உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டு வெடிகுண்டு வீச்சு; விழுப்புரத்தில் சிறுவன் கைது

நாட்டு வெடிகுண்டு வீச்சு; விழுப்புரத்தில் சிறுவன் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம் : விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு மகன் மாதவன், 20; கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன், நண்பராக பழகி வந்தார்.மாதவன் அந்த சிறுவனை அழைத்து, தவறான பழக்கம் உள்ள பெரிய பசங்களுடன் சேராதே என அறிவுரை கூறியுள்ளார். இதை அறிந்த சம்மந்தப்பட்டவர்கள் மாதவன் மீது ஆத்திரமடைந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை, சேவியர் காலனியைச் சேர்ந்த ரொசாரியா, 20; ஜேம்ஸ், 25; துரைபாண்டி, 24; ஆகியோருடன், அந்த சிறுவனும் சேர்ந்து, பட்டாசு தயாரிக்கும் மருந்து மூலம், நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதனை மாதவன் வீட்டு வாசல் கதவின் மீது வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இதில் கதவு சேதமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதுகுறித்து, மாதவனின் சகோதரர் ஆதவன், 27; அளித்த புகாரின் பேரில், ரொசாரியா, ஜேம்ஸ், துரைப்பாண்டி, மற்றும் சிறுவன் ஆகிய நான்கு பேர் மீதும் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்து, காப்பகத்தில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மேலும் மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
அக் 07, 2024 10:52

திராவிஷ சிறுவரணியும் துவக்கிவிட்டார்களா?.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 07, 2024 10:10

விடியல் தந்தவருக்கு வாழ்வு தந்தவர்கள் செய்த வேலை ......


Lion Drsekar
அக் 07, 2024 07:56

வாழ்க ஜனநாயகம்


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 07, 2024 06:14

சந்தோஷம் இப்பவெல்லாம் குண்டு தயாரிக்க ஆரம்பிச்சுட்டாங்களே.. வெளிநாட்டு நண்கொடை கூட்டன்சோறு பத்தலை போலும்


புதிய வீடியோ