உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லத்தி மரத்தில் நிலா பிறை கொடி; ஹிந்து மக்கள் கட்சி கண்டனம்

கல்லத்தி மரத்தில் நிலா பிறை கொடி; ஹிந்து மக்கள் கட்சி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மலை மேல் உள்ள தலவிருட்சமான கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவிற்காக இஸ்லாமியர்கள் நிலா பிறை கொடியை ஏற்றியதற்கு ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கண்டனம் தெரிவித்தார். அவரது அறிக்கை: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dhbky0xs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் போலீசார் மூலம் தி.மு.க., அரசு தடுத்து நிறுத்தியது. மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட கொடி மரத்தை தர்கா நிர்வாகம் ஏற்றப் போவதை தடுக்க கோரி சில தினங்களுக்கு முன்பு திருமங்கலம் ஆர்.டி.ஓ., கோயில் நிர்வாகம், கோயில் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக மனு அனுப்பியிருந்தோம். திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் கோயில் நிர்வாகம், போலீசார், தர்கா நிர்வாகத்தினர் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். பேச்சுவார்த்தையில் வழக்கம் போல இந்த வருடமும் கல்லத்தி மரத்தில் கொடி ஏற்றலாம் என தர்கா நிர்வாகத்திற்கு ஆர்.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை, ஹிந்து அமைப்புகள், ஊர் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து கூட்டம் நடத்துவது தான் அமைதி கூட்டம். ஆனால் யாரையும் அழைக்காமல் நடத்தியுள்ளனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மரத்தில் வழக்கம் போல் கொடியேற்றலாம் என எதன் அடிப்படையில் ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். கல்லத்தி மரத்தில் தர்கா நிர்வாகம் சார்பில் கொடியேற்றுவதற்கும், கல்லத்தி மரத்தை ஆக்கிரமிப்பதற்கும் துணை போகும் விதமாக ஆர்.டி.ஓ., கோயில் நிர்வாகமும் மறைமுகமாக உடந்தையாக பல ஆண்டுகளாக இருந்துள்ளது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிறது. இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

பாரதி
டிச 23, 2025 12:48

நீதி நேர்மை எதுவும் இல்லாத திமுக கட்சி தலைவர்கள் அனைவர்களும் நாசமாகப் போகட்டும் அவர்களுடைய வருமானத்தில் பங்கு போட்டு சாப்பிட்டு வாழும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அனைவரும் நாசமாக போகட்டும் இந்த திமுக கட்சியினருக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களும் திமுக காரர்களின் குடும்பங்களுக்கு பரிகாரங்களை செய்யும் பிராமணர்கள் ஜோதிடர்கள் மந்திரவாதிகள் தந்திரவாதிகள், எந்திரவாதிகள் அனைவரும் தங்கள் வம்சத்தை வேர் அறுக்கட்டும் அனைவருக்கும் சாபம் விடுகிறோம் இந்த சாபங்களில் இருந்து உங்களுக்கு பரிகாரம் இல்லை நீங்கள் இனி இதிலிருந்து வெளிவர முயற்சி எடுத்தால் இந்த சாபம் இரண்டு மடங்காக உங்களை திருப்பி அடிக்கும் வாழ்த்துக்கள்


Haja Kuthubdeen
டிச 23, 2025 12:39

திருப்பரங்குன்றம் மலை விசயத்தில் இந்த ஒரு வருடமாவே என்ன பிரச்சினை????பிண்ணனியில் யார்....பத்து வருட அம்மா ஆட்சி..அதன்பிறகு 4வருசம் விடியல்.ஒற்றுமையாக இருந்த மக்களுள் பிரட்சனை... விஷமிகளை இறைவன் தண்டிக்கட்டும்.


Suresh
டிச 23, 2025 12:38

திருப்பரங்குன்றத்தின் மீதான கல்லறைகளை கோரிப்பாளையத்திற்கு இடம்பெயரச் செய்வதே ஒரே தீர்வு. பாபர் கல்லறை ஆக்ராவிலிருந்து காபுலிற்கு இடம்பெயர்ந்தது போல. இதற்கு பாஜக ஆட்சி வரவேண்டும்


Rathna
டிச 23, 2025 12:33

1931 இல் ஆங்கிலேயனின் பிரிவிய கவுன்சில் தீர்ப்பு. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகப்பெருமானுக்கு சொந்தம். ஏன் என்றால் ஹிந்து சட்டங்களில் படி ஒவ்வரு கோவில் சொத்துக்களும் அந்த இறைவன் பெயருக்கே சொந்தம். அதை பரம்பரை அறம்காவலர்கள் மட்டுமே நிறைவேற்ற அதிகாரம் உண்டு. அரசாங்க அதிகாரிகளுக்கு அந்த அதிகாரம் இல்லை. கொடி ஏற்றப்பட்டுள்ள மரம் முருகன், காசி விஸ்வநாதர் கோவிலின் தல விருக்ஷமாகும். இஸ்லாமியர்களுக்கு இறந்த நபரின் தர்காவும், அதன் அருகில் உள்ள நெல்லி தோப்பும் மட்டுமே சொந்தம். இறந்த ஆப்கானிய படையெடுப்பாளன் சிக்கந்தர் பாஷா புதைக்கப்பட்டது மதுரை கோரி பாளையத்தில். அப்படி இருக்க, அவனது சமாதி கோவிலுக்கு அருகில் வந்தது எப்படி. வக்ப் நில ஆக்ரமிப்பு டிசைனா?


Sitaraman Munisamy
டிச 23, 2025 12:08

இந்து முன்னணி 144 தடை உத்திரவு போட்டதற்கு கூறிய காரணங்கள் RDO வின் அதிகார துஷ்பிரயோகம் பற்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும்


Rathna
டிச 23, 2025 12:00

உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் உங்கள் வோட்டு மூலம் காண்பியுங்கள். கோவில் உண்டியலில் ஒரு காசு போடாதீர்கள்.


Muralidharan S
டிச 23, 2025 11:36

திராவிஷ பாம்புக்கு பாலூட்டி அதாவது ஓட்டுப்போட்டு வளர்த்துவிட்டு விட்டார்கள் மக்கள்... வரும் தேர்தலில் ஹிந்துக்கள் திராவிஷத்திற்கு வாக்களிக்காமல் இருந்தால் இந்த திராவிஷம் முறியும்.


Ramesh
டிச 23, 2025 11:27

Muslim brothers should refrain from the current political parties politics this and help Hindu people o f their basic rights..


Anand
டிச 23, 2025 10:34

தற்சமயம் தீய சக்தியின் ஆட்டம் அதிகரித்துள்ளது, இன்னும் ஐந்து மாதத்தில் அதன் ஆட்டத்தை முடக்கி அழித்தொழிக்கப்படும்.


R.MURALIKRISHNAN
டிச 23, 2025 10:15

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு ஒருவரும் ஓட்டளிக்க கூடாது


மேலும் செய்திகள்