகவல் அறிக்கையில் திருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புவனம்: 'கோவில் காவலாளி அஜித்குமாரை, மூர்க்கத்தனமாக தாக்கினால், மரணம் ஏற்படும் என, தெரிந்தே, அவரை தனிப்படை போலீசார் தாக்கி உள்ளனர்' என, முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், 27, என்பவரை, நகை திருட்டு தொடர்பாக, தனிப்படை போலீசார் ஐந்து பேர் அடித்து கொன்றனர். திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவில், வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் இறந்து விட்டதாக தெரிவித்திருந்தனர். ஆனால், கூடுதல் எஸ்.பி., சண்முகம் நடத்திய விசாரணையில், தனிப்படை போலீசார் ஐந்து பேர் மூர்க்கத்தனமாக தாக்கி, மரணத்தை ஏற்படுத்தி குற்றம் புரிந்துள்ளனர் என, தெரியவந்தது. இந்த தகவல்களுடன், எப்.ஐ.ஆர். எனும் முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதையே, சி.பி.ஐ., அதிகாரிகளும் வழக்காக பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, அஜித்குமார் கொலை வழக்கில் கைதான தனிப்படை போலீசார் ஐந்து பேரையும், இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, மடப்புரம் கடையில் மிளகாய்பொடி வாங்கி, அதை அஜித்குமார் மீது துாவி சித்ரவதை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். சி.பி.ஐ., அதிகாரிகள், மடப்புரத்தில் உள்ள கடைக்காரரிடம் நேற்று விசாரணை நடத்தினர். கடைக்காரர், தனிப்படை போலீசார் ஒரு பாக்கெட் மிளாய் பொடி மற்றும் இரண்டு தண்ணீர் பாட்டில்கள் வாங்கியதாக தெரிவித்துள்ளார். அஜித்குமாரை போலீசார் தாக்கிய போது வீடியோ எடுத்த வாலிபரையும், அவரது வழக்கறிஞர் ஆகியோரிடமும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஆக 08, 2025 12:32

தனிப்படை போலீசார் ஐந்து பேர் அடித்தே மூர்க்கத்தனமாக கொன்றுள்ளனர். இப்பொழுது இந்த மூர்கர்களுக்கு என்ன தண்டனை அறிவிக்கும் நீதிமன்றம். பொது இடத்தில் அவர்களை கட்டிப்போட்டு, அவர்கள் கண்களில் மிளகாய்ப்பொடியை தூவலாமா ... நோ நோ, தூவக்கூடாது, மொத்தமாக கொட்டவேண்டும்.


ஆக 08, 2025 14:04

மூர்களுக்கு தண்டனையா ? வழக்கு நடந்து முடிவதற்குள் குற்றவாளிகளுக்கு வயதாகி இயற்கையாய் மரணமடைந்தால்தான் உண்டு ...


Padmasridharan
ஆக 08, 2025 11:53

இத்தனைக்கு காணாமல் போன நகைகள் எங்கே..


LION Bala
ஆக 08, 2025 11:33

காவலாளி அஜித் மீது புகார் தெரிவித்த அந்த இரு பெண்கள் மீதும், இதுவரை என்ன விசாரணை நடத்தப்பட்டது, அவர்களுடைய புகார் உண்மைதானா. அடித்து கொல்லும் அளவிற்கு அந்த புகார் கடுமையானதா? அல்லது ஜோடிக்கப்பட்டு வேறு சில முக்கிய நபர்களின் அழுத்தம் காரணமா? ஏற்கனவே, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு கடந்த ஐந்து வருடங்களாக தீர்ப்பு என்னவென்று தெரியாமல் போலீசாரால் இழுத்தடிக்கப் படுகிறது. நண்பர்களே, நமது நாட்டில் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது எனது கருது.......


மொட்டை தாசன்...
ஆக 08, 2025 11:08

இந்த வழக்கில் குற்றவாளிகளை குண்டர்த்தடுப்பு சட்டத்தில் கைதுசெய்திருக்க வேண்டும். மனிதாபிமானம் இல்லாத மிருகங்கள் எப்படி பொதுமக்களின் பாதுகாவலர்களாக இருக்க முடியும் ?


நிக்கோல்தாம்சன்
ஆக 08, 2025 09:22

அப்போ அந்த பொம்பளையும், அவளின் பின்புலமாய் இருந்த இன்றைய அரசின் அதிகாரியும் எவ்வளவு டார்ச்சர் செய்திருந்தா இவ்ளோ irritate ஆகி மூர்க்கர்கள் போல மனிதத்தன்மை இல்லாமல் நடந்துள்ளனர் ?


GMM
ஆக 08, 2025 08:48

நகை திருட்டு புகார் கூறிய பெண்ணின் பின்புலம் தான் விசாரிக்க வேண்டும். பெண்ணை கைது செய்ய வேண்டும். அவருக்கு பின் ஒரு முக்கிய பிரமுகர் இருக்க வேண்டும். வலிப்பு மரணம் அறிவது டாக்டர் பணி. போலீஸ் எப்படி குற்ற பத்திரிக்கை இஷ்டம் போல் தயாரிக்க முடியும். அடித்து கொன்ற போலீஸ் வெறும் அம்பு? நீதிமன்றம் பின்புலத்தில் உள்ளவர்கள் மீது கடுமை காட்ட வேண்டிய நேரம். நாளை நீதிபதி குடும்ப உறுப்பினர்கள் மீதும் நிகழலாம். ?


Sampath
ஆக 08, 2025 08:42

முதல்வர் வீட்டுக்கு கொண்டுபோய் 5 லக்ஷம் பரிசு கொடுப்பார்கள் . அழுவதற்கு கண்ணீர் இல்லாத பதுமை என்று பட்டமும் கொடுப்பார்கள்


மணி
ஆக 08, 2025 08:25

இவனுகளுக்கு எண்கவுண்டர் வராதா? ஆளுக்கொருசட்டம்?


raja
ஆக 08, 2025 07:43

இவ்வாறு விசாரனை நடந்து கொண்டிருப்பது நிதிமன்றத்திற்கு இப்போதுதான் தெரியுமா. எல்லா வழக்குகளிலும் இப்படித்தால் நடக்கிறது இவ்வாறு சித்திரவதை செய்து விசாரிக்கப்பட்ட பலர் விடுதலை ஆகின்றனர். இவ்வாறு அப்பாவிகள் சித்திரவதைபடுத்த பட்டதிற்கு நீதித்துறை மன்னிப்பு கேட்டிருக்கிறதா அதற்கான பொருப்பு மாண்பு அதனிடம் இல்லையா. குடிமகனை அவமானப்படுத்தும் அதிகாரம் காவல் துறைக்கு எவன் கொடுத்தது.


N Sasikumar Yadhav
ஆக 08, 2025 07:22

அபாண்டமாக புகாரளித்த பெண்ணை என்ன செய்தனர் .


முக்கிய வீடியோ