உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

புதுடில்லி: இன்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

தேர்தல்

நாட்டின், 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, உடல்நிலையை காரணம் காட்டி, ஜூலை 21ல் ராஜினாமா செய்தார். இதையடுத்து, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க இன்று( செப்., 9) தேர்தல் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=41ai7xxx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் தேஜ கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். எதிர்க்கட்சியான இண்டி கூட்டணி சார்பில், தெலுங்கானாவைச் சேர்ந்தவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான சுதர்ஷன் ரெட்டி களமிறக்கப்பட்டார்.

முதல் நபராக ஓட்டுப்போட்ட பிரதமர்

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. முதல் நபராக பிரதமர் மோடி தனது ஓட்டை பதிவு செய்தார். பிறகு அனைத்து மத்திய அமைச்சர்கள், தேஜ கூட்டணி எம்பிக்கள், சோனியா, ராகுல், வாத்ரா, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இண்டி கூட்டணி கட்சி எம்பிக்களும் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர். இந்த தேர்தலை பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, பிஜூ ஜனதா தளம் மற்றும் அகாலிதளம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. தேர்தல் முடிவடைந்த சிறிது நேரத்தில், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், தேஜ கூட்டணி சார்பில் களமிறங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக 452 ஓட்டுகள் பதிவாகின.எதிர்க்கட்சியான சுதர்சன் ரெட்டிக்கு 300 ஓட்டுகள் கிடைத்தன. பதிவான ஓட்டுகளில் 15 செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பயோ - டேட்டா

1957 அக்., 20: திருப்பூரில் பிறந்தார். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தில் பணியாற்றினார். பி.பி.ஏ., முடித்துள்ளார்.1996: தமிழக பா.ஜ., செயலரானார்.1998, 1999: கோவையில் இருந்து லோக்சபா எம்.பி.,யாக தேர்வு.2003 - 2006 : தமிழக பா.ஜ., தலைவராக இருந்தார். நதிநீர் இணைப்பு, பயங்கரவாத ஒழிப்பு, பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி தமிழகம் முழுதும், 93 நாளில் 19,000 கி.மீ., துாரம் ரத யாத்திரை நடத்தினார்.2004: இந்தியா சார்பில், ஐ.நா., சபைக்கு சென்ற எம்.பி.,க்கள் குழுவில் இடம் பெற்றிருந்த இவர், அங்கு உரையாற்றினார்.2016: தேசிய கயிறு வாரிய தலைவர் பதவி வகித்தார்.2023 பிப்., 12: ஜார்க்கண்ட் கவர்னரானார்.2024 மார்ச் 19: கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவி வகித்தார்.ஜூலை 27: மஹாராஷ்டிரா கவர்னரானார்.2025 ஆக., 17: தே.ஜ., கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு.

3வது தமிழர்

எஸ்.ராதாகிருஷ்ணன் (1952 - 1962), ஆர்.வெங்கட்ராமனுக்கு (1984 -- 1987) பின், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது தமிழர், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

Moorthy
செப் 10, 2025 08:14

வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் செல்லாத வோட் அதிகரிக்கும்..எம்பிக்களுக்கே எப்படி வாக்களிப்பது என்று தெரியாமல் செல்லாத வோட்டு போட்டுள்ளனர். படிக்காத சாமானிய மக்கள் கையில் வோட்டு சீட்டு சென்றால் ?? ஈவீயெம் மெஷினில் செல்லாத வோட்டே விழாது


rukmani
செப் 10, 2025 00:21

இந்த பதிவில் 3 தமிழர்கள் துணை ஜனாதிபதியாக இருந்து உள்ளனர் என்று அவர்கள் பெயர்களும் தரப்பட்டுள்ளது. அதில் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ வி.வி. கிரி அவர்கள் பெயர் இடம்பெறவில்லை. அவரும் துணை ஜனாதிபதியாக இருந்து பிறகு தான் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.


venugopal s
செப் 09, 2025 23:14

தமிழருக்கு டம்மி பதவி,குஜராத்திக்கு அதிகாரம் மிக்க பதவி! இது தான் பாஜகவின் குள்ளநரி தந்திரம்!


N Annamalai
செப் 09, 2025 23:08

வாழ்த்துக்கள்


R.MURALIKRISHNAN
செப் 09, 2025 23:05

தமிழர் திராவிஷ கட்சியின் ஆதரவின்றி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்


ManiMurugan Murugan
செப் 09, 2025 22:58

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்


சிவா. தொதநாடு.
செப் 09, 2025 22:45

வாழ்த்துக்கள் துணை ஜனாதிபதி அவர்களுக்கு பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி


Raj
செப் 09, 2025 22:24

வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.


Saai Sundharamurthy AVK
செப் 09, 2025 22:19

பாரத குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ! நாடெங்கும் உள்ள இந்தி பேசும் பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் இந்த தமிழனை ஆதரித்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள, தமிழர்களுக்கு துரோகம் செய்யும் திமுக, காங்கிரஸ், வி.சி.க போன்ற கட்சிகள் தமிழனை ஆதரிக்காமல் தங்கள் விசுவாச மொழி பேசும் தெலுங்கருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.


Oviya Vijay
செப் 09, 2025 22:17

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் டிரம்ப் நின்ற போது நம் ஜீயின் நெருங்கிய நண்பர் எனக்கூறி இங்கிருக்கும் சங்கிகள் அவர் வெற்றி பெற வேண்டுமென எவ்வாறு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்களோ... இப்போது ஏன் தான் அவரை அதிபராகத் தேர்ந்தெடுத்தோம் என அந்நாட்டு மக்களே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதே போல் இவரையும் ஏன் தேர்ந்தெடுத்தோம் என நினைக்குமளவிற்கு இவரது நடவடிக்கைகள் இருக்கப் போகிறது...


ArGu
செப் 10, 2025 14:08

கட்டுமர குடும்ப டெங்கு கொசுக்கள் ரகசியமாக வாழ்த்து கூறி வரும் வேளையில், 200 சோம்பு லிக்கர்ஸ் ஒன்றும் புரியாமல் ஏதேதோ பெனாத்தி கொண்டு திரிவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


புதிய வீடியோ