உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயம்; தலைமை செயலருக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயம்; தலைமை செயலருக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'தவறினால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்' என, எச்சரிக்கை விடுத்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ekhbkiol&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, 41க்கும் அதிகமான கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் ராஜேந்திரன் முன் வைத்த வாதங்கள்: சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் மாயமானதாக அரசு தரப்பில் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் அவை திருடப்பட்டுள்ளன. 38 போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, 41 ஆவணங்கள் திருடப்பட்டு இருப்பது சாதாரண விஷயம் அல்ல. இதில் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஏனென்றால். ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களின் பொறுப்பு அதிகாரிகள் மீது இதுவரை எந்த வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மேலும் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சிலைகள் குறித்த விபரங்களும் கிடைக்கப் பெறாமலேயே உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் தொடர்பான விஷயங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் எப்படி தொலைந்தன; அதற்கான காரணம் என்ன? 375க்கும் அதிகமான சிலைகள் திருடப்பட்டு இருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. அவை அனைத்தும் வெளிநாட்டில் உள்ள காப்பங்களில் வைக்கப்பட்டு இருக்கிறதா? அதை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? பதிவு செய்யப்பட்டிருந்தால், வழக்கு எந்த நிலையில் உள்ளது? இதற்கான விளக்கங்களை தமிழக அரசு தெரிவிக்கவில்லை என்றால், தலைமைச் செயலர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நேரிடும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை நவ., 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. - டில்லி சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Tetra
செப் 17, 2025 20:07

கப்பாலி சிம்பல் வரலயா?


அப்பாவி
செப் 17, 2025 12:41

இவுரு இப்போதான் பதவிக்கு வந்தாருங்க. சிலைகடத்தல் பைல்கள் பத்தி ஒண்ணும் தெரியாதுங்க. ஓண்ணும் தெரியாதவருங்க. கொஞ்ச நாளில் ரிடையராயிடுவாருங்க. இதுக்கு முன்னாடி இருந்த நாலஞ்சு தலைமைச் செயலர்களை விசாரியுங்க.


GoK
செப் 17, 2025 12:13

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதில் தொடங்கியது ...பகுத்தறிவை பரப்புகிறோம் என்று ஒரு களவாணி கும்பல், கோவில்களை குறி வைத்தது. கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்தது, கோவில் முறைகளை குற்றம் கூறி நிருவாகத்தை கையில் எடுத்து நிலங்கள், நகைகள், விக்கிரகங்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன. வடக்குக்கே இருப்பவன் வந்தானாம், கொள்ளை அடித்து சென்றானாம். விட்றவன்கள் யார? கோவில்களை திறந்தவங்கள் யார, கோவிலைகளை ஒரு சாதியின் பிம்பங்கள் என்று அறிவிலித்தனமாக பேசி தமிழர்களின் பழமையை விலைக்கு விற்ற கொள்ளைக்கார கும்பல்தான் இன்றும் அரசியல் செயகின்றன. அதுவும் குடும்ப அரசியல். தமிழர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை தூவிக்கொள்கிறார்கள்.


Venugopal S
செப் 17, 2025 11:32

சிலைத்திருட்டு நடந்தது எந்த காலகட்டத்தில் மற்றும் அது சம்பந்தமான கோப்புகள் காவல்நிலையங்களில் காணாமல் போனது எந்த காலகட்டத்தில் என்ற விவரங்கள் தெரியாமல் எதற்கெடுத்தாலும் தமிழக அரசை குறை கூறுவது அறிவின்மை! இன்னும் சொல்லப்போனால் வட இந்தியாவைச் சேர்ந்த கபூர் என்பவன் தான் தமிழக கோவில்களில் சிலைத்திருட்டுக்கள் மிகவும் அதிகம் செய்தவன்!


Tetra
செப் 17, 2025 20:06

ஆஹா என்ன ஒரு முட்டு. ₹2000 தாங்கும்.


ஆரூர் ரங்
செப் 17, 2025 11:13

மிரட்டல் உதார் எல்லாம் சர்வசாதாரணம். கடைசியில் பஞ்சாயத்து பொன்முடி வழக்கு கதிதான். எல்லோருக்கும் குடும்பம்,குழந்தை குட்டிகள் உண்டே.


Barakat Ali
செப் 17, 2025 11:08

சிலை திருடர்களை விட்டு விட்டு தலைமைச் செயலரின் மண்டையை உருட்டுவது குருட்டுச்சட்டம்.... சட்டம் ஒரு கழுதை என்று சும்மாவா சொன்னார்கள் ????


visu
செப் 17, 2025 09:14

இதை ஏதிர்கட்சிகள் follow செய்து அரசுக்கு நெருக்கடி கொடுத்து சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் கடவுள் நம்பிக்கை இல்லாத அரசு என்பதால் அலட்சியமா இல்லை சிலை காணாம போக காரணமே இவர்களா


Palanisamy T
செப் 17, 2025 07:40

"சிலைக் கடத்தல் வழக்குகள் சம்பந்தமாக கோப்புகள் மாயமாய்ப் போனது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும்". இந்த உச்சநீதி மன்றத்தின் எச்சரிக்கையை தலைமை செயலர் கடுமையாக எடுத்துக் கொள்ளவேண்டும். இது வெறும் முன்னோடிதான். இன்னும் பல வழக்குகளின் நிலைகள் விசாரணைக்கு வந்தால்தான் தெரியும் .


Tetra
செப் 17, 2025 20:09

வெற்றி எப்போதும் திம்காக்கே. வாழ்க த்ராவிட பொழப்பு


GMM
செப் 17, 2025 07:06

38 போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, 41 ஆவணங்கள் திருடப்பட்டு இருப்பது நீதிமன்றம் அறிந்து கொண்ட பின், குறைந்த பட்சம் அந்த ஸ்டேஷன் கோப்பு பொறுப்பு அலுவலர்கள் சஸ்பெண்டு அல்லது சம்பள உயர்வு போன்றவை நிறுத்த வேண்டும். குற்றம் அறிந்த பின் எந்த நடவடிக்கையும் உடன் கோர்ட் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்றால் ஏன் விசாரிக்க வேண்டும்? கவர்னர் என்றால் சிறப்பு அதிகாரம். தலைமை செயலர் ஆஜர் ஆகி என்ன முடிவு காண முடியும்? பிறரை காட்டி கொடுக்காமல் தண்டனை கூட ஏற்று கொள்வார்கள். இதனை சிபிஐ விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும்.


Balaa
செப் 17, 2025 06:56

தலைமை செயலர் மாயம் என்று சேகர் பாபு அறிக்கை விடுவார்.


Tetra
செப் 17, 2025 20:10

சரியாகச் சொன்னீர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை