உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தினமும் விசாரணை

அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தினமும் விசாரணை

சென்னை : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், தி.மு.க., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அ.தி.மு.க.,வின் பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர். இவர்களை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்யும் விதமாக, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு விசாரணைக்கு எடுத்தார்.'வழக்கை முடித்து வைக்க கோரும் அறிக்கையின் அடிப்படையில், சிறப்பு நீதிமன்றங்கள் விடுவிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளன.'வழக்கை முடித்து வைக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை தாக்கல் செய்வது சட்டப்பட சரியா; அந்த அறிக்கையை சிறப்பு நீதிமன்றம் ஏற்றது சட்டப்படி சரியா; குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க சட்ட அதிகாரத்தை செயல்படுத்தியதில், சிறப்பு நீதிமன்றம் தவறு செய்துள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும்' என நீதிபதி நேற்று அறிவித்தார்.

ஓய்வு பெற்றார்

எதிர் தரப்பில் ஆட்சேபனை அல்லது பதில் மனுவை 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்; நான்கு வழக்குகளிலும், பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரை தினமும் பிற்பகல் 3:00 மணிக்கு இறுதி விசாரணை நடக்கும் என நீதிபதி உத்தரவிட்டார்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு வீட்டுவசதி வாரிய நிலத்தை ஒதுக்கியதில் முறைகேடு நடந்த தாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பெரியசாமி விடுவிக்கப்பட்ட உத்தரவையும் ஆய்வு செய்ய, பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் பிற்பகல் 3:00 மணிக்கு இறுதி விசாரணை துவங்கும். சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து வேலுார் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை ஆய்வு செய்யும் விசாரணை, பிப்ரவரி 19 முதல் 22 வரை நடக்க உள்ளது.பொன்முடி வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் நடந்தது. அதை வேலுார் கோர்ட்டுக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டது.வேலுார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா வழக்கை விசாரித்து, பொன்முடியை விடுவித்து 2023 ஜூனில் தீர்ப்பு அளித்தார். பின், பணி ஓய்வு பெற்றார்.

பதில் தர உத்தரவு

வழக்கு விழுப்புரத்தில் இருந்து வேலுாருக்கு மாற்றும்படி கோரப்பட்டதா என்பதற்கு பொன்முடி தரப்பும், லஞ்ச ஒழிப்புத் துறையும் இம்மாதம் 31க்குள் பதில் அளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். வசந்தலீலா நேரிலோ அல்லது வழக்கறிஞர் வாயிலாகவோ ஆஜராகி கருத்து தெரிவிக்கவும் நீதிபதி அனுமதி அளித்தார்.பொன்முடி வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரிய, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மனுவை நீதிபதி நிராகரித்தார்.

தமிழக அரசின்கோரிக்கை நிராகரிப்பு

'தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி புகார்கள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, கருப்பையா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இதற்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரியது. நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் அமர்வில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.'மனுவில் கூறப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக, நீதிமன்றங்கள் ஏற்கனவே விசாரித்துள்ளன. தற்போது, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார். அதை ஏற்க மறுத்த அமர்வு, வழக்கின் விசாரணையை, மார்ச் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

SaiBaba
ஜன 09, 2024 21:25

காலமெல்லாம் மக்கள் சேவை செய்தவர்களுக்கா இந்தக் கதி?


sankaranarayanan
ஜன 09, 2024 21:12

தவறான நிதி வழங்கும் எல்லா நீதிபதிகளுக்கும் உயர்நீதி மன்றங்கள் அல்லது உச்ச நீதிமன்றமும் அந்த நீதிபதிகளுக்கு தகுந்த தண்டனையையும் உடனே வழங்கினால்தான் அவர்கள் திருந்துவார்கள் எந்த தவறான செயல்களுக்கும் கட்சிகளின் அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் நியாயமான நீதியை வழங்குவார்கள் இது அவர்களுக்கே ஒரு பாடமாகும்


Nancy
ஜன 09, 2024 17:59

தப்பான தீர்ப்பு சொன்ன நீதிபதிக்கும் தண்டனை கொடுக்கணும்


V GOPALAN
ஜன 09, 2024 15:44

In corruption Valarmathi is the first and senior most. In Nabganallur Appasamy and nearby high rise properties She helped DMK to complete the deal and swindled money. Lands were regularised illegally. This issue will come up soon


Paraman
ஜன 09, 2024 14:04

நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு தமிழக மக்களுக்கும் கிடைத்துள்ள முதல் வெற்றி ...இது விக்கு தத்தி சொன்ன வார்த்தைகள் இந்த கேஸுக்குத்தான் சரியாக பொருந்துகிறது ......இவனுக ஜெயிலுக்கு போகும் போது இந்த வெற்றி மாபெரும் வெற்றியாக ஒவ்வெரு உண்மை தமிழருக்கும் மாறும் ...அந்த பொன் நாளே தமிழகத்திற்கே கும்பாபிஷேகம் செய்யவேண்டிய நாள்


duruvasar
ஜன 09, 2024 09:46

அப்புடி போடு போடு போடு அசதி போடு கண்ணாளே இப்புடி போடு போடு போடு இழுது போடு கையாளே


M S RAGHUNATHAN
ஜன 09, 2024 08:45

கபில் சிபல் சென்னையில் ஒரு பெரிய பங்களா வாங்க திமுக ஏற்பாடு செய்கிறது. அந்த பங்களாவில் தேங்காய் மூடி வக்கீல்கள் ஆன கோட் சரவணன் மற்றும் தமிழன் பிரசன்னா அவர்களுக்கு அறைகள் உண்டு.


jaya
ஜன 09, 2024 11:57

வாயில் காப்போருக்கெல்லாம் ரூம் கொடுக்கிறார்களா , தேங்காய் மூடிகள் வாசலோடு சரி .


ராமகிருஷ்ணன்
ஜன 09, 2024 14:39

இவனுகளை சேர்த்தால் கபில் சிபலின் மூளை கெட்டுவிடும்.


V GOPALAN
ஜன 09, 2024 08:08

Entire 8 Crores Tamilnadu people will be thankful and grateful to this honest and dedicated Judge to comple all pending cases on all corruptrd and looted political parties. In the judgement, concerned IAS, CMs should also punishable as with their blessings only every thing is happening in a tamatic way


ராமகிருஷ்ணன்
ஜன 09, 2024 07:39

நீதியை விலைக்கு வாங்கிய இவர்கள் மிக பெரிய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்க பட வேண்டியவர்கள்.


Kalyanaraman
ஜன 09, 2024 07:38

இதுவரை நமது நீதிமன்றங்கள் படு சோம்பேறியாக செயல்பட்டு நாட்டை சுரண்டும் அரசியல்வாதிகளை மேலும் மேலும் சுரண்ட வைத்தது. இனிமேலாவது சுறுசுறுப்பாக இயங்கி ஊழல்வாதிகளுக்கு கடும் தண்டனை விரைவாக வழங்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் பங்களிக்க பிரார்த்தனை செய்வோம். ஜெய்ஹிந்த்.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி