உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு துறைகளுக்கு எதிராக ஊழல் புகார்; உள்துறை செயலர் அறிக்கை தர உத்தரவு

அரசு துறைகளுக்கு எதிராக ஊழல் புகார்; உள்துறை செயலர் அறிக்கை தர உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு துறைகளுக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து, உள்துறை செயலர் தன் நிலையை விளக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.புதுச்சேரியைச் சேர்ந்த கோகிலா என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'சென்னை புழல் சிறையில் தண்டனை கைதியாக என் கணவர் உள்ளார். சிறையில் அவர் மேற்கொண்ட பணிக்காக, நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை' என்று கூறியிருந்தார்.இம்மனு விசாரணைக்கு வந்த போது, தமிழக சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில், 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய தணிக்கை துறை கூறியுள்ளது என, பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளதாக மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ர மணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதை பரிசீலித்த நீதிபதிகள், 'மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை, 2022 செப்டம்பரில் வெளியான நிலையில், கடந்த 13ம் தேதி தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது; இவ்வளவு நாட்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கேள்வி எழுப்பினர்.'தமிழகம் முழுதும் அரசு துறைகளில் நடக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் குறித்து, அரசின் நிலைப்பாடு என்ன; இது போன்ற புகார்களை, அரசு தீவிரமாக எடுத்துக் கொள்கிறதா' என்றும் கேள்வி எழுப்பினர். 'தவறு செய்த அதிகாரிகள், அனைத்து பலன்களையும் பெற்று ஓய்வு பெற அனுமதிக்கக் கூடாது; இது போன்ற அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதற்கு, அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ், ''மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை வெளியானதில் இருந்து, அதுகுறித்து விசாரணை நடத்தி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் புகார்களை அரசு தீவிரமாக கருதுகிறது,'' என்றார். இதையடுத்து, இந்தப் பிரச்னையில் விரிவான அறிக்கை அளிக்க உள்துறை செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 6க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
டிச 17, 2024 10:56

ஊழல் செய்தாலும் அதில் எந்திரிக்கு கட்டிங் அனுப்பிய பின்னால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? காவல்துறையை கையில் வைத்திருப்பவருக்கு சம்மன் அனுப்பி விசாரியுங்கள்.


அப்பாவி
டிச 17, 2024 10:42

அப்புடியே ஹெ.ஏ.எல், இந்தியன் ஆயில் அதிகாரிங்க மேலேயும் ஊழல் புகார் வந்திருக்காம். விசாரிங்க எசமான். ஓ... அது சுப்ரிம்.கோர்டோட வேலையோ?


P.Sekaran
டிச 17, 2024 10:16

ஊழல் செய்தார் என்று நிரூபணம் ஆனால் வேலையை விட்டு நீக்கிவிட வேண்டும். அவருக்கு அரசிடமிருந்து எந்த சலுகையோ கொடுக்க கூடாது. அப்படி இருந்தால் தான் ஊழல் செய்பவர்கள் ஊழல் செய்ய தயங்குவார்கள். ஊழல் செய்தவர்கள் பணத்தை வைத்துக்கொண்டு ஒன்னுமில்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுத்தால்தான் ஊழல் குறையும். அதை தவிற ஒன்றும் செய்ய முடியாது. ஊழல் செய்கின்ற அமைச்சர்கள் ஆட்சி செய்கிறார்கள். அவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.


Barakat Ali
டிச 17, 2024 08:43

விசாரணையை ஜனவரி 6க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர் ....... சிறையில் பணிசெய்தவரின் குடும்பம் பசியால் வாடினால் நீதிமன்றத்துக்கு என்ன? அரசியல் காட்சிகள் சம்பந்தப்பட்ட விவகாரம், செத்த தலைவருக்கு கடற்கரையில் இடம் என்றால் மட்டுமே முன்னுரிமை கொடுத்து விசாரிப்போம் ....


Barakat Ali
டிச 17, 2024 08:40

தமிழகம் முழுதும் அரசு துறைகளில் நடக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் குறித்து, அரசின் நிலைப்பாடு என்ன.. வாரிச் சுருட்டுறவனையே உன்னைப்பத்தி புகார் வருதேப்பா.. இதைப்பத்தி நீயி என்ன நினைக்கிற? இப்படிக்கேட்டு காமெடி பண்ணுது மன்றம் .....


அம்பி ஐயர்
டிச 17, 2024 07:15

அவரு எந்தெந்த துறைகளில் எவ்வளவு கட்டிங் வாங்கினாரோ.... அந்த பகவானுக்கே வெளிச்சம்.....


Kasimani Baskaran
டிச 17, 2024 05:50

நல்ல காமெடியாக இருக்கிறது - உள்துறை செயலர் எப்படி நாங்கள் இந்தெந்த துறைகளில் ஊழல் செய்தோம் என்று ஒத்துக்கொள்வார்? அப்படி நன்னெறியாளராக காட்டிக்கொடுத்துவிட்டு அவரால் நிம்மதியாக இருந்துவிட முடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை