உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொய்யான ஆரியம், திராவிடம் கோட்பாடு பரப்புவதை நிறுத்தும்படி உத்தரவிட முடியாது; ஐகோர்ட் கைவிரிப்பு

பொய்யான ஆரியம், திராவிடம் கோட்பாடு பரப்புவதை நிறுத்தும்படி உத்தரவிட முடியாது; ஐகோர்ட் கைவிரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'ஆரியம், திராவிடம் இனக் கோட்பாட்டின் தோற்றம் குறித்தும், வரலாறு குறித்தும் கூற, நீதிமன்றம் ஒன்றும் அதற்கான வல்லுனர் அல்ல; ஆரியம், திராவிடம் கோட்பாடு பற்றி பரப்புவதை நிறுத்த உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர் சமூகத்தினர் மத்தியில், பொய்யான ஆரியம், திராவிடம் இனக் கோட்பாட்டை பரப்புவதை நிறுத்துமாறு, கல்வித்துறைக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாலிங்கம் பாலாஜி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'ஆரியம், திராவிடம் என்ற பொய்யான இனக் கோட்பாடு குறித்து, கல்வித்துறை பரப்பி வருகிறது. ஆரியம் மற்றும் திராவிடம், மக்களிடையே பிளவை வளர்க்கிறது. 'இந்த இரு கோட்பாடும் பொய்யானவை என, பல்வேறு அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்' என்று வாதாடப்பட்டது.அதற்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''பாடத்திட்டத்துக்கு என, குழு அமைக்கப்பட்டு உள்ளது. துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகள் அடிப்படையில் தான், பாடத்திட்டம் தீர்மானிக்கப்படுகிறது. ''இதுதொடர்பாக, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில், மனுதாரர் கோரிக்கை மனு அளித்தால், அது பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவு அறிவிக்கப்படும்,'' என்றார்.துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், ''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில், மனுதாரர் கோரிக்கை மனு அளிக்கலாம். அது, உரிய காலத்துக்குள் பரிசீலிக்கப்படும்,'' என்றார்.அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:வரலாறு அல்லது இரு இனக்கோட்பாடின் தோற்றம் பற்றி கூற, நீதிமன்றம் வல்லுனர் அல்ல. மனுதாரர் பொய்யானது என்று கூறும், இரண்டு இனக் கோட்பாடு செல்லுமா அல்லது செல்லாதா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யாமல், இந்த வழக்கில் மனுதாரர் கோரும் நிவாரணத்தை, இந்த நீதிமன்றத்தால் வழங்க முடியாது. இதை செய்ய வேண்டியது, அத்துறையில் உள்ள நிபுணர்கள் தானே தவிர, நீதிமன்றம் அல்ல.மாநில, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், இவ்வழக்கை கோரிக்கை மனுவாக கருத்தில் கொள்ள வேண்டும். மனுதாரருக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கி, அவர் தரப்பு கருத்தையும் அறிந்து, அதன் மீது 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

AMLA ASOKAN
அக் 27, 2024 10:22

10 வருடங்களுக்கு முன்பு வரை பள்ளிக்கூடத்தின் சரித்திரப் பாடப் புத்தகங்களில் ஆரியர் படையெடுப்பு என்பதும் திராவிடர் பண்பாடு என்பதும் 100 ஆண்டுகளாக பாடமாக சொல்லித்தரப்பட்டது . அது இன்று சர்ச்சையாக்கப்பட்டுள்ளது . நீதிமன்ற தீர்ப்பு மிக்கச் சரியானது .


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 26, 2024 23:17

இதெல்லாம் நம்மோட வேலயில்ல எஜமான்....நம்மோட வேலை எல்லாம் ஊழல் செஞ்சவனுக்கு ஜாமின் கொடுக்கனும், விடியல் மந்திரிகளுக்கு விடுதலை கொடுக்கனும் இப்படி ஏகப்பட்ட ஜோலி இருக்கு.... இதெல்லாம் ஒரு வழக்குன்னு போடுறாங்க ....!!!


N.Purushothaman
அக் 26, 2024 14:41

ஏன் நீதிமன்றம் இதை ஆராய வல்லுநர் குழுவை அமைக்க முடியாதா என்ன ? அவர்களுக்கு அதிகாரம் இல்லையா என்ன ?


Sridhar
அக் 26, 2024 12:54

இதேபோல் பல விசயங்களில் கோர்ட்டுக்கு விவரங்கள் தெரியாதபோது அதுபற்றி தெரிந்த அறிஞர்கள் குழு ஒன்று அமைத்து அதன் கருத்துக்கள் படி முடிவெடுக்குமல்லவா? அந்த தெளிவு வரும் வரை, தவறான இவ்வகையான கருத்துக்கள் இளவயதினரிடையே திணிக்கப்படுவதை இடைக்கால தடையாவது செய்யவேண்டுமல்லவா? பொன்முடி கேசையே எடுத்துக்கொள்ளுங்கள், ஹை கோர்ட் அவ்வளவு உறுதியாக தீர்ப்பளித்தும் எதோ சிறிதளவு சட்ட சந்தேகங்கள் இருப்பதால் தவறாக தண்டனை கொடுக்கப்பட்டுவிடக்கூடாது என்கிற நோக்கில் சுப்ரீம் கோர்ட் அந்த தீர்ப்பையும் தண்டனையையும் இடைக்கால தடை செய்யவில்லையா? அதுபோலத்தான் தவறான ஒரு போதனை இளம் நெஞ்சங்களில் விதைக்கப்படக்கூடாது என்கிற நல்லெண்ணம் இருந்திருந்தால், ஹைகோர்ட்டும் அந்த பாடத்திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்திருக்கவேண்டும்.


M Ramachandran
அக் 26, 2024 12:29

யாப்பா இந்த திராவிடம் என்ற வார்தை நீதி மன்றத்தைய்யே பயமுறுத்துது.


Kumar Kumzi
அக் 26, 2024 12:25

திருட்டு திராவிஷத்தின் ஒரே நோக்கம் ஹிந்து தமிழர்களை மட்டும் ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் கொத்தடிமை கூமுட்டைங்களாக வைத்திருப்பது தான்


Kumar Kumzi
அக் 26, 2024 12:20

எப்படி நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் திருட்டு திராவிஷம்


M Ramachandran
அக் 26, 2024 12:17

பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்து தமிழக மக்களை பித்தர்காலாக்கிய கட்சியை. இந்த பித்தலாட்டர்காரர்களய் குடிகார குடிமக்களாகிய வில்லத்தனம் மற்றும் கபடு சூது உள்ளவர்கள் எளிதில் வீழ்த்த முடியாது


Anand
அக் 26, 2024 11:44

திருட்டு கட்சி கேஸ் போட்டால் மட்டுமே எடுத்துக்கொள்வோம்..


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 26, 2024 11:08

என்ன தலைப்பு இது ? ஐகோர்ட் கைவிரிப்பு .... கோர்ட்டுக்கு இதில் பொறுப்பில்லை என்பதுதான் உண்மை .....வாக்களிக்கும் தமிழன் தீர்மானிக்கவேண்டும் .... மூளைச்சலவை செய்து திராவிடம் என்னும் போலியான ஒன்றைக் கட்டமைத்து சுரண்டியதை எண்ணிப்பார்க்க வேண்டும் ......


புதிய வீடியோ