உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்: அமல்படுத்த கோர்ட் உத்தரவு

துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்: அமல்படுத்த கோர்ட் உத்தரவு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட, 'பிடிவாரன்ட்' உத்தரவை, வரும், 15ம் தேதி அமல்படுத்தும்படி, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2006 - 11 தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் துரைமுருகன். 2007- முதல், 2009 வரையிலான கால கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக, 1.40 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, 2011ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து, வேலுார் சிறப்பு நீதிமன்றம், 2017 ஜனவரியில் உத்தரவு பிறப்பித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3hq7gj6i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த உத்தரவை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், துரைமுருகன், அவரது மனைவியை விடுவித்த வேலுார் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.இந்நிலையில், இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, 2024ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில், இந்த வழக்கின் விசாரணையை, வேலுார் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என, அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர், அவரது மனைவி தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்தும், குற்றச்சாட்டு பதிவுக்கு ஆஜராகாததால் இருவருக்கு எதிராக 'பிடிவாரன்ட்' பிறப்பித்தும், கடந்த மாதம், 21ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி இ.பக்தவச்சலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் துரைமுருகன் ஆஜராகவில்லை; அவரின் மனைவி சாந்தகுமாரி ஆஜரானார். தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட் உத்தரவை திரும்ப பெறக்கோரி, மனு தாக்கல் செய்தார்.அதை ஏற்ற நீதிபதி, சாந்தகுமாரிக்கு எதிரான பிடிவாரன்ட் உத்தரவை திரும்ப பெற்றார். பின், இந்த வழக்கின் விசாரணையை, வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரன்ட்டை அமல்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

baala
செப் 05, 2025 10:10

1.40 கோடி? பெரிய தொகை அவருக்கு.


ராமகிருஷ்ணன்
செப் 05, 2025 05:36

1.40 கோடி சொத்து குவிப்பு என்பது துரைமுருகனுக்கு மிக பெரிய அவமானம். 1400 கோடிகள் என்று சொன்னால் கொஞ்சம் கவுரவமா இருக்கும். இப்படி திமுகவின் தகுதிக்கு தக்கபடி ஊழல் தொகையை சொல்லுங்க


ManiMurugan Murugan
செப் 04, 2025 23:40

அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு க கூட்டணியில் அனைவருமே கணக்கில்லா சொத்து உள்ளவர்கள் தான் திரையுலகில் இரண்டு நிறுவனங்கள் உள்ளவர்கள் தேர்தல் ஆணையத்தில் 8 கோடி என்று பொய்யாக பதிவு செய்துள்ளது வருமானத்துறைக்கு தெரியாதா பிடிவாரண்ட் ஒருத்தருக்கு மட்டும் தானா மொத்தக் கூட்டம் மாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


xyzabc
செப் 04, 2025 23:18

மாடல் ஆட்சியின் ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் ஒரு கட்டுரையே எழுதலாம். எல்லாருக்கும் ஆக்ஸ்போர்ட்ல ஒரு போட்டோ மாட்டி விடலாம் போல இருக்கு. பின்னர் ஆக்ஸ்போர்டை அறிவாலயம் ஆக மாற்றி விடலாம்.


Anantharaman Srinivasan
செப் 04, 2025 23:04

நாளைக்கே துரைமுருகன் சிறப்பு நீதிபதி முன் சரண்டர் ஆவார் பாருங்கள்.


தத்வமசி
செப் 04, 2025 22:24

அப்பப்ப பொழுது போகலைனா இப்படித்தான். ஏற்கனவே ரெண்டு பேரு வெளியே இருக்காங்க. என்ன ஆச்சு ? எதுவும் இல்லை. அதே தான்.


M Ramachandran
செப் 04, 2025 21:56

இருப்பதே அளவுக்கு மீறி இன்னும் அதை குவித்து என்ன செய்வது?


ManiK
செப் 04, 2025 20:57

இந்த ஆளு திமுக கும்பல்ல கொஞ்சம் நல்லவன்னு நினைத்து ஏமாந்தது பல பேர். தன் குடும்பத்துக்காக என்ன வேணும்னாலும் செய்ய துணிந்தவர்


Ganesun Iyer
செப் 04, 2025 20:50

மகனுக்கும், பேரனுக்கும் வழி சுத்தம் செய்யப்படுகிறது..


Anbuselvan
செப் 04, 2025 20:41

கழக தொண்டர்களே, அப்போலோவில் ஒரு VIP ரூம் 16ம் தேதி வரையில் புக் பண்ணுங்க.


vee srikanth
செப் 05, 2025 10:48

காவேரி இன்னும் வசதியாக இருக்கும்