உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி

பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி

சென்னை: பிராமணர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஐகோர்ட் மதுரைக்கிளை அனுமதி அளித்தது. உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற, மதுரையில் ஜன., 5ல் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி, ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழக ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த சிலரின் செயல்கள், பேச்சுக்கள் பிராமண சமூகத்திற்கு எதிராக உள்ளன. எனவே, பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜன., 5ல் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரதம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி, 'மதுரை உண்ணாவிரதத்தில் யார், யார் பேசுகின்றனர், எத்தனை பேர் பங்கேற்கின்றனர் என்ற விபரத்தையும், சட்டத்திற்கு உட்பட்டு சுமுகமாக நடத்தப்படும் என்பதற்கான உத்தரவாதத்தையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்' என கூறியிருந்தார். இந்த மனு இன்று (ஜன.,04) மீண்டும் ஐகோர்ட் மதுரைக்கிளை விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்து மக்கள் கட்சி உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளித்தும், உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Venil
ஜன 04, 2025 22:11

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மண்ணின் மைந்தர்களை சூத்திரர்களாக பிராமணியம் செய்த கொடுமைகளால் பாதிக்கப்பட்டது, பிராமணர் அல்லாதோர் தான். ஆனாலும் குறைவில்லா சமூக பாதுகாப்பு அனுபவத்தில் உள்ளதே என்ன குறை


Venil
ஜன 04, 2025 21:59

தீர்ப்பில் ஏதோ தவறு


Dharmavaan
ஜன 04, 2025 13:41

இனிமேல் எல்லா இந்துக்கள் போராட்டத்துக்கும் கோர்ட் அனுமதி வாங்கி நடத்துவது நல்லது


முக்கிய வீடியோ