வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏனய்யா உங்களுக்கு நிஜமாகவே பொழுது போகவில்லையா ? இருக்கானா செத்து போய்ட்டானான்னு தெரியாது.அவன் கேஸ் எடுத்து டைம் வேஸ்ட் பண்ணுறீங்களே
சென்னை: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு தக்கார் நியமனத்தை எதிர்த்து நித்தியானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பெண் சீடர் ஒருவருக்கு அதிகாரம் வழங்கி இந்த வழக்கை நித்தியானந்தா தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆஜராக முடியாது என தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் கூறியதாவது: வழக்கு தாக்கல் செய்ய பெண் சீடருக்கு வழங்கிய அதிகார பத்திரம் மீது சந்தேகம் உள்ளது.நித்யானந்தா நேரிலோ, வீடியோ கான்பிரன்ஸ் மூலமோ ஆஜராயிருக்கலாம் தக்கரை நியமிக்க அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. காஞ்சி பெரியவர் கூறியது போல் துறவி துறவியாக இருக்க வேண்டும்.நித்தியானந்தாவின் உரைகள் சிறப்பானவை. கதவைத்திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன எனத் தெரிவித்தது.
ஏனய்யா உங்களுக்கு நிஜமாகவே பொழுது போகவில்லையா ? இருக்கானா செத்து போய்ட்டானான்னு தெரியாது.அவன் கேஸ் எடுத்து டைம் வேஸ்ட் பண்ணுறீங்களே