வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கமிசன் குரூப் ஒன்று.. யாராவது
கருணாநிதி என்பவர்...?
சென்னை: 'டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது' என, சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டது.கடந்த 2016 ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு விடைத்தாள் மாற்றப்பட்டு, முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. வழக்கில் கைதான கருணாநிதி என்பவர் விசாரணையை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 30) விசாரணைக்கு வந்தது. உத்தரவு
அப்போது, தமிழக அரசு தரப்பில், ' டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 விடைத்தாள் மாற்றிய வழக்கில், 65 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டு 10 பேரிடம் விசாரணை நிறைவடைந்து விட்டது' என வாதிடப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், ''டி.என்.பி.எஸ்.சி., விடைத்தாள் முறைகேடு வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது. 6 மாதங்களில் வழக்கு விசாரணையை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் முடிக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.
கமிசன் குரூப் ஒன்று.. யாராவது
கருணாநிதி என்பவர்...?