உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வினர் மீதான ஊழல் பட்டியல் : விஜய் தயாரிப்பு

தி.மு.க.,வினர் மீதான ஊழல் பட்டியல் : விஜய் தயாரிப்பு

தமிழகம் முழுதும், தி.மு.க.,வினர் செய்த ஊழல்கள் பற்றி முழு தகவல் திரட்டி ஆதாரங்களுடன் தனக்கு அனுப்பும்படி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். புகார்களை துறை வாரியாக தொகுத்து, கவர்னரிடம் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் த.வெ.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் முதல் மாநாட்டில் பேசிய விஜய், 'திராவிட மாடல் அரசு என்று கூறிக்கொண்டு, ஒரு குடும்பமே அதிகார துஷ்பிரயோகம் செய்து கொள்ளை அடிக்கிறது' என்று குற்றம் சாட்டியிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ee42rfy7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சம்பாதிப்பதாகவும், த.வெ.க.,வை துவக்குவதற்கு முன், விஜய்க்கு அவரது ரசிகர்களிடம் இருந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. சாம்பிளுக்கு சில புகார்களை தேர்வு செய்து, தனியார் புலனாய்வு நிறுவனம் வாயிலாக விசாரிக்க அவர் ஏற்பாடு செய்தார். புகார்கள் உண்மையானவை என்று தெரியவந்ததும், அவற்றை துறை வாரியாக பிரித்து, தேதி வாரியாக தொகுக்க தனி டீம் உருவாக்கினார். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மேடைக்கு மேடை ஊழல் புகார்களை பேசினாலும், சமூகத்தில் அது தாக்கம் எதையும் ஏற்படுத்தாதது ஏன் என்று, தன் கட்சி நிர்வாகிகளை அழைத்து கேட்டிருக்கிறார். ஸ்டாலின் மீதும், ஓரிரு அமைச்சர்கள் மீதும், அ.தி.மு.க.,வினர் குற்றம் சொல்கின்றனரே தவிர, ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களின் கண் முன் நடக்கும் ஊழல்கள், அட்ராசிட்டிகளை ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை என, நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதை விஜய் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து நிர்வாகிகளுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தி வந்தார்.அதன் விளைவாக, தி.மு.க.,வின் ஊழல்களையும், அத்துமீறல்களையும் தோண்டி எடுத்து அம்பலப்படுத்துவது என்று விஜய் தீர்மானித்தார். ஆட்சியிலும், கட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் எந்தெந்த வழிகளில் முறைகேடு செய்கின்றனர்; பினாமிகள் யார் என்ற விபரங்களை தவறாமல் சேகரிக்க அறிவுறுத்தினார். ஆதாரங்கள் இல்லாமல் புகார்களை அடுக்கினால், வழக்குகள் வரிசைகட்டி வரும் என்றும் நிர்வாகிகளை அவர் எச்சரித்தார். அப்படி திரட்டப்படும் ஆதாரங்கள் அடிப்படையில், ஊழல் பட்டியல் தயாரித்து, கவர்னரை சந்தித்து அளிக்கலாம் என்று விஜய் திட்டமிட்டுள்ளார். மாநாட்டுக்கு பிறகான தன் முதல் அரசியல் நிகழ்வாக இது அமையும் என்றும், பகிரங்கமாக தெரியாமல் தனக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வரும் ஆளுங்கட்சிக்கு செக் வைக்க உதவும் என்றும் விஜய் கூறியிருக்கிறார்.'வெறும் அறிக்கை அரசியலை தளபதி விரும்பவில்லை; வாதங்களை விட ஆதாரங்களே பேசும் என்று நம்புகிறார். 'ஐம்பது ஆண்டுகளுக்கு முன், தி.மு.க.,வினரின் ஊழல் பட்டியலை கவர்னரிடம் எம்.ஜி.ஆர்., வழங்கிய நிகழ்வு, தமிழக அரசியலின் பாதையை மாற்றியது. அதே திருப்பம், 2026க்கு முன் நிகழும்' என்று, த.வெ.க.,வின் முக்கிய நிர்வாகி குறிப்பிட்டார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும், அப்படி ஒரு ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்தார். ஆனால், பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லையே என்று கேட்ட போது, பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அவர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Madras Madra
நவ 18, 2024 15:57

பூனை வெளியே வந்தது அண்ணாமலையின் முயற்சிகளை நீர்த்து போக செய்ய வேலைகள் அரங்கேறுகிறது


Rpalnivelu
நவ 16, 2024 16:06

விஜய்யின் தகிடு தந்தங்கள் ஒவ்வொன்றாக மாரிதாஸ் தட்டி தூக்கிக் கொண்டிருக்கிறார். அனேகமாக இவர் மேல் வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறை விரிவான விசாரணை நடத்தக் கூடும். மலையையும் மடுவையும் கம்பேர் செய்வதே தவறு


kumar
நவ 14, 2024 19:20

ஆதாரங்களுடன் அண்ணாமலை அவர்கள் ஊழல் பட்டியலை வெளியிட்ட பொது நீங்களும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தால் மக்களவை தேர்தலில் திருப்பம் நேர்ந்துஇருக்கலாம் . அதை விட்டு இப்போது நானும் ரவுடி தான் என்ற அளவில் , மூன்று வருடங்கள் தூங்கி இருந்து விட்டு நானும் ஒரு ஊழல் பட்டியலை வெளியிடுகிறேன் என்று சொல்லுவது உங்களை நம்ப முடியாமல் செய்கிறது. குறைந்த பட்சம் ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் திரைப்படங்களில் நடிக்க முடியாது என்று சொல்லும் துணிவும் நேர்மையும் உங்களுக்கு இருக்கிறதா ?


G Mahalingam
நவ 14, 2024 10:05

பதிவு துறை அலுவலகம் தாசில்தார் அலுவலகம். மின்சார வாரிய அலுவலகம் எதிரே ஒரு டெண்ட் போட்டு லஞ்சம் கேட்டால் அல்லது வேலையை இழுத்து அடித்தால் தவெக கட்சியினரிடம் புகார் கொடுக்கலாம். இதை மற்ற கட்சியினர் செய்ய மாட்டார்கள்.


Constitutional Goons
நவ 12, 2024 20:34

அண்ணாமலை என்னென்ன பித்தலாட்டம் செய்தார் என்று விஜய்யும் , விஜய் என்னென்ன பித்தலாட்டம் செய்தார் என்று அண்ணாமலையும் முதலில் ஒரு பட்டியல் வெளியிடலாம் . இரண்டும் 'ஜி'யின் பொம்மைகள்


sundaran manogaran
நவ 12, 2024 20:22

சபாஷ்.... ஊழல் இல்லாத தமிழகத்தை எதிர் பார்க்கிறோம்... லஞ்சம் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளது அதை விரட்ட வேண்டும்


கனோஜ் ஆங்ரே
நவ 12, 2024 18:23

ஏற்கனவே ஒருத்தர் “1, 2, 3..ன்னு ஊழல் பட்டியல் வெளியிட்ட பின்பும்.... 40க்கு 40 ஜெயிச்சுச்சு திமுக... இப்ப இவர் ஊழல் பட்டியல் வெளியிடப் போறாரா...? ஆமா, அவரைப் போலவே, ஊழல் பட்டியல்..னு சொல்லி, சொத்து விவர பட்டியல் வெளியிடப் போறாரு...? திமுக...வை அடிச்சு பெரியாள் ஆயிடம்னு பார்க்குற...? ஏய்யா, உங்கப்பனையும் உன்னையும் ஜெயலலிதா வச்சி செஞ்சு... நீயும் உங்கப்பனும் நேரில் சந்திச்சு மன்னிப்பு கேட்டது மறந்து போச்சா...? சரி, சரி... நீ ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஐம்பது ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்னு புடுங்கி வச்சிருந்த காசை, கரியாக்கணும்னு முடிவு பண்ணிட்ட... நடுத்தெருவுல நிக்கப் போற... பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் மாதிரி...


Barakat Ali
நவ 12, 2024 16:31

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி அழைத்தாலும் கூட நா த க வோ, த வே க வோ முன்வரா .... இதை வைத்தே சொல்லிவிடலாம் இவை இரண்டும் திமுகவின் பி, டி டீம்கள் என்று .... சி டீம் ம நீ ம ....


கத்தரிக்காய் வியாபாரி
நவ 12, 2024 16:07

தீயமுக: அப்போ நீயும் என்னை அடிச்சுதான் பெரியளாக பார்க்கிறாய்.


indian
நவ 12, 2024 16:01

Minadi Kamal ippa vijay Kamal sayam veluthu vittathu,… Ipa alum katchi adrupthi vote a collect panna oru candidate venum athu Vijay than apa thana BJP or ADMK ku vote pogathu…ADMK aruvada pannina easy win. Next 2026 la parungha and 2029 la parungha yellam puriyum like kamal. Ithe than naan kamal vandhapa sonnean. Politics bro Politics. Yevlo selavu panna mudiyum Vijay nala? Oru manaduku 75C so election time la 10 Manadu, Pothukootam and election campain ku ??


சமீபத்திய செய்தி