உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதிகளை மீறி பட்டாசு ஆலைகள் உள்குத்தகை: விபத்துக்கு இதுவே காரணம்

விதிகளை மீறி பட்டாசு ஆலைகள் உள்குத்தகை: விபத்துக்கு இதுவே காரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதிகளில் நாக்பூர், டி.ஆர்.ஓ., மற்றும் சென்னை உரிமம் பெற்ற 1,080 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. ஆலைகளில் எதிர்பாராமல் வெடி, விபத்து ஏற்படுவது இயல்பு. அதில் பெரிய பாதிப்பு இருக்காது.ஆனால், பாதுகாப்பின்றி, விதி மீறல்களுடன் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படும் வெடி விபத்தில் உயிர் பலி ஏற்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qbyerfdd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவற்றுக்கு முக்கிய காரணம் பட்டாசு ஆலைகள் விதிமீறி இயங்கியதே. ஆலை நடத்துவதற்காக உரிமம் பெற்ற ஒருவர், ஆலையை மற்றவருக்கு குத்தகைக்கு விடுவது இயல்பு. இதுவே விதிமீறல் என்ற நிலையில், குத்தகைக்கு எடுத்த நபர் ஆலையில் உள்ள அறைகளை பல்வேறு நபர்களுக்கு தனித்தனியாக உள்குத்தகைக்கு விடுகிறார். இங்கே தான் கூடுதல் விதிமீறல் துவங்குகிறது.உதாரணமாக, நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் குறைந்தது, 40 அறைகள் இருக்கும். இந்த 40 அறைகளுமே வெவ்வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடப்படுகிறது. பட்டாசு தயாரிக்கும் போது, அறையின் அளவை பொறுத்து, அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே இருக்க வேண்டும். மணி மருந்து அலசும் பணி செய்யும் போது, அறையில் அதிகபட்சம் இரு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.ஆனால், உள்குத்தகைக்கு எடுக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில், இந்த விதிகளை பெரும்பாலும் கடைப்பிடிப்பதில்லை. ஏனெனில் உள்குத்தகைக்கு எடுத்த நபர்கள் உற்பத்தியை பெருக்குவதற்காக அதிக ஆட்களை வைத்து, அதிக மருந்துகளை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கின்றனர்.மேலும், ஆலைக்கு உள்ளே மரத்தடியில் பாதுகாப்பின்றி பட்டாசு உற்பத்தி பணி நடக்கிறது. இதுபோல, விதிமீறி உற்பத்தி செய்யப்படும் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தினக்கூலி அதிகமாக கிடைப்பதால், விபத்து ஏற்படும் என சில தொழிலாளர்களுக்கு தெரிந்தும் தவறு செய்கின்றனர்.நேற்று முன்தினம் விருதுநகர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில், ஆறு பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார். இதற்கு முக்கிய காரணம் பட்டாசு ஆலை குத்தகைக்கு விடப்பட்டது தான். 'பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு, உள்குத்தகைக்கு விடக்கூடாது உட்பட 10 விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவேன்' என, ஒவ்வொரு பட்டாசு ஆலை உரிமையாளர்களிடமும் உறுதிமொழி பிரமாண பத்திரம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் ஜெயசீலன், 2024 டிசம்பரில் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இது குறித்து ஆய்வு செய்யாததால், விபத்து தொடர் கதையாக உள்ளது. விபத்து நடைபெறும் போது மட்டும் அல்லாமல், சுழற்சி முறையில் பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தீவிரமாக, நேர்மையாக கள ஆய்வு செய்தால் மட்டுமே, அப்பாவி தொழிலாளர்கள் பலியாவதை தடுக்க முடியும்.

கடந்தாண்டின் கோர விபத்துகள்

மாவட்டத்தில் 2024 ஜனவரியில், பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஆறு பேர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர்.பிப்ரவரியில் மூன்று விபத்துகளில் 12 பேர் பலியாகினர். ஆறு பேர் காயமடைந்தனர். மே மாதத்தில் நடந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்; 14 பேர் காயமடைந்தனர். இதே போல் தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

veeramani
ஜன 06, 2025 09:50

சிவகாசி பட்டாசு தொழில்சாலைகள்.. எந்த ஒரு இந்திய குடிமகனும் விபத்தினால் உயிர்போக கூடாது . ஆனால் சிவகாசி மக்கள், பட்டாசு உரிமம் ஒரு பெயரில் இருக்கும். வேலைகள் செய்வது எவரோ ??? நான் ஒரு சயின்டிஸ்ட்டாக வேலைசெய்தவன். ரசாயன வெடி மருந்துங்கள் சேமிப்பது அரை வட்ட கோலம் போல கட்டிடம் இருத்தல் வேண்டும். எஸ்கிமோக்களின் இக்ளூ வீடு போ ல்...இதனால் அசம்பாவிதம் ஏற்பட்டாலும் கட்டிடம் வெடிப்பதினால் உருவாகும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ளும். உயிர் பாதுகாப்பு உண்டு. கட்டிடங்களில் மரக்கதவு மராஜன்னால் மட்டும் பயன்படுத்தவேண்டும். தீ பிடிக்கும்போது மரம் எரிந்தாலும் ரசாயனம் அழுத்தம் குறையக்கூடும்ம். ஆனால் தற்போது அனைத்து ரூம்களும் இரும்பு கதவுகளும் செங்களினால் உருவாக்கிய செவ்வக முடிவில் ரூம்கள் உள்ளன. இவை மனிதருக்கு பாதுகாப்பு கொடுப்பதேயில்லை. மேலு ஒரு தீ சென்சார் பொருத்தி தண்ணீர் உடன் இணைக்கும் பட்சத்தில் உடனடியாக விபத்து யேற்படவே முடியாது. சிவகாசி காரர்கள் கில்லாடிகள். அவர்களுக்கு பணம் ஒன்றே தேவை. மனித உயிர்களை பற்றி கவலையில்லை


N.Purushothaman
ஜன 06, 2025 09:11

திருட்டு திராவிடம் ஆட்சிக்கு வந்த பின்பு பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை ....தமிழ்நாடு சேப்டி கவுன்சில் என்னதான் செய்யறாங்கன்னு தெரியல.. அபரிதமான மனித வளங்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புக்கள் அதிகரிப்பதுவும் அதை தடுத்திட முனைப்பு காட்டாமல் கடந்து செல்வதுவும் வருத்தமாக உள்ளது. பாதுகப்பற்ற சூழல் நிலவினால் அங்கு பணிகள் தொடர்வதை நிறுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும். பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் பெற்று உள்ள சேப்டி சூபர்வைசர்களை நிறுவனங்கள் பணியில் அமர்த்துவதை அரசு, மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் ..


Svs Yaadum oore
ஜன 06, 2025 07:57

ஆலை நடத்துவதற்காக உரிமம் பெற்ற ஒருவர், ஆலையை மற்றவருக்கு குத்தகைக்கு விடுவது இயல்பாம் .... அது எப்படி இயல்பு ??....இதுவே விதிமீறல் என்ற நிலையில், குத்தகைக்கு எடுத்த நபர் ஆலையில் உள்ள அறைகளை பல்வேறு நபர்களுக்கு தனித்தனியாக உள்குத்தகைக்கு விடுகிறாராம் ...இதெல்லாம் என்ன அக்கிரமம் ??......இந்த உள்குத்தகை , உள்குத்து என்று மொத்தத்திற்கும் காரணம் இங்குள்ள விடியல் திராவிடனுங்கதான் ....ஊழலின் உற்றுக்கண்ணே அவனுங்கதான் .....மனித உயிர்களை பற்றி கவலைப்படாத ஜென்மங்கள் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை